சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரத்தின் தூய்மை சேவா நிகழ்ச்சி!

Swach Bharath Gandhi Jeyanthi

கோவை: அக்டோபர் 2, 2020 காந்தி ஜெயந்தியை கொண்டாடும் வண்ணம் சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரம் நேற்று சிங்காநல்லூரில் தூய்மை சேவா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியானது வரதராஜபுரம் ராமாநுஜநகரில் உள்ள தியாகி என்.ஜி. இராமசாமி நினைவு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது.

ஸ்வச் பாரத் நெகிழி இல்லா கோவையை உருவாக்கும் பொருட்டு நடந்த இந்த நிகழ்ச்சியில் RSS ஸ்வயம்சேவகர்கள், சேவாபாரதி அமைப்பினர், ருதம்பர யோகா பவுன்டேஷன், அக்ஷயபாத்திரம் அமைப்பினர், வள்ளிக்கும்மி அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சேவையாற்றினார். தமிழகம் முழுவதும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை விவேகானந்த சேவா கேந்திரம் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பங்கேற்ற அனைவரின் கூட்டு முயற்சியாலும் ஒத்துழைப்பாலும் இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது என்றும் இது போன்ற நாட்டிற்கு நன்மை புரியும் சேவைககளை மேலும் நடத்த இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர் என்றும் ருதம்பர யோகா பவுன்டேஷன் நிறுவனர் மற்றும் யோகா பயிற்சியாளர் திரு. பதாஞ்சலி ஈஸ்வரன் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here