டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ஐ கியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விற்பனையை பூனேவில் துவங்கி உள்ளது. இதன் விலை ரூ. 1,10,898 ஆன்-ரோடு என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக டிவிஎஸ் ஐ கியூப் ஸ்கூட்டர் டெல்லி மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை நாட்டின் 20 நகரங்களுக்கு நீட்டிக்க திட்டமிட்டுள்ளதாக டிவிஎஸ் மோட்டார் கம்பெனி இந்த ஆண்டு மே மாதத்தில் அறிவித்தது. செயல்திறன் அடிப்படையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெட்ரோல் திறன் கொண்ட 125சிசி வாகனங்களுக்கு இணையாக உள்ளது.
டிவிஎஸ் ஐ கியூப் மாடலில் உள்ள 4.4kW எலெக்ட்ரிக் மோட்டார் 140 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 78 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. இதில் உள்ள பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம்.