கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் வெங்காய மொத்த வியாபாரிகள் வேதனை!

எம்.ஜி.ஆர்.மார்க்கெட்டில் போதிய இட வசதி இல்லாததால் இலட்சக்கணக்கான வெங்காயம் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக கோயமுத்தூர் வெங்காய மொத்த வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெட் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினசரி 600 முதல் ஆயிரம் கண் வரை பெரியவெங்காயம் மார்க்கெட்டுக்குள் வந்து பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் போதுமான இடவசதி இல்லாததால் கடந்த

சில தினங்களாக பெய்த மழையால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வெங்காயம் சேதமடைந்துள்ளதாக வெங்காய வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து கோயம்புத்தூர் மாவட்ட வெங்காய மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கடந்த சில மாதங்களாக கோவிட் தொற்று காரணமாக பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது முழுவீச்சில் மார்க்கெட்டில் உள்ள இடத்தில் செயல்பட்டு வருவதாகவும் ஆனால் போதிய இடவசதி இல்லாததால் மழையால் வெங்காயம் சேதமடைந்து வருவதாகவும் குறிப்பாக மார்க்கெட் வளாகத்தில் உள்ள குப்பை கிடங்குக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வசதி கூட வியாபாரம் செய்யும் எங்களுக்கு இல்லை என கூறிய அவர், இதற்கு மாநகராட்சி தலையிட்டு வெங்காய மொத்த வியாபாரிகளுக்கு தேவையான வசதிகளை எம்.ஜி.ஆர்.மார்க்கெட் வளாகத்தில் செய்து தர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here