சாதிக்கும் இந்திய பெண்கள்.!

செவ்வாய் கிரகத்தை மேலும் ஆய்வு செய்ய அமெரிக்க நாசாவின் விண்கலமான ரோவார் அங்கு தரையிறக்கபடிருக்கின்றது இந்த திட்டத்தில் முக்கிய பங்காற்றிய ஸ்வாதி மோகன் பெங்களூர் பிறப்பு, மிக சிறிய வயதில் அமெரிக்காவில் குடியேறிய அவர் தன் கல்வி ஒன்றால் இந்த மிகபெரிய இடத்தை எட்டியிருக்கின்றார்

அதற்காக இந்தியாவில் அவருக்கு வாய்ப்பு மறுக்கபட்டது என்பதல்ல விஷயம், இங்கும் டெசி தாமஸ் முதல் சந்திராயன் திட்டம் வரை பெண் ராக்கெட் விஞ்ஞானிகள் நிரம்ப உண்டு

உலகில் இப்பொழுதெல்லாம் இந்திய பெண்களின் சாதனை பட்டியல் நீள்கின்றது, அவர்கள் தங்க கல்வியிலும் திறமையிலும் மிளிர்கின்றார்கள் பாரத பண்பாடு அதற்கு வலுசேர்க்கின்றது என்பதுதான் கவனிக்கபடும் விஷயம்

இந்த ரோவர் ஆய்வு கருவி என்பது மற்ற கருவிகளில் இருந்து வேறுபட்டது, இது துளையிடும் இதுவே ஆய்வு செய்து செய்தி அனுப்பும்

அது போக இதில் சிறிய ரக ஹெலிகாப்டர் ஒன்றும் உண்டு அது மேல் பறந்து படங்களை எடுக்கும்

ரோவரின் இயக்கம் ஒரு தரை வண்டு நடமாடும் தன்மையினை கொண்டு உருவாக்கபட்டிருப்பதால் அது கவிழ்வதோ பாறைகளில் முட்டி தடுமாறுவதோ சாத்தியமில்லை

செவ்வாய்க்கும் பூமிக்கும் தூரம் அதிகம் என்பதல்ல விஷயம் , தொலைதொடர்பு எடுக்கும் நேரம்தான் மிக பெரிய சிக்கல்

ஆம் செவ்வாயில் இருந்து ஒரு செய்தி அனுப்பினால் பூமிக்கு அது வர 7 நிமிடமாகும் , இங்கிருந்து கட்டளை பிறப்பித்தால் அது அங்கு சென்று அடைய அதே நேரம் எடுக்கும்

ஆக ஒரு கட்டளை செயல்படுத்தபட கிட்டதட்ட 14 நிமிடம் ஆகும்

மானிட இனம் இன்னும் மிகபெரிய பாய்ச்சலை காட்டினால்தான் வான்வெளியில் மிக பெரிய சாதனைகளை செய்யமுடியும் எனினும் இப்போது இச்சிக்கலை களைய பெரும்பான்மை பணிகளை ரோவர் கலம் பூமி கட்டளையினை எதிர்பாராமல் அதுவே செய்ய செயற்கை அறிவூட்டல் முறையில் உருவாக்கபட்டாயிற்று

முன்பு அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் நடந்த விண்வெளி சண்டை இப்பொழுது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்கின்றது

சீனா இப்படி ஒரு கலனை சனிகிரகத்தில் இறக்க திட்டமிட்டது ஆனால் அவர்களால் முடியவில்லை எனினும் 2030 வாக்கில் சீன கலம் சனி கிரகத்தில் இறங்கலாம்

ஒருவேளை இறங்காவிட்டாலும் இறக்கிவிட்டதாக சொல்வார்கள் மீறி கேட்டால் நீங்கள் போய் தேடி பாருங்கள் எம் கலம் அங்குதான் இருக்கும் என சிரிக்காமல் சொல்வார்கள்

ரோவர் கலம் ஆய்வினை தொடங்கிவிட்டது தமிழக திராவிட நாத்திக கும்பல்களுக்கு தெரியும் ஆனால் தேர்தல் நேரம் என்பதால் கனத்த அமைதி

இல்லாவிட்டால் எப்படி கிளம்புவார்கள் தெரியுமா?

“செவ்வாய் கிரகத்தில் இந்துமத அடையாளம் ஏதும் கண்டெடுக்கபடவில்லை என்பதால் செவ்வாயில் வாழ்ந்த தமிழனுக்கு மதமே இல்லை என்பது உறுதியாகின்றது….”

ஸ்வாதி மோகன் ராக்கெட் உந்துசக்தி எனும் தனி பிரிவில் முத்திரை பதித்து உலக கவனம் பெற்றுவிட்டார், ஸ்வாதி என்றல்ல உலகளவில் பெரும் சாதனை சாதிக்கும் பெண்களை குறிப்பாக இந்திய பெண்களை கவனித்து பாருங்கள் ஒரே ஒரு ஒற்றுமை அவர்களில் இருக்கும்

ஆம், அவர்கள் ஒரு காலமும் ஈரோட்டு ராம்சாமி என வாய்திறந்ததுமில்லை அப்பக்கம் திரும்பி நின்றது கூட இல்லை , ராம்சாமி கண்ட பெண்விடுதலை என அவர்கள் பேசியிருந்தால் இப்பொழுது பெரியார் திடல் பக்கம் நின்று மோடி ஒழிக என கத்துவார்களே தவிர இம்மாதிரி பெரும் சாதனை செய்திருக்கமாட்டார்கள்

ஆக இந்திய பெண்கள் சாதனைகள் செய்ய ஒரே வழி ஈரோட்டு ராம்சாமி கோஷ்டி பக்கமே செல்லாமல் தலை தெறிக்க ஓடிவிடுவது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here