தங்க கடத்தல் விவகாரம் கேரள மார்க்சிஸ்ட் அரசுக்கு பின்னடைவு!

102

ஜனநாயகம், கருத்து சுதந்திரம், பெண்ணுரிமை என பல்வேறு சமூக விவகாரங்களில் மற்றவர்களுக்கு ஒரு நிலைப்பாடு, தனக்கு ஒரு நிலைப்பாடு என்பதே கம்யூனிஸ்ட்டுகளின் ஒரே கொள்கை. தமிழகத்தில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கு விவகாரங்களில் ஆளுங்கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாதர் சங்கத்தினர், காஷ்மீரில் சிறுமி கொல்லப்பட்டதற்கு விதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் இடதுசாரி மனித உரிமை ஆர்வலர்கள், பாலக்காட்டில் இரு பட்டியலின சிறுமிகளை பாலியல் பாலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு எதிராக இதுவரை வாய் திறந்ததில்லை. காரணம் குற்றவாளிகள் என பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாயார் கைகாட்டுவது மார்க்சிஸ்ட் கட்சியினரை. முன்னாள் இடதுசாரியான சந்திரசேகரை கொலை செய்ததற்கு நீதி கேட்டு அவரது மனைவியும், தன் குழந்தைகள் கொன்றதற்கு நீதி கேட்டு அப்பாவி தாயும் நடத்தி வரும் போராட்டம் இவர்களின் காதுகளை எட்டவே எட்டாது.

தப்பு செய்துவிட்டு, அதிலிருந்து தப்பிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதே இடதுசாரிகளின் வரலாறு. கேரளாவில் நடந்த தங்க கடத்தல் வழக்கு கடந்த ஆண்டில் கேரளாவை உலுக்கியது. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பிடிபட்ட 14.82 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம், முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகத்தை நோக்கி கைகாட்டியது.

முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலர் சிவசங்கர், கேரள ஐடி துறையில் பணியாற்றி, பினராய் விஜயனுடன் பல விழாக்களில் கலந்து கொண்டவரும், சிவசங்கரின் தோழியுமான ஸ்வப்னா சுரேஷ் ஆகியோர் இந்த தங்க கடத்தலில் கைதானார்கள். என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறையினர் இந்த கடத்தல் வழக்கை விசாரித்து வருகின்றனர்.

வழக்கு விசாரணையின் போது ஸ்வப்னாசுரேஷ், கடத்தலில் பினராயி விஜயனுக்கு தொடர்பிருப்பதாக கூறியதாக தெரிகிறது. இதனால் பதறிப்போன கேரள காவல்துறை, நாட்டிலேயே முதல்முறையாக அமலாக்கத்துறையினர் மீதே வழக்குப்பதிவு செய்து தன் விசுவாசத்தை பினராயி விஜயனுக்கு காட்டியது. ஸ்வப்னா சுரேஷை முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் நிர்பந்தம் கொடுத்ததாகவும், அதை விசாரணையின் போது உடனிருந்த கேரள பெண் போலீசார் உறுதி செய்வதாகவும் கேரள காவல்துறையினர் கூறினர்.

இதை எதிர்த்து அமலாக்கத்துறையினர் கேரள உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். அப்போது, முக்கிய ஆதாரங்களை சீலிடப்பட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறையினர் மீது பதியப்பட்ட இரு முதல் தகவல் அறிக்கைகளையும்(எப்ஐஆர்) ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது கேரளாவின் ஆளும் மார்க்சிஸ்ட் அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆதாரத்தில், முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான வலுவான குற்றச்சாட்டு இருக்க வாய்ப்புள்ளதாகவும், ஒருவேளை மீண்டும் கேரளாவில் மார்க்சிஸ்ட் ஆட்சி அமைந்தாலும், முதல்வர் பதவியில் பினராயி விஜயன் நீடிப்பது சிரமம் என்றும் சட்டவல்லுனர்கள் கூறுகின்றனர்.

உப்பை தின்றவன் தண்ணீர் குடித்து தான் தீரவேண்டும்.

+2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here