டில்லி போராட்டக்களத்தில் கூட்டுபலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் பலி! கண்டுகொள்ளாத போலி புரட்சியாளர்கள்!!

பெண்களுக்கு எதிரான கடுமையான குற்றங்கள் நாட்டில் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் பாதிக்கப்பட்டவர் யார், குற்றவாளிகள் யார், சம்பவம் நடந்த மாநிலத்தில் யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதை பொறுத்தே நம் நாட்டில் அந்த விவகாரம் பூதாகரமாக்கப்படுவதோ அல்லது மூடிமறைக்கப்படுவதோ நடக்கிறது.

காஷ்மீரில் சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த கொடுமைக்கு கொந்தளித்த சமூக ஆர்வலர்கள் என்று கூறிக்கொள்பவர்களும், மீடியாக்களும் கேரள மாநிலம் பாலக்காடு அருகே இரு சின்னஞ்சிறு சகோதரிகள் காமக்கொடூரர்களால் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பொங்கவில்லை. காரணம் மாநிலத்தில் நடப்பது மார்க்சிஸ்ட் அரசு. குற்றச்சாட்டப்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள்.
இதுபோன்றே இன்னொரு மிகப்பெரிய சம்பவத்தை ஊடகங்களும், போலி சமூக ஆர்வலர்களாலும் கண்டுக் கொள்ளாமல் கடந்து சென்றுள்ளனர்.

தலைநகர் டில்லியின் எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினர் விவசாய சீர்திருத்தச் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 26.11.2020 அன்று துவங்கிய இந்த போராட்டத்தை கொரானா பெருந்தொற்றின் இரண்டாம் அலை பரவி வரும் நிலையிலும் கைவிடாமல் வறட்டு பிடிவாதத்துடன் தொடர்கின்றனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள நாட்டின் பல மாநிலங்களில் இருந்து பாஜக எதிர்ப்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அவ்வப்போது வந்து செல்கின்றனர். அப்படி மேற்கு வங்கத்திலிருந்து டில்லிக்கு கிசான் சோஷியல் ஆர்மி என்ற அமைப்பைச் சேர்ந்த ஒரு குழுவினர் 10.4.2021 அன்று ரயிலில் கிளம்பினர். அவர்களுடன் 25 வயது பெண்ணும் வந்தார். அப்போது ரயிலில் மற்ற உறுப்பினர்கள் அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லைகளை கொடுத்து வந்ததாக தெரிகிறது. டில்லி திக்ரி எல்லைக்கு வந்து சேர்ந்ததும், போராட்டக்களத்தில் அந்த பெண்ணை 6 பேர் கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

25.4.2021 அன்று அந்த பெண் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஹரியானாவின் பகதூர்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர் சிகிச்சை பலனளிக்காமல் 30.4.2021 அன்று இறந்து போனார்.

இதனிடையே அந்த பெண்ணின் தந்தை 8.5.2021 பகதூர்கர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவமும், டில்லி போராட்டக்களத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தையும் தன் மகள் போனில் தெரிவித்தார் என்றும் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து கிசான் சோசியல் ஆர்மியைச் சேர்ந்த 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கண்டுப்பிடிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு போராட்டக்களத்தில் இளம் பெண் பாலியல்பலாத்காரம் செய்யப்படுவது சாதாரண விஷயமல்ல. ஆனால் இதை ஏதோ சிறு விஷயம் போல ஊடகங்கள் கடந்து சென்றுள்ளன. கிசான் சோசியல் ஆர்மி அமைப்பினரை போராட்டக்களத்திலிருந்து வெளியேற்றுவதாக போராட்டம் நடத்தும் சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவித்துவிட்டு எதுவும் நடவாததைப் போல அமைதியாக உள்ளது.

பஞ்சாப்பில் கொரானா கட்டுக்கடங்காமல் பரவுவதற்கு போராட்டக்குழுவினர் தான் காரணம் என்று பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. சில சுயநல வாதிகள் தங்கள் நலத்திற்காக பலரின் உயிரை பறிக்கும் அவலம் நடந்து வருகிறது. இப்போது அதன் உச்சமாக கூட்டு பலாத்காரம் வரை சென்றுள்ளது. விவசாயிகள் என்ற பெயரில் என்னவேண்டுமானாலும் செய்யலாமா என்பது தான் தற்போதைய கேள்வி!

டில்லி எல்லையில் போராடுபவர்களுக்கு இந்த கிஷான் சோசியல் ஆர்மி அமைப்பினர் தான் தற்காலிக வீடுகளை கட்டிக் கொடுத்தனர். அந்த வீடு ஒன்றில் வைத்தே இளம்பெண பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகராம் வெளியானதும், கிஷான் சோசியல் ஆர்மி கட்டிக் கொடுத்த தற்காலிக வீடுகளை போராட்டக்குழுவினர் அவசர அவசரமாக அகற்றியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here