தனியார் சார்பில் நடத்தப்பட்ட கூடைப்பந்து போட்டிகள் பார்வையாளர்கள் வெகுவாக கவர்ந்தது.

8

கோவையில் ஆலயம் அறக்கட்டளை மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் சார்பில கூடைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது இதில் அணிக்கு தலா 3 பேர் என்ற வீதம் நடைபெற்ற இப்போட்டியில் 10 வயது முதல் 50 ஐ அம் வயதினருக்கு நடத்தப்பட்டது

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆலயம் அறக்கட்டளை நிறுவனரும் பாரா ஒலிம்பிக் தமிழகத்தின் தலைவருமான சந்திரசேகர் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கான கூடைப்பந்து போட்டியினை கண்டுகளித்ததுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தக்கூடிய இரு சக்கர நாற்காலி பரிசாக அளித்தார்.

சிறு வயதினர் முதல் பெரியவர் வரை கலந்துகொண்ட இந்த கூடைப்பந்து போட்டிகளில் இறுதிப் போட்டியில் வென்றவர்களுக்கு ராகா ஆயில் நிறுவனத்தின் தலைவர் தமிழ்மணி பரிசுகளை வழங்கினார்.

கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் போட்டிகளில் சுமார் 150க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துள்ளது குறிப்பிடத்தக்கது

0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here