டிவிட்டருக்குத் தேவை மாற்று!

1075
+5

சமூக வலைதளமான டிவிட்டர், விதிமுறைகளுக்கு புறம்பாக சமீப காலமாகவே செயல்பட்டு வருகிறது. அமெரிக்க பாராளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு  டொனால்ட் டிரம்ப் டிவிட்டர் பதிவு காரணம் என்று கூறி அதை நீக்கிய டிவிட்டர் நிறுவனம், தற்போது இந்தியாவில் இறையான்மைக்கு எதிராக வன்முறையை தூண்டும் பதிவுகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. 

 #ModiPlanningFarmerGenocide விவசாய இனப்படுகொலைக்கு மோடி திட்டமிடுகிறார் எனும் ஹேஷ் டேக்கை பயன்படுத்தி டிவிட்டரில் 257 கணக்குகள் பொய்யான தகவலையும், வன்முறையை தூண்டும் விதமான பதிவுகளையும் பதிவிட்டு வர, டிவிட்டர் நிறுவனம் வேடிக்கை பார்த்து மட்டுமே வந்தது. அதிர்ச்சியடைந்த இந்திய அரசு , டிவிட்டரை கடுமையாக எச்சரித்தது.

அதன்பிறகு டிவிட்டர் நிறுவனம் இந்த குறிப்பிட்ட கணக்குகளை முடக்குவது போல முடக்கி பாசாங்கு செய்து, மீண்டும் பதிவிட அனுமதித்துள்ளது. அதற்கு, ‘கருத்து சுதந்திரம்’ – ‘செய்தியின் தகுதி’ என்ற வழக்கமான சப்பைக்கட்டும் கட்டுகிறது இந்நிறுவனம். அமெரிக்காவிற்கு ஒரு நியாயம், இந்தியாவிற்கு ஒரு நியாயமா என பலரும் தங்களுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர்.


‘கருத்து சுதந்திரம்’ என்பதற்கான விதியை டிவிட்டர் நிறுவனமே வகுக்கும் எனில், பிறகு எதற்கு நாடும் நாட்டு இறையாண்மை பாதுகாப்பு விதிகளும்? டிவிட்டர் நிறுவனம் தன்னை நடுநிலை என்று நாக்கு கூசாமல் கூறிக்கொண்டு, தரமற்ற பதிவுகளை அனுமதித்து எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி குளிர் காய்வது வழக்கமான ஒன்றாக இப்போதெல்லாம் இருந்து வருகிறது. டிவிட்டர் நிறுவனம் விதிகளை மதிப்பதேயில்லை. சந்தர்ப்பவாத அரசியலை செய்வதற்கு ஆக சிறந்த பிளாட்ஃபார்ம், டிவிட்டர் என்ற நிலையே இன்று காணப்படுகிறது.

அரசாங்கத்தின் எச்சரிக்கையை மீறிய டிவிட்டர் நிறுவனத்தை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மீண்டும் எச்சரித்துள்ளது. அதில், ‘டிவிட்டர் நிறுவனம் விஷமத்தனமான பதிவுகளை இட்ட கணக்குகளை நிரந்தரமாக முடக்காவிட்டால், இதன் அதிகாரிகள், சிறைத்தண்டனை போன்ற கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.’ என எச்சரித்துள்ளது. அதாவது, பிரிவு 69, தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-இன் படி ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை கிடைக்கக்கூடும் என தெரிய வருகிறது.

டிவிட்டர் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி செயல்களுக்கு உறுதுணையாக இருந்து வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப சட்டம், பிரிவு 69 வின்படி:

(1) மத்திய அரசோ மாநில அரசோ அல்லது மத்திய அரசாலோ மாநில அரசாலோ சிறப்பாக நியமிக்கப்பட்ட எந்த ஒரு அதிகாரியும் இந்தியாவின் இறையாண்மை அல்லது ஒருமைப்பாட்டை, இந்தியாவின் பாதுகாப்பை, மாநிலத்தின் பாதுகாப்பை, வெளிநாடுகளுடனான நட்புறவை சீரழிக்கும் எந்த ஒரு குற்றத்தையும் தடுப்பதற்காக விசாரிப்பதற்காக துணைப்பிரிவின் (2) விதிகளுக்கு உட்பட்டு செயல்படலாம். எந்தவொரு தளத்திலும் உருவாக்கப்பட்ட, பெறப்பட்ட, அனுப்பப்பட்ட, சேமிக்கப்பட்ட தகவலையும் கண்காணிக்க, மறைமுகமாக்க, தடுக்க, இடைமறிக்க எந்தவொரு நிறுவனத்தையும் எழுத்து மூலம் பதிய முடியும்.

(2) இந்த செயல்பாடுகளுக்கு மேற்கொள்ளப்படக்கூடிய நடைமுறை மற்றும் பாதுகாப்புகள் பரிந்துரைக்கப்படுபவையே.

(3) சந்தாதாரரோ இடைத்தரகரோ அல்லது அந்த கணினிக்கு பொறுப்பானவரோ துணைப்பிரிவு (1)-இல் குறிப்பிட்டுள்ள எந்தவொரு நிறுவனமும் அழைக்கப்படும்போது கீழ்காணும் அனைத்து வசதிகளையும், தொழில்நுட்ப உதவிகளையும் நீட்டிக்க வேண்டும்.

(4) கம்யூட்டரில் உருவாக்கும், அனுப்பும், பெறும், சேமிக்கும் தகவலை காண அனுமதி வழங்குதல்

(5) தகவல்களில் தலையிடுதல், தகவல்களை கண்காணித்தல், மறைமுகப்படுத்துதல்

(6) கம்யூட்டரில் சேமிக்கப்பட்ட தகவல்களை வழங்குதல்

அரசியலமைப்பின் 19 (2) பிரிவு 1 படி, கருத்து சுதந்திரத்துக்கும் ஒரு வரம்பு உண்டு, மேலும் இந்த விதிப்படி ,

“(1)-இன் உட்பிரிவில் துணை பிரிவு (ச்)-இல், எதுவும் தற்போதுள்ள எந்தவொரு சட்டத்தின் செயல்பாட்டையும் பாதிக்காது. அதேபோல எந்தவொரு சட்டத்தையும் உருவாக்குவதை தடுக்காது. இது போன்ற சட்டம் இந்தியாவின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் காப்பதற்கும், இந்தியாவின் பாதுகாப்புக்காகவும், வெளிநாடுகளுடன் நல்லுறவை பேணுவதற்கும், பொது அமைதியை காக்கவும், ஒழுங்கை நிலைநாட்டவும், நீதிமன்றத்தை அவமதிக்காமல் இருக்கும் பொருட்டும், அவதூறு செய்வதைத் தடுக்கவும், குற்றச் செயலைத் தூண்டாமல் தடுக்கவும் விதிக்கப்பட்ட சட்டமாகும்.

ஒருவேளை டிவிட்டர் நிறுவனம் இந்தியாவில் இயங்கி இது போன்ற செயல்பாடுகள் நடந்திருந்தால், இந்தியாவின் இறையாண்மை விதிப்படி, கருத்து சுதந்திரம் என சொல்லி எந்த போலி ட்வீட்டையும் போட முடியாது. இதை தான் டொனால்ட் டிரம்ப் டிவிட்டர் கணக்கை முடக்க அந்நிறுவனம் செய்தது. அதிலும் டிரம்ப் ஆட்சி முடிவுக்கு  வந்ததுமே அவர் கணக்கை முடக்க யோசிக்கவில்லை அந்த நிறுவனம். அமெரிக்க அரசியலமைப்பையும் பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது கேள்வி என்னவென்றால்: டிவிட்டர் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் தளம், இந்தியாவின் சட்டங்களை ஏன் மீறுகிறது? என்பது தான்.

பெரும்பாலும் இந்திய பிரதமரும் சரி, பாரதிய ஜனதா கட்சியும் சரி, செய்தியை பதிவு செய்ய டிவிட்டர் கணக்கை பயன்படுத்துகிறது. குறிப்பாக நமது பாரத பிரதமர் கணக்கை மட்டும் 65.3 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். நமது பிரதமரும் அவருடைய ஆதரவாளர்களும் ஒரு ட்வீட் போட்டால் அதனை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என இந்துக்களுக்கு எதிரானவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என ட்வீட் வைரலாகிறது. இதனாலயே டிவிட்டர் நிறுவனம் இவ்வாறான போலி கணக்குகளையும் பதிவுகளையும் தொடர்ந்து ஆதரித்து அதன் மூலமாக லாபம் ஈட்டுகிறது என்ற குற்றச்சாட்டும் தற்போது எழுந்துள்ளது.

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு, நமக்குத் தேவையான சமூக வலைதளங்களை நமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். 130 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவை நம்பியே பெரும்பாலான சமூக வலைதளங்கள் உள்ளன. இந்தியாவில் மைக்ரோ பிளாக்கிங் தளத்தையும், பிற தளத்தையும் உருவாக்க பிரதமர் திட்டமிட வேண்டுமென்பதே இந்தியர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்தியாவில் உருவாக்கப்படும்போது அது நிச்சயம் இந்திய சட்டங்களை மீறாது. இது இந்தியாவின் வளர்ச்சியை தங்கு தடையின்றி முன்னெடுத்து செல்வதோடு, அந்நிய கைக்கூலி சமூக வலைதளங்களுக்கு முடிவுரை எழுதும்.

Source : Swrajya

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here