சமூக ஆர்வலர்களா அல்லது தேசவிரோதிகளா?

79

“நானும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன் தான்”, என்று கூறிக்கொள்வது இன்றைய நவீன சமூக ஆர்வலர்களின் பேஷன்.

“என் தாத்தா – பாட்டி விவசாயம் செய்தவர்கள், என் அப்பா விவசாய நிலத்திலேயே இரவு பகல் பாராமல் கிடப்பார். அதனால் விவசாயம் குறித்து பேசுகிறேன்.” என்று கூறுபவர்களும் உண்டு.

நான் பத்து ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறேன். இயற்கை சாண உரங்களையே பயன்படுத்தி வருகிறேன். எவ்வளவு இயற்கை உரம் பயன்படுத்தினால் எவ்வளவு மகசூல் கிடைக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். விவசாய பாடத்தை அனுபவம் மூலமாகவே கற்றுக்கொண்டேன்.

ஆனால், என்னை நானே சுற்றுச்சூழல் ஆர்வலர் என கூறிக்கொள்ள ஒருநாளும் விரும்பியதில்லை.

வெறும் வாய் வார்த்தையால் எதுவும் நடக்காது என்பது எனக்குத் தெரியும்.

விவேகானந்த கேந்திராவில் உள்ள பலர் விவசாயத்தை உயிர்ப்பிக்க எவ்வளவு செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள் என்பது எனக்கு தெரியும். அவர்கள் ஒருநாளும் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள விரும்பியதில்லை.

உப்பு கரிக்கும் என்பது வெறும் சொல்லில் உணர்ந்துவிட முடியாது. நிச்சயம், அதனை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்.

ஆனால் இன்று 22 வயது இளைஞன் கூட சேற்றில் கால் வைக்காமல் வாய் கிழிய விவசாயம் பற்றி பேச மட்டுமே செய்கிறான்.

ஊடகமும் காசு பார்க்க ஆசைப்பட்டுக்கொண்டு இளைஞர்களை இருபத்து நாலு மணி நேரமும் சமூக வலைத்தளத்திலேயே சுற்ற வைத்து அழகு பார்க்கிறது. சர்வதேச ஊடகமும் இதற்கு விதிவிலக்கல்ல என்பது தான் வேதனையான விஷயமே.

ஊடகங்கள் வாசகர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக உலகம் நினைக்கிறது. ஆனால், உண்மை என்னவென்றால், சமூக ஆர்வலர் எனும் பொய் முத்திரையை குத்தி புத்திசாலியாக சித்தரித்து தினந்தினம் முட்டாள் ஆக்கி காசு பார்க்கிறது என்பதே உண்மை.

உலகத்தின் இருட்டு பகுதியில் நின்றுக்கொண்டு சிரித்து நியாயம் பேசுவதால் எவரும் புத்திசாலி ஆகிவிட மாட்டார்கள். இருட்டு பகுதியில் துன்பங்கள் சூழ்ந்திருக்கும் போது எப்படி ஒருவரால் நிம்மதியாக சிரிக்க முடியும்.

இதனை நன்கு அறிந்தவர்கள், இந்த செயல்களில் நிச்சயம் ஈடுபட மாட்டார்கள்.

மேற்கத்திய நாடுகளின் ஆழமான காலனித்துவ கொள்கை தான் இது போன்ற செயல்கள். வரலாறு, இனம், வெறுப்புணர்வு, ஜனநாயகம், மதம், அல்லது சுற்றுச்சூழல் போன்றவற்றில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த இந்த விதிப்படி ‘சுற்றுச்சூழல் ஆர்வலர்’ என்பதை கையில் எடுத்து செயல்படுவர்.

இதனை இந்திய சமூக வலைத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது. டிவிட்டரில் சமூக ஆர்வலர் என கூறிக்கொள்ளும் பலர் இதை உண்மையாக்குகின்றனர்.

இன்று சமூக ஆர்வலர் என தன்னை கூறிக்கொள்ளும் பலர் ஃபேஷனுக்கு 100% முக்கியத்துவம் கொடுப்பது வேடிக்கையான உண்மை. ஃபேஷன் என்பதே செயற்கை தான் என்பதை எப்படி இவர்களுக்கு புரிய வைப்பேன்.

உலகமே இன்று மாறுபட்ட மோதல்களுடன் உலா வருகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர் என சமூக வலைத்தளத்தில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு போராடினாலே, உண்மை தன்மையை ஆராயாமல் கைக்கொடுத்து தூக்க ஒரு கூட்டமே இருக்கிறது.

மேற்கத்திய நாடுகளில் ‘சுற்றுச்சூழல் ஆர்வலர்’ என தன்னை பலர் முத்திரை பதித்துக்கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில், தன்னை சுற்றுச்சூழல் ஆர்வலராக முத்திரை பதித்துக்கொண்டு செயல்படும் பலரும், உயர்ந்த வர்க்கத்தினால் இயக்கப்படுபவர்களே. நாட்டு மக்களின் நலன் மேல் அக்கறை கொண்டவர்களாக காட்டிக் கொள்பவர்கள் தான் ரிசர்வ் செய்யப்பட்ட காடுகளில் தங்களுடைய பங்களாக்களை கட்டிக்கொண்டு சந்தோஷமாக வாழ்கின்றனர்.

இன்றைய நாளில் தன்னை சுற்றுச்சூழல் ஆர்வலர் என அடையாளப்படுத்திக்கொண்டு பிறருக்கு அச்சம் தருபவர்களே அதிகம். இந்தியாவில் நடைபெறும் யாவும் வெளிநாட்டு அரசியல் ஆர்வலர்களால் இவ்வளவு ஆர்வமாக கவனிக்கப்படுவது ஏன் என்ற சந்தேகமும் பலருக்கு எழுந்துள்ளது.

டிரம்பின் அமெரிக்காவிற்கு எதிராக மோடியின் இந்தியா எழுந்து நின்றது. சீனாவிற்கு எதிராக துணிந்து நின்றதை போலவே.

காலநிலை பிரச்சனைகள் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி வெளிப்படுத்திய போதும், இந்தியா பயப்படாமல் ஈட்டியை போல பாய்ந்தது.

2014 முதல் சுற்றுச்சூழலை பாதுகாக்க உண்மையிலேயே முயற்சி செய்த சாமானியர்களுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை வழங்கி அங்கீகரித்து வருகிறத.

உதாரணத்துக்கு துளசி கவுடாவை எடுத்துக்கொள்ளலாம். இவர் கர்நாடகாவின் வனவாசி சமூகத்தை சேர்ந்த பெண் ஆவார். இவரை ‘காடுகளின் மேப்’ என்றும் அழைப்பர். இவர் காடுகளை பற்றிய தகவல் அனைத்தையும் விரல் நுனியில் வைத்துக்கொண்டு சுற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மூலிகை சம்பந்தமாகவும் இவருக்கு எல்லாவும் தெரியும். 106 வயதான சாலுமராடா திம்மாக்கா என்பவர். இவரை ‘விருக்ஷ மாதா (அ) மரங்களின் தாய்’ என அழைப்பர். ஏனென்றால், இவரால் 8000 மரங்களும், 400 ஆல மரங்களும் நடப்பட்டிருக்கிறது.

தரிப்பல்லி ராமையா, இவரை ‘வனஜீவி’ என்றும் அழைப்பர். இவரால் சமூக காடுகள் இயக்கம் மூலமாக 100,000 மரங்கள் நடப்பட்டுள்ளது. இவர்களை எல்லாம் பற்றி பேச யாருக்கும் மனம் வராது.

திசா ரவி போன்ற ஆர்வலர்கள் பற்றி தான் பேசுவார்கள். யார் இந்த திசா ரவி? அக்ரோ – மார்க்கெட்டிங் செய்பவர். பணக்காரர்களுக்காக நிலத்தடி நீரை உறிஞ்சுபவர். பஞ்சாப் மண்ணில் பூச்சிக்கொல்லியை விதைத்தவர். அதிகமான யூரியாவை போட்டு மண்ணில் இருக்கும் உயிர் ஊட்டச்சத்துக்களை அழித்தவர். ஆனால் ஊடகத்தால் அழைக்கப்படுவது, “காலநிலையை காப்பாற்றும் காவலர்”.

‘தி நாவல் சிட்டி ஆஃப் ஜாய்’ 1985-இல் டாமினிக் லெப்பேரால் எழுதப்பட, 1992-இல் திரைப்படம் ஆக்கவும் பட்டது. இது இந்தியாவை மிக மோசமாக சித்தரித்து அதன் மூலம் கிருஸ்தவ மதமாற்றத்திற்கு துணை போகும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் சேரி பகுதிகளில் இருக்கும் மக்கள் வாழ்க்கையில் போராடுகின்றனர். இந்திய மேல்தட்டு வர்க்கமும், உயர் ஜாதி பராமரிப்பும் சுத்தமாக இல்லை. இந்திய மாநிலங்களில் வறுமை தாண்டவமாடுகிறது. இந்திய அரசு இரக்கமற்று மக்களிடம் சுரண்டுகிறது என்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஏன் குழந்தைகள் கடத்திவரப்பட்டு போலீஸ் உதவியுடன் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும் குறிப்பிடபட்டிருந்தது. இப்படி நாட்டை கேவலப்படுத்திய லெப்பேருக்கு 2008 ம் ஆண்டு பத்ம விபூசன் விருதை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வழங்கி கவுரவித்தது.

இந்தியாவில் மனிதாபிமானம் என்பது குறைவு என்று சித்தரித்து, கிருஸ்துவத்தின் ஒளியை பரப்பவும், மேற்கத்திய நாட்டு முதலாளிகளால் அளிக்கப்படும் நிதியை வைத்து தொண்டு என்ற பெயரில் பல்வேறு தேசவிரோத செயல்களில் ஈடுபடவும் தொடர்ந்து சிலர் முயற்சித்து வருகின்றனர்.

இதனை சீர்திருத்தம் செய்ய நினைக்கும் மோடி மீது எப்பேற்பட்ட எதிர்ப்புகள் இருக்கும் என்பதை இதன் மூலமாக நீங்கள் உணர முடியும்.

இது மோடி சம்பந்தப்பட்ட விஷயமல்ல, இது பரந்த அளவிலான நம் தேசம் சம்பந்தப்பட்ட விஷயம். இந்து தர்மத்தை மாற்றியமைக்கும் முயற்சி இது. இந்த அரசாங்கம் உறுதியான சில நல்ல விஷயங்களுக்காக நெருக்கடிகளை தருகிறது. தேசத்தின் நலனை உறுதிப்படுத்த கடுமையாக போராடுகிறது. மேலே குறிப்பிட்டது போன்ற செயல்களுக்கு செக் வைக்கவே மோடி கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறார். அதனால் தான் இவ்வளவு எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

+1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here