கோவையில் போக்குவரத்து விதிமீறல் ரூபாய் 4 கோடி அபராதம்..!

டிராபிக்

கோவை, டிசம்பர்16

கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை கோவையில் போக்குவரத்து விதியை மீறிய வாகனங்களுக்கு ரூபாய் 4 கோடி அபராதம்: போக்குவரத்து பிரிவு போலீஸ் அதிகாரி தகவல்.

சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் விதிக்கப்பட்டது

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை உள்ளிட்ட பிரதான சந்திப்புகளில் 70க்கும் மேற்பட்ட தானியங்கி சிக்னல்கள் உள்ளன.

இந்த சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கணினி வாயிலாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோவை போக்குவரத்து பிரிவு போலீஸ் அதிகாரி கூறும்போது கோவை மாநகரிலுள்ள சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் தேசிய தகவல் மையத்தின் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இதனால் விதி மீறலில் ஈடுபடும் வாகனங்களில் எண்கள் சிசிடிவி கேமரா மூலமாக காட்சி ஆக்கப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் வாகனத்தின் உரிமையாளர் விவரங்களை உடனடியாக அறியப்படுகின்றன.

இதனையடுத்து விதி மீறலில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் அவரது வாகனம் ஆர்சி புத்தகத்தில் பதிவு செய்யப்படும் வாகனம் எப்.சி. பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு அவர்கள் வரும்போது சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் அபராதத்தை செலுத்தினால் மட்டுமே பணிகளை மேற்கொள்ள முடியும் ஆர்சி புத்தகத்தில் வாகன உரிமையாளர்கள் தொலைபேசி எண் பதிவு செய்யப்பட்டு இருந்தால் அவர்களுக்கு குறுந்தகவல் மூலமாக அபராதத் தொகை குறித்த விவரம் அனுப்பி வைக்கப்படும்.

விபத்துக்கள் போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட வற்றை தடுக்கும் விதமாக அந்த அவரது நடவடிக்கைகளை கோவையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை 11 மாதங்களில் விதி மீறலில் ஈடுபட்டதாக ரூபாய் 4 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here