கோவை சர்வதேச விமான நிலையத்திலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

5

விமானப்படை தளத்தில் ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் எதிரொலியால் கோவை விமான நிலையத்தில் சிறப்பு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தின் மூலமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு மூன்றடுக்கு சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டு இரவு பகலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆதலால் பயணிகள் சிறப்பு சோதனைக்கு பின்பு அனுப்பப்படுகின்றனர். கோவை விமான நிலையத்தில், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில், ‘ட்ரோன்’ மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால், நாடு முழுவதும் படை தளங்கள், விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கோவை சர்வதேச விமான நிலையத்திலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையம் உள்ளே மற்றும் வெளியே செல்லும் அனைத்து வாகனங்களும், ‘மெட்டல் டிடெக்டர்’ மூலம் சோதனை செய்யப்படுகிறது.

விமான நிலைய வளாகம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய தொழிற்பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்தில் இருந்து, 3 கி.மீ., சுற்றளவுக்கு ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.

0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here