கோவையில் முத்துராமலிங்க தேவர் உருவப்படம் அவமதிப்பு..!

முத்துராமலிங்க

முத்துராமலிங்க தேவர் உருவபடத்தை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேர் கைது.

கோவை இராமநாதபுரம் ஒலமப்ஸ் 80 அடி சாலை பகுதியில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பசும்பொன் முத்தராமலிங்க தேவர் உருப படம் வைக்கபட்டது.

தேவர் ஜெயந்தி அன்று மேடைகள் அமைக்கபட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறுவது வழக்கமான நடைபெறும்.அப்போது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேவரின் திருவுருவ படத்திற்காக மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள்.

இந்த கோவிலின் பூசாரியாக சண்முகம் என்பவர் பல வருடங்களாக பூஜை செய்து வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு வழக்கமான பணிகளை முடித்து விட்டு இரவு 8 மணியளவில் கோவில் நடையை சாத்திவிட்டு வீட்டிற்க்கு சென்றுள்ளார்.இன்று காலை அவரது மனைவி கோவில் வளாகத்தை சுத்தம் செய்ய வந்தபோது வளாகத்தின் உள்ளே வைக்கபட்டு இருந்த முத்தராம்லிங்க தேவரின் உருவ படம் கிழிக்கபட்டு இருந்ததை கண்ட அவர் இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்களிடையே தெரிய வர ஏராளமான பொதுமக்களும் தேவர் அமைப்பை சேர்ந்தவர்களும் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதனையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் தேவர் அமைப்பை சேர்ந்த சிலர் உருவபடத்தை கிழித்தவர்கள் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 40ற்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கபட்டனர்.

இந்த பகுதியில் முத்துராமலிங்க தேவர் சிலை அமைக்க வேண்டும் என சுமார் 7 ஆண்டுகளாக கோரிக்கை வைக்கபட்டு வந்த நிலையில் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததின் காரணமாக நிலுவைையில் உள்ள நிலையில் மர்ம நபர்கள் உருவபடத்தை கிழித்து சென்றதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here