திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கோவை ,, டிசம்பர் 29

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாளை முதல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன்

பணப்பட்டுவாடா புகாரில் சிக்கிய துரைமுருகன் அதிமுகவை விமர்சிப்பதா நாடாளுமன்ற தேர்தலின்போது துரைமுருகன் உறவினர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு கோடி கோடியாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.அதிமுக மீது குற்றம் சுமத்தும் துரைமுருகன் தன் சொத்து விவரங்களை வெளியிட தயாரா ?

நெமிலிசேரி மீஞ்சூர் வரையிலான பாலம் கட்டும் பணி முடிவுற்று விரைவில் திறக்கப்படும் சென்னை போரூர் பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய திமுகவினர் அப்படியே விட்டுவிட்டனர் நிலத்தைக் கூட கையகப் படுத்த வில்லை அதிமுக ஆட்சியில் சென்னையில் பாலங்கள் கட்டப் படவில்லை என திமுக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது சென்னையில் தற்போது 15 இடங்களில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம் மு.க ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் கூட பாலம் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது

குழந்தைகள் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு அதிமுக ஆட்சியில் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது

கமலஹாசனுக்கு தமிழ்நாட்டைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் என்ன தெரியும் என கேள்வி

பாரதிய ஜனதா மற்றும் அதிமுகவின் கூட்டணி தொடர்ந்து நீடிக்கிறது அதிமுக தலமையில் கூட்டணி அமைக்கப்படும்

மு க ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு திமுகவின் தலைவராக என்ன தகுதி இருக்கிறது. வேறு தலைவர்களை திமுகவில் ஒருபோதும் முன்னிலைப் படுத்த மாட்டார்கள் வாரிசுகளின் அடிப்படையில் திமுக இயங்கி வருகிறது திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என விமர்சனம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here