கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று நெட்ஃபிளிக்ஸில் களமிறங்கி இருக்கிறது இப்படம்.
அதிக பணம் கிடைக்கும் என்பதற்காக ஜோஜு ஜார்ஜை அழிக்க, ஜேம்ஸ் காஸ்மோ கும்பலிடம் இணைந்து வேலை பார்க்க மதுரையில் இருந்து லண்டன் செல்கிறார் தனுஷ். அங்கு ஜோஜு ஜார்ஜிடமும் மறைமுகமாக டீல் பேசி வரும் தனுஷ், ஒரு கட்டத்தில் அவருக்கு துரோகம் செய்து அவரை கொல்வதற்கும் காரணமாகிறார்.
அதன் பின் லண்டனில் லிட்டில் மதுரை என்று உருவாக்கி பரோட்டா கடை வைத்து ஐஸ்வர்யா லட்சுமியை காதலித்து சந்தோசமாக வாழ்ந்து வருகிறார் தனுஷ். இந்நிலையில் கொல்லப்பட்ட ஜோஜு ஜார்ஜின் ஆட்களான கலையரசன் உள்ளிட்ட சிலர் தனுஷை துப்பாக்கியால் சுட்டு விடுகின்றனர்.
தனுஷ் சுடப்படுவதற்கு காரணமாக ஐஸ்வர்யா லட்சுமி செயல்படுகிறார். இறுதியில் தனுஷ் உயிர் பிழைத்தாரா? ஐஸ்வர்யா லட்சுமி தனுஷுக்கு எதிராக செயல்பட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
இவை ஒருபுறம் இருந்தாலும், கார்த்திக் சுப்பராஜின் மிகப் பெரிய முயற்சியாக இந்த சினிமாவை பார்க்கலாம். முழுக்க முழுக்க இந்திய எல்லைக்கு வெளியே ஒரு பெரிய பொருட்செலவில் உருவாகி இருக்கும் இந்த சினிமா திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் இன்னுமே நல்ல ரிசல்ட்டை கொடுத்திருக்கும். படத்தின் நீளத்தை கொஞ்சம் அல்ல, ரொம்பவே குறைத்திருக்கலாம்.
குறிப்பாக தனுஷ் துப்பாக்கி எடுத்து வரும் காட்சியில் பின்னணி இசை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா, மதுரை மண்ணின் அழகையும், லண்டன் அழகையும் மாறாமல் படம் பிடித்திருக்கிறது.