கோவையில் ஷாப்பிங் கண்காட்சி ..!

ஜனவரி 09

எதிலும் புதுமை விரும்பும்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி கோவை ரேடிசன் ப்ளூ ஓட்டலில் துவங்கியது.இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள்,வீட்டு அலங்கார பொருட்களுக்கான நூறுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்ப்பட்டுள்ளன.

கோவை வாழ் மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற கோ கிளாம் ஷாப்பிங் திருவிழாவின் 23 வது ஆண்டு ஷாப்பிங் திருவிழா கோவை அவினாசி சாலையில் உள்ள ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் துவங்கியது.இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழாவில் கண்காட்சியை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் உஷா , டாக்டர் சாதனா திருப்பூரைச் சேர்ந்த சமந்தா மற்றும் வாலண்டியர் ஆப் இந்தியா சாரிட்டபிள் சோசியல் டிரஸ்டின் அறங்காவலர் தீப்தி திருப்பூரைச் சேர்ந்த கோமல் உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி ஹீனா மற்றும் ராகுல் ஆகியோர் பேசுகையில்,இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரத்யேகமாக பெண்களுக்கான ஆடை , ஆபரணங்கள் ,குழந்தைகளுக்கான கைவினை பொருட்கள் சிறுவர் , சிருமியர் , பெண்கள் ஆடை அணிகலன்கள் , டெரகோட்டா எனப்படும் கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட அணிகள் , ஜிமிக்கி கம்மல் , வளையல் , போன்றவை இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக பெண்கள் பயன்படுத்தும் அழகுக்கலை பொருட்கள் , சிகை , அலங்கார பொருட்கள் , முக அலங்கார பொருட்கள் , வாசனை திரவியங்கள் ஆகியவற்றிற்கான தனி தனி அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,. இங்கு 100 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here