சீர்திருத்த பாதையில் பாரதம் துணிந்து செல்லும் மோடி!

56

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ராஜ்யசபா மற்றும் லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடியின் உரைகள் மிகச்சிறந்ததாக அமைந்தது. அவருடைய பேச்சில் தெரிந்த தெளிவு, சிறந்த தலைவர் அவர் என்பதை நிரூபித்தது.

மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்து அனைத்து தரப்பு விவசாயிகளின் எதிர்காலத்தை உறுதிசெய்ய நினைக்கும் மோடி, விவசாயிகளின் போராட்டத்தை பயன்படுத்தி கலவரத்தை உருவாக்கி அரசுக்கு நெருக்கடி கொடுக்க நினைத்தவர்களை அம்பலப்படுத்தினார்.

போராட்டக்காரர்களை இரு பிரிவாக பிரித்த அவர், ஒரு தரப்பினர் தொழில்முறை போராட்டக்காரர்களாக உள்ளனர் என்பதை வெளிச்சம்போட்டக்காட்டினார். கலவரத்தை தூண்டுபவர்களுக்கு இரக்கம் காட்டப்போவதில்லை என்ற எச்சரிக்கையும் விடுத்தார்.


விவசாய விளை பொருட்களுக்கு எக்காரணம் கொண்டும் குறைந்தபட்ச ஆதரவு விலை திரும்ப பெற மாட்டாது உறுதிப்படுத்திய அவர், தனியார் நிறுவனங்கள் விவசாயிகளை ஏமாற்றுவதை தடுப்பதற்கு உறுதியாக உள்ளதையும் உரையில் வெளிப்படுத்தினார்.

வேளாண் சட்டங்களை எதிர்ப்பதோடு தனியார் நிறுவனங்களுடனான நல்லுறவை சிலர் கேலி செய்வதையும் கடுமையாக விமர்சித்தார் பிரதமர் மோடி. அதானி மற்றும் அம்பானிக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படுவதாக சிலர் குற்றம்சாட்டுவதற்கும் தெளிவான பதிலை அளித்தார்.  “தனியார் நிறுவனங்களுக்கு எதிராக குரல் கொடுத்தால் ஓட்டு வாங்கிவிடலாம் என சிலர் நினைத்து வருகிறார்கள். ஆனால், மக்கள் முன்பு மாதிரி இல்லை. இப்போது தனியார் நிறுவனங்களின் பங்களிப்பையும் பலனையும் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார்கள். அதனால் தனியார் நிறுவனங்களுடனான நல்லுறவுக்கு எதிராக இனிமேல் திட்டம் தீட்டுவதை பார்த்துக்கொண்டு அமைதியாய் இருக்க முடியாது.” என்றார்.

 மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் அதானி, அம்பானிக்கு சாதகமாய் செயல்படுவதாக ஆதாரமற்ற புகார்களை பாராளுமன்றத்தில் வைத்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு இதன் மூலம் மோடி பதிலடி கொடுத்தார்.

பிரதமர் மோடியின் உரையில் குறிப்பிட்டுள்ள இரு அம்சங்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

“செல்வங்கள் உருவாக்கப்படுவதை சந்தேகமாக பார்க்கக்கூடாது. செல்வங்கள் உருவானால் தான் அவற்றை பகிர்ந்தளிக்க முடியும். செல்வந்தர்கள் இருப்பது அத்தியாவசியம் தான். தேசத்திற்காக செல்வங்களை சேர்ப்பவர்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.”

அரசியலிற்காக ஏழ்மையை பற்றி பேசியும், தொழிலதிபர்களை விமர்சித்தும் அரசியல்கட்சிகள், தொழிலதிபர்களிடம் தேர்தல் நிதியை பெறுவதை நிறுத்துவதில்லை.

“பொதுத்துறை நிறுவனங்களை காலத்திற்கு தகுந்தபடி சீரமைப்பது அவசியமாகும். அவற்றை நஷ்டத்திலிருந்து மீட்க வேண்டும். தலைவர்கள் தொழில் நிறுவனங்களை நடத்திவிட முடியுமா? ஒருவர் கலெக்டர் என்றால், அவரால் எப்படி உரத்தொழிற்சாலையை நடத்த முடியும்? எப்படி கெமிக்கல் தொழிற்சாலையை நடத்த முடியும்? எப்படி விமானத்தை இயக்க முடியும்? தேசத்தை பொதுத்துறையை நம்பி மட்டுமே எப்படி வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல முடியும்? இளைஞர்களின் திறமை எப்படி வெளிப்படும்? வேலை வாய்ப்பு எப்படி பெருகும்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு நிர்வாகத்தை சீர்திருத்த வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார். பொதுத்துறைகள் கவனிக்கப்பட முடியாமல் இப்போது இருக்கிறது. இதனால் பணிகளின் துரிதமும் குறைவாகவே இருக்கிறது. தனியார்மயமாக்கல் மூலமாக பொதுத்துறைகளை கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டுவர முடியுமெனவும்  நம் பிரதமர் நம்புகிறார்.

மேலும் அவர் பேசியதாவது, “நம்முடைய பொருளாதார மற்றும் கலாச்சார ஏற்ற வீழ்ச்சியை விவசாயமே முடிவு செய்கிறது. நாம் கொண்டாடும் விழாக்கள் பலவும் விவசாயத்தை சார்ந்தவையே. அதனால் எப்படி வேண்டுமென்றாலும் விவசாயிகளின் எதிர்காலம் போகட்டும் என்று அப்படியே விட்டுவிட முடியாது. ஏதாவது நிச்சயம் செய்தே ஆக வேண்டும். நம்முடைய மக்கள் தொகை பெருகப்பெருக நில பாகப்பிரிவினை அதிகரித்துக்கொண்டு தான் போகும். துறைகளில் சீர்திருத்தம் செய்வதன் மூலமாக விவசாயிகள் பயிரிடுவதற்கு அவர்களே விலை நிர்ணயமும் செய்ய முடியும். நமக்கு உணவு வழங்கும் விவசாயிகளுக்கு மதிப்பு, பொறுப்பு ஆகியவற்றுடன் வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என்றார்.

இந்த முறை லோக்சபாவில் பேசிய பிரதமர் மோடி அவர்களின் பேச்சு அவருடைய ஆழமான  அரசியல் அனுபவத்தையும் பொது அனுபவத்தையும் அங்கிருந்தவர்களுக்கு சிறப்பாக காட்டியது. 2002 ஆம் ஆண்டின் இந்துத்துவ அடையாளாக பார்க்கப்பட்ட அவர், 2007 ஆம் ஆண்டில் வளர்ச்சிக்கான அடையாளமாகவும், 2014 ஆம் ஆண்டில் ஏழ்மையை ஒழிக்கும் அடையாளமாகவும் பார்க்கப்பட்டார்.

2018 தொடக்கம் முதல் கருப்பு பணத்தை ஒழிக்க மோடி போராடி வருகிறார்.

ஜூன் 2018-இல், இந்தியாவின் தொழில் முனைவோரை சந்தித்தார் பிரதமர் மோடி. 2019 தேர்தலுக்கு முன்பான இந்த சந்திப்பில் இந்தியாவின் எதிர்காலம் மீண்டும் உறுதிசெய்யப்பட்டது. 2019 சுதந்திர தின விழாவில் பேசிய திரு. நரேந்திர மோடி, நாட்டின் வளர்ச்சியில் “செல்வந்தர்கள்” பங்களிப்பு குறித்தும் பேசினார். இப்போது சமீபகாலமாக சீர்திருத்தங்கள் செய்வதில் நமது பிரதமர் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

லோக் சபாவில் அவருடைய பேச்சு, “சீர்திருத்தங்களின் பிரச்சாரக்”  நரேந்திர மோடி என்பதை உறுதி செய்துள்ளது. சீர்திருத்தங்கள் செய்வதன் மூலமாக நாட்டின் குடிமகனுக்கு நல்லாட்சியை தர விரும்புகிறார் என்பது தெரிகிறது. இந்த சீர்திருத்தங்கள் 2024-க்குள் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படும் எனில், இந்தியாவின் மிகச்சிறந்த பிரதமராக மோடி அவர்கள் இருப்பார்.

இரண்டாவது பருவத்தின் 27 மாதங்களில் இது சாத்தியம் எனில், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, நரசிம்ம ராவ், அடல் பிஹாரி வாஜ்பாய் போன்ற இந்தியாவின் மாற்றத்துக்கு துணை புரிந்த தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் மோடிக்கும் நிச்சயம் இடமுண்டு.

பாஜகவிற்கு வருவதற்கு முன்பாக 1973 முதல் 1988 வரை ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்த அவர், அதன்பிறகு குஜராத் பாஜகாவின் முக்கிய பங்காற்றினார். அம்மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்றார்.

2014 பிரதமராக பொறுப்பேற்கும் போது, தான் தேசத்தின் பிரதான் சேவக் (தேசத்தின் முதன்மை சேவகன்), இந்த நாட்டையும், இதன் செல்வத்தையும் காப்பேன் என்று உறுதியளித்தை நிறைவேற்றிக் காட்டியுள்ளார். இப்போது பொருளாதாரம் மற்றும் சமூக சீர்த்திருத்ததின் பிரதான பிரச்சாரக்காக வென்று காட்டுவார்.

Source : Swarajya

+2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here