தமிழகத்தில் 143 சமூகத்தினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக உள்ளனர்

கோவை, டிசம்பர் 16

பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் பொருட்டு 143 பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் இணைந்து கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளன.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் என வகைப்படுத்தப்பட்டுள்ள 143 சமூகத்தினரை ஒன்றைனைத்து கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் காவல் துறையினர், முன்னாள் அரசு அதிகாரிகள், வழக்கஞர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் ஒன்றிணைந்து பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கான கூட்டமைப்பு என்ற அமைப்பை துவங்கியுள்ளனர்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று நடைபெற்றது. அப்போது கூட்டமைப்பை சேர்ந்தவரும், முன்னாள் காவல்துறை அதிகாரியுமான ரத்தினசபாபதி கூறியதாவது:

தமிழகத்தில் 143 சமூகத்தினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக உள்ளனர்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் அவர்களுக்கான உரிமைகளை இழந்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த அமைப்பும் இழந்த உரிமையை மீட்டெடுக்க குரலை உயர்த்தவில்லை.

இதனால் இளைஞர்கள், மற்றும் மாணவர்கள் அவர்களுக்கான உரிமையை இழந்துவிடுவார்கள்.

இதனால் தான் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

இந்த அமைப்பு முற்றிலும் அரசியல் சார்பு இல்லாத அமைப்பு. 143 சமுதாயத்தின் ஒரே குரலாகத்தான் இந்த அமைப்பு இருக்கும். எவ்வித கருத்து வேற்றுமைக்கும் இடமின்றி உழைப்போம்.

இட ஒதுக்கீட்டை தாண்டி பல சமூகத்திற்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது.

இது அரசியல் கட்சியாக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை.

பொருளாதரத்தில் நலிவடைந்த உயர்சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது கொடுக்கின்றனர். இதனாலும் பாதிப்பு ஏற்படுகிறது.

பிற்படுத்தப்பட்ட அனைத்து வகுப்பினரையும் ஒன்றிணைத்து முதல் கூட்டம் ஒன்றை வரும் 18ம் தேதி கோவையில் நடத்த உள்ளோம். இதில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த உள்ளோம்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் அமைப்பை சேர்ந்த வெள்ளியங்கிரி, ஜனகராஜன், சுந்தராஜன், தம்பு மற்றும் வழக்கறிஞர்கள் அருணாச்சலம், திரு ஞானசம்மந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here