தற்கொலை என்பது கோழைகளின் முடிவு..! நடிகர் விவேக்

9

கோவை, டிசம்பர் 10

நடிகர், நடிகைகள் மட்டுமல்ல யாருமே தற்கொலை செய்ய கூடாது. தற்கொலை கோழைகள் எடுக்கும் முடிவு என தெரிவித்தார். மக்களில் 90% பேருக்கு எப்போதாவது இந்த தற்கொலை என்னும் தொன்றியிருக்கும் ஆனால் அதை நாம் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

ரஜினி , கமல் அரசியலுக்கு வருவது பொதுமக்களின் ஒருவனாக இருந்து பார்ப்பேன்‌ நடிகர் விவேக்

ஓ.டி.டி திடீர் மழை போல, மக்கள் திரையரங்கையே விரும்புவார்கள் என கோவையில் நடந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசை வனம் துவக்க விழாவிற்கு வந்த நடிகர் விவேக் தெரிவித்தார்.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக கோவை பச்சாபாளையம் பகுதியில் சிறுதுளி அமைப்பு மற்றும் பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி சார்பில் 74 மரங்கள் நடவு செய்யும் இசை வனம் அமைக்கும் பணி இன்று துவங்கியது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விவேக் இசை வனத்தில் மரக்கன்றுகளை நடவு செய்து பணிகளை துவங்கி வைத்தார். பின்னார் செய்தியாளர்களுடம் பேசிய அவர் மரக்கன்றுகளை நடவு செய்தவர்கள் மட்டுமல்ல அனைவரும் மரங்களை பராமரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் ஓ.டி.டி தளங்கள் திடிர் மழை போல், வீட்டில் எப்போதும் படங்களை பார்க்க மாட்டார்கள், மக்கள் திரையரங்கு செல்வதை தான் விரும்பவார்கள் என தெரிவித்தார்.

ரஜினி, கமல் அரசியல் வருகை தருவதை பொதுமக்களின் ஒருவனாக இருந்து பார்ப்பேன் . மக்கள் விரும்புவர்களுக்கே ஆதரவு என தெரிவித்தார். மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக முதல் முறையாக கோவையில் இசை வனம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இசை கருவிகள் தயாரிக்க பயன்படுத்தும் மரங்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. அவர் உடல் மறைந்தாலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.

0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here