மூலப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கோவை தொழில் அமைப்புகளின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை தொழில் அமைப்பினர் கிரைண்டர், மோட்டார், பம்பு செட் போன்ற இயந்திரங்களுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மத்திய அரசு விலை பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்ப்டுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் இதை நம்பி இருக்கும் தொழிலாளர்களை காக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறு குறு தொழில் சங்க தலைவர் ஜேம்ஸ் தொழிற்துறையிநர் தொடர்ந்து முடங்கி உள்ளனர். கொரொனாவில் இருந்து மீண்டு வருவதற்குள் எந்த ஒரு முகாந்தரமும் இல்லாமல் தொழிற்துறையை சார்ந்து இருக்கும் அனைத்து மூலப்பொருட்களுக்கும் 30% யில் இருந்து 140% விலை ஏற்றம் செய்யபட்டுவிட்டது.
இதனை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். தங்கத்தின் விலையை விட மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. நாளை தொற்சாலைகள் மூடபட்டால் குறு சிறு தொழிற்துறையினருக்கு ஆடர்கள் வராது. இதனால் கோவை மீண்டும் ஸ்தம்பிக்கும். விலை நிர்ணயத்தை ஆண்டிற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
மூலப்பொருட்கள் இறக்குமதி வரியை முழுமையாக நீக்க வேண்டும். தமிழகத்தில் செய்யப்படும் மூலப்பொருட்கள் ஜி.எஸ்.டி வரியை 5% ஆக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாப் ஆர்டர் செய்யும் தொழில் முனைவோரிக்கு கடன் வழங்க வேண்டும். SAIL (இரும்பு வைப்பு குடோன்) ஆலை, பாலம் கட்டுவதால் மூடப்பட்டது. இதனால் அதை உடனடியாக திறக்க வேண்டும்.
உள் நாட்டிலேயே மூலபொருட்கள் தட்டுபாடு இருப்பதால் இந்திய அரசாங்கம் மூலப்பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும். என்று தெரிவித்தார்.