சுயநலமில்லா பொதுநலவாதி கக்கன்..!

22

தாழ்த்தபட்ட மக்கள் உரிமை என பலரை தூண்டிவிட்ட வெள்ளையன் அவர்களுக்கான வாக்குரிமையினை (சொத்து இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது) மட்டும் கொடுக்காமல் தேர்தல் அரசியலை தொடக்கி வைத்தான்
பின்னாளில் வாக்குரிமை வந்த பின்புதான் ஆளாளுக்கு அவர்களை தேடினார்கள், அதுவரை அவர்களை கண்டுகொண்ட நீதிகட்சியோ, திராவிட கட்சியோ எதுவுமில்லை. ஆனால் தாழ்த்தபட்ட மக்களுக்கு வாக்குரிமை இல்லா காலத்திலே அவர்களும் எல்லா உரிமைகளும் பெற வேண்டும் என போராடியவர்களில் ராஜாஜி, வைத்தியநாத அய்யர் போன்ற பிராமணர்களும் உண்டு அதில் முத்துராமலிங்க தேவரும் உறுதுணையாக இருந்தார்.

ராஜாஜிதான் முதலில் எல்லா சாதியும் ஆலயம் நுழைவு சட்டத்தை கொண்டு வந்தார், அதற்கு முன்பே தாழ்த்தபட்டவனுக்கு தண்ணீர் இல்லை என சொன்ன ஊரில் தாழ்த்தபட்டவனை குடிநீர் கொடுக்கும் அதிகாரியாக நியமித்தது அவர்தான்
அந்த ராஜாஜியின் தொடர்ச்சியாகத்தான் தாழ்த்தபட்ட மக்களை முன்னெற்றும் கடப்பாட்டில் காமராஜரும் களம் வந்தார். பரமேஸ்வரன் கக்கன் என பலர் அமைச்சர்களானது அப்படியே தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு காலத்தில் தூய்மையான தியாகிகளும், மக்களை தவிர ஏதும் சிந்தியா மகா உத்தமர்களும் இருந்தார்கள், அப்படியும் ஒரு பொற்காலம் இருந்தது
திமுக அரியணை ஏறும் முன் தமிழக அரசியல் அப்படித்தான் இருந்தது. அப்படி ஒரு குறையும் சொல்லமுடியாத தூய்மையான அரசியல்வாதிகளில் ஒருவர்தான் கக்கன் , சாஸ்திரி, காமராஜரை போலவே மகா தூயவாழ்வு வாழ்ந்த அரசியல் மகான் அவர் சுதந்திரபோராட்ட தியாகி, வெள்ளையனிடம் சிறையில் சித்திரவதை பட்டவர்களில் அவரும் உண்டு, கடுமையான அடிகள் அவை சுதந்திர இந்திய பொதுதேர்தலில் மதுரை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கபட்டவர். பின்னர் காமராஜர் அமைத்த அரசில் அமைச்சரானார்.

அமைச்சர் ஆனாலும் சாதாரண மக்களோடு பேருந்து பயணம், எளிமையான வாழ்வு என்றுதான் இருந்தார். அவருக்கென சொந்த வாகனமில்லை, வீடு கூட இல்லை, அல்லக்கை புடை சூழ அவர் வலம் வரவில்லை மகா எளிமையான வாழ்வினை நாட்டுக்காக வாழ்ந்தார். பொதுபணிதுறை, மின்சார துறை, விவசாயதுறை, காவல்துறை என அந்த காங்கிரஸ் அரசின் எல்லா துறைகளிலும் அமைச்சராக இருந்தும் சல்லி காசு கூட சம்பாதிக்க தெரியாத நேர்மையான அரசியல்வாதி அவர்
அவர் பொதுபணிதுறை அமைச்சராக இருந்தபொழுதுதான் மேட்டூர் அணை உயரம் அதிகரிக்கபட்டது, மணிமுத்தாறு வைகை அணைகள் எல்லாம் கட்டபட்டன‌ அவர் விவசாய அமைச்சராக இருந்தபொழுதுதான் உரங்கள் கிடைக்க வசதி, கூட்டுறவு முறை எல்லாம் கொண்டுவரபட்டது. அவர் காவல்துறை அமைச்சராக இருந்தபொழுது சாதி கலவரங்கள் நேர்மையாக இரும்புகரம்கொண்டு அடக்கபட்டது, சாதி கலவரங்களை தடுக்க உளவு போலிஸ் துறை எல்லாம் உருவாக்கினார்.

மிக பெரும் திட்டங்களை உருவாக்கியவர், பெரும் பதவியில் இருந்தாலும் தன் பிள்ளைகளை அரசு பள்ளியிலே படிக்க வைத்தார், கக்கனின் சிபாரிசில் வேலைக்கு வந்தவர்கள் என்றோ, கக்கனின் சிபாரிசில் தப்பிய குற்றவாளி என்றோ ஒருவனையும் காட்ட முடியாது.அரசியல் தவ வாழ்க்கை வாழ்ந்த மகான் அவர் , அவரைத்தான் எதிர்த்து நின்றன திமுக புலிகள். அதுவும் ராம்சாமி நியாயமாக‌ சொன்னார், “இந்த கக்கனோ காமராஜரோ பிராமணர் இல்லிங்க‌, அவர்களும் தாழ்த்தபட்ட சூத்திரர்கள். நன்றாகத்தான் ஆளுகின்றார்கள். ஏ திமுக அயோக்கிய பயலுகளா அவர்களை ஆளவிடுங்கடா.. உங்கள பற்றி எல்லோரையும் விட எனக்கு நல்லா தெரியும்.” அவர் சொன்னதை எல்லாம் திமுக கேட்கவில்லை.

எங்கு ராம்சாமி பேச்சை கேட்கவேண்டுமோ அங்கு மிக சரியாக காதை பொத்திகொள்பவர்கள் அவர்கள்
1967ல் திராவிட புரட்சியில் கக்கன் தோற்றார், 1971லும் தோற்றார். நாட்டுக்காக, தமிழக மக்களின் நல்வாழ்விற்காக முனிவர் போல உழைத்துகொண்டிருந்த அவர், காமராஜர் போன்றோரை விரட்டிவிட்டுத்தான் திமுக ஆட்சிக்கு வந்தது
அதன் பின் கக்கனை பற்றி செய்தி இல்லை, அவர் பராரி கோலத்தில் சென்னையில் மக்களோடு மக்களாக சுற்றினார். இவ்வளவிற்கும் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த அவர சத்யமூர்த்திபவனும் கைவிட்டது. மிக்க வறுமையில் சிக்கிய அவரை சிவாஜி கணேசன் சந்தித்து கண்ணீர் சிந்தினார், சிவாஜி கஞ்சன் என்பார்கள் ஆனால் செய்ய வேண்டிய இடங்களில் செய்தார்.தனக்கு பரிசாக வந்த தங்க‌ சங்கிலி ஒன்றை ஏலம் விட்டார் சிவாஜி கணேசன் , பணம் குவிந்தது, தன் பணத்தையும் போட்டு வங்கியில் டெப்பாசிட் செய்து கக்கனின் வறுமை போக்க முனைந்தார் சிவாஜி கணேசன்
அந்த மாமனிதனை அன்று தமிழக அரசும் எட்டிபார்க்கவில்லை, நேரு பின்னால் கொடி பிடித்த அவரை இந்திரா அரசும் எட்டிபார்க்கவில்லை, இந்திராவிடம் இப்படியும் ஒரு மேம்போக்கு இருந்தது.

தன்மானத்தில் உயர்ந்துநின்ற கக்கன் அவர்களிடம் கையேந்தவுமில்லை பின்னொருநாள் ராமசந்திரன் முதல்வரான காலத்தில் அரசு மருத்துவமனைக்கு சுற்றிபார்க்க சென்றார், அங்கே ஓர் முதியவர் பாய் விரித்து படுத்திருந்தார், நோய் அவரை படாதபாடு படுத்தியிருந்தது. ராமசந்திரனிடம் அதுதான் கக்கன் என சொன்னார்கள்
தான் சினிமாவில் நடித்துகொண்டிருந்தபொழுது பெரும் அமைச்சராக கோலோச்சியவர் இவரா? அந்த பெருமகனா என மனம் நொந்த ராமசந்திரன் அவரை நல்ல மருத்துவமனையில் சேர்த்தார் எந்த ராமசந்திரன்? மக்களை மயக்க எந்த முகத்தை திமுக பயன்படுத்தியதோ? கக்கன் காமராஜரை வீழ்த்த எந்த ராமசந்திரனை ஒப்பனையிட்டு மக்கள் முன்னால் நிறுத்தியதோ அந்த ராமசந்திரன் நிச்சயம் அன்று ராமசந்திரனின் மனம் கலங்கி இருக்க வேண்டும், இந்த மாமனிதனை என்னை வைத்தா தோற்கடித்தார்கள் என அவர் கலங்கி இருக்க வேண்டும், அப்படி கலங்கினார் என்றுதான் நெருக்கமானவர்கள் சொல்கின்றார்கள் உண்மையில் ராமசந்திரன் அவர் நலம் காக்க போராடினார், ஆனால் இம்மக்களுக்காக உழைத்து பின் அவர்களால் தோற்கடிக்கபட்டு புழுதியில் எறியபட்டு மனதால் செத்திருந்த கக்கன், உடலாலும் பிணமானார்.

14 ஆண்டுகள் அமைச்சராக இருந்தவன் ஒரு பைசா இல்லாமல் அரசு ஆஸ்பத்திரியில் கிழிந்த பாயில் கிடந்த தமிழகத்தில்தான், முதல்வர் வீட்டு வேலைக்காரர்கள் எல்லாம் பல்லாயிரம் கோடி சொத்துக்களோடும், பெரும் பணத்தோடும் பெரும் உல்லாச வாகனங்களில் அலைகின்றார்கள் கக்கனை விரட்டினார்கள் திமுகவினர், இதோ கக்கனின் குடும்பத்து சொத்து என ஒரு செங்கல்லை காட்ட முடியுமா? ஆனால் திமுகவினர் சொத்து மதிப்பு வங்க கடலையும் விட பெரியதாக போகின்றது. இதனை பார்க்கும்பொழுது தமிழகம் நாணத்தால் தலைகுனிகின்றது, எப்படிபட்ட வீழ்ச்சியினை சந்தித்துவிட்டோம் என வெட்கி அழுகின்றது. நேர்மைக்கு அடையாளம் அந்த கக்கன், எளிமையான‌ மக்கட் பணிக்கு பெரும் அடையாளம் அந்த மாமனிதன் அவரை போன்றவர்கள் இனி வரமாட்டார்கள், தமிழக அரசியல் நதி அவ்வளவு சுத்தமான நதியாக ஓடியிருக்கின்றது, அந்த சோலை அவ்வளவு மணமாக இருந்திருக்கின்றது, அந்த விளக்கு அவ்வளவு பிரகாசமாக ஒளிவீசியிருக்கின்றது என கக்கன், காமராஜரின் வரலாறுகள் நமக்கு காட்டுகின்றன‌. இன்று நாறிவிட்ட சாக்கடையாக, கருவாட்டு மூட்டையாக, பெரும் இருளில் சிக்கிவிட்ட அந்த அரசியலில் இருந்து ஓரமாக நின்று அந்த பொற்காலத்தை நினைத்து அழுவோம் தெய்வங்கள் அருள்வழங்கிய அந்த ஆலயத்திலிருந்து அவைகளை விரட்டிவிட்டு சாத்தான்களை குடி வைத்ததற்காய் அழுவோம் அதில் கக்கனுக்காகவும் அழுவோம் , இவர்களை போல உத்தமர்களை அதுவும் தோற்றபின்னும் மறுபடியும் வந்து வாக்கு தாருங்கள் உங்களுக்காக உழைக்கின்றோம் என நின்ற அந்த அப்பாவிகளை விடாமல் துரத்தினோம் என்றால் அந்த பாவத்திற்கு பெரும் தண்டனையும், பெரும் கண்ணீரும் பெற்றுத்தான் தீரவேண்டும்
அதனால்தான் இந்த அழுகை அழவேண்டியிருக்கின்றது தமிழகம், அழுவோம் வாய்விட்டு அழுவோம்
அதில் இந்த அப்பாவி கக்கனுக்காக ஓங்கி அழுவோம்.

கக்கனை போலவே தாழ்த்தபட்டவர்களில் நல்லவர்களை அடையாளம் கண்டு காங்கிரஸ் செய்த மகத்தான வேலையினைத்தான் இப்பொழுது பாஜகவும் செய்து வருகின்றது. ஆம் தேசிய கட்சிதான் இங்கு எந்த சாதி ஆனாலும் இந்தியர் என மிக சரியான இடத்தில் அவர்களை உயர்த்தி வைத்து வழிகாட்டும்
திராவிட சுயநல கட்சியோ, மாநில கட்சிகளோ அதை ஒரு காலமும் செய்யாது, செய்ய தெரியாது. அவர்களின் சுயநல புத்தி அது கக்கனுக்காய் அழும் தமிழகம் அந்த கண்ணீரில் மறுபடியும் தேசியத்தை வளர்க்க முயற்சிக்கட்டும்,
திராவிட கட்சிகள் உள்துறை போன்ற வலுவான அமைச்சர் பதவியில் ஒரு தாழ்த்தபட்டவனை வைத்தார்களா, இல்லை வைத்துவிட்டு அரசியல் செய்யத்தான் முடியுமா? தலித்துகளின் உயர்வும் வாழ்வும் உரிமையும் தேசிய கட்சியில்தான் உண்டு, மாநில கட்சியில் அது கிடைக்காது, திருமா போன்றோரால் ஒரு நன்மையும் விளையாது. இது என்று அவர்களுக்கு புரியுமோ அன்றுதான் அவர்களுக்கு விடிவு இன்று சுதந்திரபோராட்ட தியாகியும், தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு அஸ்திவாரமிட்டவருமான கக்கனின் பிறந்த நாள் காமராஜருக்கு கூட அவரை கொண்டாட கட்சி உண்டு குறைந்தபட்சம் சாதியாவது உண்டு.

இந்த இரண்டுமில்லா துரதிருஷ்டசாலி அந்த கக்கன் 14 வருடம் இம்மாநிலத்தை வளர்க்க அரும்பாடுபட்ட அந்த மகானுக்கு, காவல்துறையின் அமைச்சராக இருந்து சாதித்த அந்த தேசியவாதிக்கு, ஊழலுக்கு அப்பாற்பட்டு ஏழ்மையில் உழன்ற அந்த உத்தமனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள் இங்கு தேவை ஈரோட்டு ராம்சாமி அல்ல, அம்பேத்கர் போன்ற குழப்பவாதிகள் அல்ல, இங்கு தேவை கக்கனை போன்றவர்கள், அந்த உத்தமனை போன்ற தேசியவாதிகள்
அப்படி பலர் உருவாகி வர இந்நாளில் தமிழகம் உறுதி ஏற்கின்றது

+1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here