‘ஜகமே தந்திரம்’ வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இப்படத்தை ஏற்கனவே ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடந்தன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனுஷ், “தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் எனது ரசிகர்களைப் போல நானும் ‘ஜகமே தந்திரம்’ திரையரங்கில் வெளியாகும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்’’ என்று டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.


தனுஷ் ரசிகர்களும் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டினர். இதையடுத்து ‘ஜகமே தந்திரம்’ படத்தை தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்ததாக கூறப்பட்டது. ஆனால் அதே பட நிறுவனம் தயாரித்த ‘ஏலே’ படம் ஓ.டி.டி.யில் வெளியாவதால் அந்த படத்தை தியேட்டர் அதிபர்கள் திரையிட மறுத்து விட்டனர்.

இந்த மோதல் போக்கினால் ‘ஜகமே தந்திரம்’ படத்தையும் ஓ.டி.டி. தளத்திலேயே வெளியிட தயாரிப்பு தரப்பில் முடிவு செய்துள்ளதாகவும், வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here