ட்விட்டரில் இன்று #ThankYouPMModi எனும் ஹாஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது…

இன்வெஸ்ட் ஐந்திணை

ட்விட்டரில் இன்று #ThankYouPMModi எனும் ஹாஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதன் கீழ் ஆயிரக்கணக்கான ட்விட்டர் பயனர்கள், ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு அங்கீகாரம் பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டு வருகின்றனர்.

முன்னதாக நேற்று, ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் மேம்பாட்டு மாநாடு (யுஎன்சிடிஏடி) ஐக்கிய நாடுகளின் முதலீட்டு ஊக்குவிப்பு விருது 2020’இன் வெற்றியாளராக இன்வெஸ்ட் இந்தியாவை அறிவித்தது.

முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனங்களின் செயல்திறனைக் கண்காணித்து உலகளாவியதை அடையாளம் காணும் ஐநா அமைப்பு யு.என்.சி.டி.டி ஆகும். ஜெர்மனி, தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவை இந்த விருதை கடந்த காலங்களில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது உலகின் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனங்களின் சிறந்த சாதனைகளை அங்கீகரித்து கொண்டாடுகிறது.

உலகெங்கிலும் உள்ள 180 தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு முகவர் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட பணிகளை யுஎன்சிடிஏடி மதிப்பீடு செய்ததன் அடிப்படையில் இந்த புகழ்மிக்க விருது இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சாதனை குறித்து இன்வெஸ்ட் இந்தியாவின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீபக் பாக்லா கூறுகையில், “இது இந்தியாவை விருப்பமான முதலீட்டு இடமாக மாற்றுவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கை மற்றும் செயல்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும். அரசாங்கத்திற்குள் சிறந்து விளங்குவதில் அவர் கவனம் செலுத்துவதற்கு இது சான்றாகும்.” எனத் தெரிவித்தார்.

கொரோனா தொற்றுநோயை இந்திய அரசு திறம்பட நிர்வகிப்பதையும் இந்த விருது அங்கீகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.

2020 ஐக்கிய நாடுகளின் முதலீட்டு ஊக்குவிப்பு விருதை வென்ற இன்வெஸ்ட் இந்தியாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை உலகின் விருப்பமான முதலீட்டு இடமாக மாற்றுவதற்கும், வணிகத்தை எளிதாக்குவதற்கும் எங்கள் அரசாங்கம் கவனம் செலுத்துவதற்கு இது ஒரு சான்று” என்று பிரதமர் இது குறித்த தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here