தாமரை சூரியனின் மனைவியா?

பண்டைக்காலத்திலேயே மக்கள் கூறி வருவது தாமரை சூரியனின் மனைவி என்று தான். இப்போது பலர் இதை விசுவாசித்து வருகின்றனர்.

இப்படிக் கருத்திலுள்ள தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கு உட்படும் போது தாமரையிலுள்ள கோசங்களில் சில மாற்றங்கள் உண்டாகுகின்றன.

இவ்வகை மாற்றங்கள் தாமரையில் மட்டுமல்ல மற்ற மலர்களிலும் காணப்ப்படும் என்றாலும் நாம் அவற்றை சரியாகக் கவனிப்பதில்லை. சூரியன் உதிப்பதற்கும் மறைவதற்கும் ஏற்றவாறு தாமரையில் வெளிப்புறத்தில் நிகழும் மாறுதல்களை நித்திராசலனம் என்று சாஸ்திரம் கூறுகிறது.

அதிகாலையில் சூரிய ஒளி படியும் போது தாமரை விரிகின்றது. அதாவது தாமரையை இயக்குவது சூரிய ஒளி என்பது பொருள். சூரிய ஒளி காலையில் தாமரை மொட்டில்ப்படும் போது அதனுள் இருக்கும் கோச பாகங்கள் விரிவடைகின்றன. இதனால் பூ இதழ்களின் விறைப்பு அதிகரித்து பூ விரிகின்றது.

மாலை நேரம் மேல் கூறிய கோச பாகங்கள் எதிர் திசையில் விரிவடைகின்றன. ஏனென்றால் இதன் சுற்றிலுமுள்ள கோசங்களிலிருந்து நீர் உறிஞ்சி எடுக்கின்றது. விளைவாக பூ சுருங்குகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here