திட்டமிட்டு பரப்பப்பட்டதா கொரோனா வைரஸ்? வூகானில் 2020 நடந்த சம்பவம் அம்பலமானதால் சந்தேகம்…

65

பதிவுச்சுருக்கம்

  • சீனாவில் 2020 பிப்ரவரி மாதமே ஒருவர் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளார்.
  • இவர் காப்புரிமை விண்ணப்பித்த சில மாதங்களிலேயே மர்மமான முறையில் இறந்துவிட்டார்.
  • சீனாவில் உள்ள வூகான் வைராலஜி இன்ஸ்டிடியூட் சீன ராணுவத்துடன் சேர்ந்து ரகசிய ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டதாக அமெரிக்கா சந்தேகிக்கிறது.

கொரோனா வைரஸ் இன்று உலகை முழுவதும் பரவி பணக்காரர்கள், ஏழைகள், நல்லவர்கள், கெட்டவர்கள், என யாரையும் விட்டுவைக்காமல் தாக்கி வருகிறது. இந்த வைரஸ் பரவாதே நாடே உலகில் இல்லை என சொல்லலாம். இப்படி உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவியதால் மக்கள் தங்கள் அன்றாட பணிகளை கூட பார்க்க முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒருவருக்கு ஒருவர் ஏற்படமும் தொடர்பு மூலமே இந்த வைரஸ் பரவுவதால் மக்கள் வெளியில் வராமல் இருக்க அரசாங்கம் ஊரடங்கை பிறப்பித்துள்ளது.

இப்படி மனித இனத்திற்கே பெரும் எதிரியாக உருவெடுத்துள்ள இந்த கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவின் வூகான் மாகாணத்தில் தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது அந்நாட்டில் உள்ள சிலருக்கு இந்த வைரஸ் தாக்கப்பட்டது தெரியவந்ததும் அனைத்து நாடுகளும் வேக வேகமாக அந்நாட்டிலிருந்து யாரையும் தங்கள் நாங்கள் வர பல நாடுகள் தடை விதித்தன. ஆனால் வைரஸ் அதை விட வேகமாக செயல்பட்டு உலக நாடுகள் இந்த கெரோனாவை அறிய துவங்கும்முன்பே உலக நாடுகளுக்கு பரவி விட்டது.

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டறியப்பட்டார். பின்னர் அவர் குறித்த பின்னணியை அறிந்து அவருடன் தொடர்பிலிருந்தவர்களை தனிமை படுத்தினர், இருந்தாலும் கொரோனா வைரஸ் பரவல் யாரும் எதிர்பாராததை விட வேகமாக இருந்தது.

2020 மாதம் ஜனவரி இறுதியில் தான் இந்த வைரஸ் இந்தியாவிற்குள் வந்திருந்தாலும் அதன் பரவில் மிக வேகமாக இருந்தது. மார்ச் மாதம் இந்த கொரோனா வைரஸ் PANDAMIC ஆக உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததிலிருந்து உலக நாடுகள் எல்லாம் பரவலை கட்டுப்படுத்த லாக்டவுனை அறிவித்தனர்.

நல்லவேலையாக உலக சுகாதார மையம் இந்த வைரஸ் குறித்த ஆபத்தை முன்பே உணர்ந்துவிட்டது. உலகா சுகாதார மையம் விடுத்த எச்சரிக்கையை உலக நாடுகள் மிகச்சரியாக புரிந்த கொண்டனர். இவை எல்லாம் சில வாரங்களில் நடக்கவும் கிட்டத்தட்ட உலகமே லாக்டவுனிற்குள் சென்றுவிட்டது. அதன் காரணமாக இந்த உலகம பெரும் ஆபத்திலிருந்து தப்பித்தது என சொல்லலாம்.

உலக சுகாதார மையம் இந்த வைரஸ் குறித்த அபத்தை சரியாக கணிக்காமல் விட்டிருந்தாலோ அல்லது உலக சுகாதார மையத்தின் எச்சரிக்கையை உலக நாடுகள் அசால்டாக எடுத்திருந்தாலோ இன்று உலகில் உள்ள மக்கள் தொகை பாதிக்கும் கீழாக சென்றிருக்கும் என சொன்னால் அது மிகை அல்ல.

இப்படி உலகையே வாட்டி வதைத்து வரும் கொரோனா வைரஸ் ஒரு இயற்கை பேரழிவு என பலர் சொன்னாலும், சிலர் இது சீனா திட்டமிட்டு பரப்பிய வைரஸ் எனவும் சிலர் சொல்லுகின்றனர். ஒரு வைரஸ் ஒரு குறிப்பிட்ட நாட்டில் உருவாகி அது உலகம் முழவதும் பரவியதற்காக ஒரு நாட்டை குறை சொல்ல முடியாது என்றாலும் சீனாவில் நடக்கும் சில விஷயங்கள் ஒரு வேளை இது சினர்கள் செய்த சதியாக இருக்குமோ என நம்மை நம்ப வைக்கிறது.

சமீபத்தில் தீ வீக்கென்ட் ஆஸ்திரேலியன் என்ற ஊடகம் ஒரு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி Zhou Yusen என்ற சீனாவை சேர்ந்த பீப்புள் லிபரேஷன் ஆர்மி யின் ராணுவ விஞ்ஞானியான இவர் வூகான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைரலாகி மற்றும் அமெரிக்க அறிஞர்களுடன் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 24 பிப்ரவரி 2020 ஆண்டு பெயரிடப்படாத ஒரு கொரோனா தடுப்பு மருந்திற்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

2020 பிப்ரவரி மாதம் என்பது உலகில் கொரேனா பரவில் துவங்கிய காலம் இந்த காலத்தில் உலகில் மற்ற விஞ்ஞானிகள் எல்லாம் கொரானா வைரஸில் தன்மையே தெரியாமல் இருந்தனர். இதற்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு தற்போது சாத்தியமே இல்லை என மருத்துவர்கள் சொன்ன காலகட்டம் அது. உலகில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருந்த காலகட்டம்.

இந்த நேரத்தில் அவர் தான் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டேன் அந்த மருந்திற்கான காப்புரிமை வேண்டும் என அவர் விண்ணப்பித்த நிலையில் அவர் அடுத்த சில மாதங்களில் அதாவது 2020 மே மாதம் மர்மமான முறையில் இறந்து போனார். ஆனால் அவர் இறந்து போனதை அறிவிப்பதிலும் சீனா பெரும் குழப்பம் செய்துள்ளதாக தெரிகிறது.

ஒரு மிகப்பெரிய மிலிட்டரி விஞ்ஞானியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிப்பது, உள்ளிட்ட சாதாரன நடைமுறை கூட நடந்ததாக தெரியவில்லை. இதற்கிடையில் இன்னொரு சிக்கல் வேறு இந்த சம்பவத்தில் நடந்துள்ளது. காப்புரிமைக்காக பிஎல்ஏ இன்ஸ்டிடியூட் ஆஃப் மிலிட்டரி மெடிக்கல்ஸ் சார்பில் விண்ணப்பிக்கப்பட்ட காப்புரிமை என்பது சரியாக சீனா இந்த வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது என அறிவித்த 5வது நாளில் நிகழ்ந்தது.

இது மட்டுமல்ல Zhou, பெரும் கிருமி தொற்றான கொரோனா வைரஸ் உருவான இடமாக சொல்லப்படும் வூகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டியுடனும், அதன் தலைவர் Shi Zhengli உடனும் மிக நெருக்கமாக பணியாற்றியவர்.

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் இன்டலிஜென்ஸ் டேட்டாவின் படி வூகான் வைரலாஜி சென்டர் ரகசிய மிலிட்டரி ஆப்ரேஷனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதில் அவர்கள் வூகான் வைராலஜி இன்ஸ்டிடியூட் சீன ராணுவத்துவுடன் சேர்ந்து ரகசிய மிலிட்டரி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டுள்ளது.

இவை எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால் சீனா ஏதோ ஒன்றை செய்ய நினைத்து அது அவர்கள் எதிர்பாத்ததை விட பயங்கரமாக மாறி இறுதியாக அவர்கள் செய்ய நினைத்த ரகசிய ஆப்ரேஷனை அப்படியே மூடிமறைக்கின்றனரோ என்ற சந்தேகம் யாருக்கும் எழாமல் இருக்கமுடியாது. சீனாவிலிருந்து பரவிய இந்த வைரஸிற்கு சீனாவோ கடந்த 2020 பிப்ரவரியில் காப்புரிமை கோரியதிலிருந்து சர்வதேச அளவிலான விசாரணை ஒன்று நடந்தால் உண்மை வெளியில் வரலாம்.

0

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here