சீனாவை மிரட்டும் ராஜேந்திரசோழன்

ஆடி 18. நதியினை கொண்டாடிய தேசம் நம்முடையது. ஆடி பெருக்கு என்பது நம் தமிழ் சமூகத்தில் மிக முக்கியமான ஒரு பண்டிகை போன்ற கொண்டாட்டங்களை கொண்ட ஒரு நிகழ்வு. அதிலும் காவேரி பாயும் பகுதியில் உள்ள கரைகளில் சாரி சாரியாக மக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் குழுமி தங்கள் இருப்பை…..நன்றியை… நேர்த்திக் கடனாக செலுத்தும் வைபவம் நடக்கும் நாள் இது.
இந்திய அளவில் ஒரு காவேரி கர்ப கால பராமரிப்பு போலும்….மிக முக்கியமானதொரு கண்டுபிடிப்பாக….நமது நாளைய போர் விமானங்களின் இதயமாக செயல்பட தயாராக கொண்டு இருக்கிறது.ராக்கெட் மற்றும் ஏவுகணை தயாரிப்பில் எப்படி க்ரையோஜெனிக் இஞ்சின் நிகரற்ற நமது சொந்த தயாரிப்பாக விளங்கியதோ அதுபோலவே இந்த போர் விமான காவேரி இஞ்சினும் தனது இறுதிக்கட்ட சோதனைகளை வெற்றி கரமாக கடந்த வந்திருக்கிறது.
எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையிலான உந்து சக்தியை அது வெற்றிகரமாக வெளிப்படுத்தியது என்று அறிவித்து இருக்கிறார்கள்…… ஆனால் அதிகார பூர்வமாக இன்னமும் தெரியப்படுத்தவில்லை.
இஃது கிட்டத்தட்ட ஒரு நம் தேசத்தின் ஒரு மைல் கல் சாதனையாகும்.
உலக அளவில் பல கணக்கீடுகளையும்…. மிகப்பெரிய ராணுவ பலத்தையும் அங்கீகரிக்கும் விதமாக மாற்றி அமைக்க போகிறது.
இது மாத்திரம் அல்ல….
இந்தியா தனது தந்திரமான காய் நகர்த்தல் ஒன்றை செய்து அசத்தி இருக்கிறார்கள்…… இங்கு உள்ள பலரும் இது பற்றி எந்த ஒரு முக்கியத்துவம் காட்டாதவகையில் அதே சமயம் சீனாவிற்கு எதிராக நேரிடையான சவால் விட்டு அதிரடித்திருக்கிறார்கள்.
இஃது கிட்டத்தட்ட கடந்த ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினரை நையப் புடைத்து அனுப்பி வைத்த சம்பவத்திற்கு இணையானது.
இந்திய ராணுவ ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது… அதில் கடந்த இரண்டு மாதங்களாக தென் சீனக் கடல் பகுதிகளில் இந்திய கப்பல் படைக்கு சொந்தமான நான்கு கப்பல்கள் கொண்ட தொகுப்பு ஒன்று கடற் பயிற்சியில் அந்த பிராந்தியத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.
நன்கு கவனித்து பார்த்தால் மட்டுமே இதில் உள்ள சூட்சுமம் புரியும்.
அதாவது இந்த பிராந்தியத்தில் பயிற்சிகளை மேற்கொள்ளப்போவதாக அறிவிக்கவில்லை…. இரண்டு மாதங்களாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அறிவித்து இருக்கிறார்கள்…… இது தான் சமாச்சாரம். பாதுகாப்பு காரணங்களுக்காக மறைக்க வேண்டிய சங்கதி என்றால் சொல்லியிருக்கவே போவதில்லை….சரி இதனை ஆரம்பிப்பதற்கு முன்னரே அறிவித்தது இருக்கலாமே என்றால்….. அப்படி யாருக்கும் அறிவித்து விட்டு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இந்திய ராணுவத்தினருக்கு இல்லை என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.
இது தான் அந்த விஷயத்தின் சாராம்சம்.
இந்திய அரசுக்கு அல்லது இந்திய ராணுவத்தினருக்கு தென் சீனக் கடலில் என்ன வேலை…..
கடந்த காலத்தில் இந்திய அரசு ரஷ்ய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நேரிடையாக ரஷ்யாவின் கிழக்கு கோடியில் உள்ள விளாடியாஸ்கோவ் துறைமுகத்தை குத்தகை போலும் எடுத்து மேம்படுத்தவும்… பயன் படுத்தவும் ஒப்பந்தம் செய்து கொண்டு இருக்கிறது. அப்போது இதனை இங்கு இந்தியாவில் உள்ள பலரும் இது என்ன பைத்தியக்காரத்தனமான வேலை என்று ஏகடியம் பேச ஆரம்பித்து இருந்தனர்.
அது தற்போது தான் அதன் நோக்கம் முழுவடிவம் பெற்று வெளியே தெரிய ஆரம்பித்து இருக்கிறது.
இதன் மூலம் சீனாவை நேரிடையாக அதன் பிராந்தியத்தில் வைத்து இந்தியா செக் வைத்து இருக்கிறது.
இனி மற்ற உலக நாடுகளுக்கு இல்லாத தனிப் பட்ட அங்கீகாரம் அல்லது தனிப்பட்ட சர்வதேச சட்ட அனுமதி இந்தியாவிற்கு மட்டுமே என்கிற சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இனி சீனா எந்த ஒரு விதத்திலும் உலகின் மற்ற நாடுகளை இந்த பிராந்தியத்தில் வரக்கூடாது என்று சொல்வது போல் இந்தியாவை சொல்ல முடியாது.
ஒரு வேளை சொல்வதானால்….. தன் நாட்டின் ஊடாக இந்த இடத்திற்கு செல்ல இந்தியாவை அது அனுமதிக்கவேண்டி வரும். இல்லை கடல் பாதையில் இந்திய ராணுவ கப்பல்கள் செல்வதை வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டும்.
இது இரண்டுமே சீனாவை கொதி நிலையில் வைத்திருக்க போகிறது… ஆனாலும் அதனால் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
இது உலக நாடுகளில் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது…… பலர் ஆச்சரியமாக இதனை பார்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இந்தியா அனுப்பி வைத்துள்ள நான்கு கப்பல்களில் ஒன்று நீர் மூழ்கி எதிர்ப்பு ஏவுகணை பொருத்தப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலில் சீனா அத்துமீறி திருட்டு தனமாக தனது நீர் மூழ்கி கப்பலை பல தடவைகள் கொண்டு வந்து போக்கு காட்டி இருக்கிறது. பிடிபட்ட பின் கேள்வி கேட்டால் பாகிஸ்தானுக்கு செல்லும் வழியில் எதேச்சையாக வந்துவிட்டது என்று சொல்லி சமாளித்து விடுவார்கள்.
ஆனால் இந்தியா இந்த விஷயத்தில் சொல்லி அடித்து இருப்பதாகவே பலரும் நினைக்கிறார்கள்.
இங்கு மற்றோர் விஷயமும் பலரது கண்களை உறுத்த ஆரம்பித்து இருக்கிறது. இந்தியா தனித்தனியாக இந்த கடல் நடவடிக்கையில் ஈடுபட்டு அசரடித்திருக்கிறது‌.
ஆனானப்பட்ட அமெரிக்காவே கூட்டு ராணுவ பயிற்சி என்ற பெயரில் தான் இந்த பிராந்தியத்தில் உலா வருகிறது….. கேட்டால் தைவானை … ஜப்பானை… ஆஸ்திரேலியாவை….கைக்காட்டுகிறது. ஆனால் இந்தியா மாத்திரமே தன்னந்தனியாகவே இந்த பகுதியில் அதகளம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.
சரி ஏன் இப்போது அறிவிப்பு செய்து இருக்கிறார்கள். அதிலும் சமாச்சாரம் இருக்கிறது.
வியட்நாம் மக்கள் ராணுவ படையினருக்கு சொந்தமான கடற் படை வீரர்களுக்கு பயிற்சி கொடுக்க போகிறார்கள்….. மலேஷியா ராயல் நேவி படையினருக்கு கூட்டு ராணுவ பயிற்சி கொடுக்க போகிறார்கள். ஆஸ்திரேலியா ராயல் நேவி படையினருடன் சேர்ந்து பயிற்சிகள் செய்யவும்……. ஜப்பான் கடற் படை கப்பல்களுடன் இணைந்து ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடவும் திட்டம் தீட்டி முன்னெடுத்து வருகின்றனர்…. ஆதலால் அறிவிப்பு செய்து இருக்கிறார்கள்.
இங்கு மற்றோர் விஷயமும் கவனிக்க தக்கது.
இதே கடல் பகுதிகளில் தான் ராயல் பிரிட்டிஷ் நேவிக்கு சொந்தமான குயின் எலிசபெத் கப்பல் தனது கடற் படை தொகுதி கப்பலுடன் வந்துகொண்டு இருக்கிறது.
இந்த இடத்தில் இந்தியா மட்டுமே கெத்தாக தலைமை பொறுப்பில் இருந்து செயல்படுவது போல காட்சிகள் அமைந்துள்ளது என்பது தான் இதில் உள்ள விசேஷமே……
சரி…,.
இந்த பிராந்தியத்தில் உலா வரும் நமது நான்கு கப்பல்கள் கொண்ட தொகுப்பை அங்கு அனுப்பிவைக்க தீர்மானித்த நகர்வுக்கு ராஜேந்திர சோழன் என்கிற சங்கேத பெயர் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
ஆகப் பொருத்தமான பெயர் தானே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here