கோவை சி.எஸ்.ஆர். நர்சிங் ஹோமில் அதிநவீன ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம்

13

நோய் தொற்று முதல் முறையாக தோன்றி ஓராண்டுக்கும் மேலாகி விட்டது. கடந்து வந்த பாதை, மிகவும் வலி மிகுந்ததாக இருந்தது. சிலரால் போராடி வெல்ல முடிந்தது; பலரால் முடியவில்லை. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. ஒரு கட்டத்தில் படுக்கை வசதியும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் உடனடி கவனத்துக்கு வந்தன. எதிர்பாராத ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தவிர்க்க, சி.எஸ்.ஆர் மருத்துவமனை ஒரு அதிநவீன ஆக்சிஜன் உற்பத்தி கருவியை நிறுவியது. கோவை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் உள்ள கருவிகளில் இது முதன்மையாகும். இது சிஎஸ்ஆர் நல அறக்கட்டளை நன்கொடையாக வழங்கி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. நிமிடத்துக்கு 100 லிட்டர் தயாரிக்கும் இந்த கருவியை செர்ரி பிரிசிஸன் வடிவமைத்துள்ளது. மருத்துவமனைக்கு தேவையான, போதுமான ஆக்சிஜன் இதிலிருந்து பெற முடியும். ஆக்சிஜன் தேவையுள்ள நோயாளிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த அருமையான இயந்திரத்தை தயாரித்து கொடுத்த செர்ரி பிரிசிஸன் நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கருவியை நிறுவியதால் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் தரம் உயர்ந்துள்ளது. ஆக்சிஜன் தேவையுள்ளோருக்கு, வேண்டும் அளவுக்கு எங்களது மருத்துவக்குழுவினர் அளித்து வருகின்றனர்.

இந்த அதிநவீன புதிய ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம், சி.எஸ்.ஆர். மருத்துவமனையில், கோவிட் தொற்று காலத்தில் துவக்கி வைக்கப்பட்டது மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது மிக முக்கியமானது. கோவிட் தொற்று சிகிச்சைக்காக சி.எஸ்.ஆர். நர்சிங் ஹோமில் பணியாற்றிய அனைத்து மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி. மாவட்டத்தில் தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, கட்டுக்குள் கொண்டு வந்த அனைத்து கள பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

சி.எஸ்.ஆர். நர்சிங் ஹோம், காந்திபுரத்தில் 50 படுக்கை வசதிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை. இது மட்டுமின்றி, கோவிட் சிகிச்சைக்கென ராம்நகர் மற்றும் ராமநாதபுரத்தில் இரண்டு தனி சிஎஸ்ஆர் தொற்று நோய் சிறப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், நாங்கள் சுமார் 1000 கோவிட் நோய் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். மாநிலங்களில் மிகச் சில மருத்துவமனைகளிலேயே உள்ள ஆக்சிஜன் உற்பத்தி வசதியை, சி.எஸ்.ஆர். மருத்துவமனைகள் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here