ஜம்மு- காஷ்மீரில் காணாமல் போன ராணுவ வீரரை 8 மாதங்களாக தேடும் தந்தை

செய்திப்பிரிவு

Published : 02 Apr 2021 03:12 am

Updated : 02 Apr 2021 06:46 am

 

Published : 02 Apr 2021 03:12 AM
Last Updated : 02 Apr 2021 06:46 AM

பள்ளம் தோண்டி மகனின் உடலைத் தேடும் மன்சூர் அகமது.

நகர்

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர் மன்சூர் அகமது வாகாய். இவரது மகன் ஷகிர் மன்சூர். இவர் எல்லையோர ராணுவ பிரிவில் பணியாற்றினார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணியில் இருந்த போது காஷ்மீர் தீவிரவாதிகளால் கடத்திச்செல்லப்பட்டார். அவரை மீட்கராணுவ அதிகாரிகள் கடும் முயற்சிஎடுத்தனர். ஆனால் அவரை மீட்கமுடியவில்லை. அவர் கடத்தப்பட்ட இடம் அருகே ரத்தக்கறை படிந்த அவரது உடைகள் கண்டெடுக்கப் பட்டன.

இதனால் தந்தை மன்சூர் அகமது அப்பகுதியில் தினந்தோறும் சென்று தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார். இவர் தன்னந்தனியாக அப்பகுதிக்குச் சென்று அப்பகுதியில் பள்ளங்களை வெட்டி அவரது மகனின் உடல் இருக்கிறதா என சோதனை போட்டு வருகிறார்.

இதுகுறித்து மன்சூர் அகமது கூறும்போது, “கடந்த ஆண்டு விடுமுறையில் வந்து மீண்டும் பணிக்குத் திரும்பிய போது ஷகீர் எங்களுக்கு போன் செய்தார். அப்போது தன்னுடைய நண்பர்களுடன் வெளியில் செல்வதாகக் கூறினார். ஆனால் உண்மையில் அவர் கடத்தப்பட்டுளளார் என்பதை பின்னர்தான் அறிந்தோம்.

இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தோம். அதற்கு அடுத்த நாள் மன்சூர் ஷகீர் பயன்படுத்திய வாகனம் குல்காம் பகுதியில் முழுவதும் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அடுத்த வாரம் ஷகீரின் ரத்தக்கறை தோய்ந்த உடைகள் லதுரா பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. அப்போது முதல் நான் என் மகனை தன்னந்தனியாக தேடி வருகிறேன்.

அவன் உடைகள் இருந்த இடத்தில் பள்ளம் தோண்டி உடல் கிடைக்கிறதா என்று தேடினோம். எனது உறவினர்கள் தேடுவதை விட்டுவிட்டனர். பின்னர் நான் மட்டும் தனியாக தேடி வருகிறேன்.

யார் என் மகனை கடத்திக் கொன்றார்கள் என்று எனக்குத் தெரியும். அவர்களை நான் விட மாட்டேன். அங்குள்ள தீவிரவாத அமைப்புகளைத் தேடிச் சென்று என் மகனை புதைத்த இடத்தைக் காட்டுங்கள் என்று கெஞ்சினேன். ஆனால் அவர்கள் உதவவில்லை” என்றார். எனினும் கடந்த 8 மாதங் களாக மனம் தளராமல் உடலை தேடி வருகிறார் மன்சூர்.

இதுகுறித்து போலீஸார் கூறும் போது, ஷகீர் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்து தேடி வருகிறோம். அவர் இறந்ததாக இதுவரை உறுதியாகவில்லை என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here