சுற்றுலா ரயில் ‘விஸ்டாடோம்’ 180 கி.மீ. அதிவேக சோதனை ஓட்டம் வெற்றி-பியூஸ் கோயல்

பியூஸ் கோஅல்

இந்திய ரயில்வே தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்ட சுற்றுலா தளங்களுக்கான பிரத்யேக ரயிலான விஸ்டாடோம் 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு இன்று (டிசம்பர் 29) சோதனை செய்யப்பட்டது.

புதிதாக வடிவமைக்கப்பட்ட விஸ்டாடோம் சுற்றுலா ரயில் பெட்டிகளை 180 கிலோ மீட்டரில் அதிவேகமாக இயக்கும் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில்:

புதிதாக வடிவமைக்கப்பட்ட விஸ்டாடோம் சுற்றுலா ரயில் பெட்டிகளை 180 கிலோ மீட்டரில் அதிவேகமாக இயக்கும் சோதனையை இந்திய ரயில்வே வெற்றிகரமாக முடித்துள்ளது.

இந்த ரயில் பயணம் மறக்க முடியாததாகவும், சுற்றுலா மலை ரயில் சேவைக்கு மேலும் ஊக்கமளிப்பதாகவும் இருக்கும் எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here