கோவை மாவட்டம், தேவராயபுரம் கிராமத்தில் திமுக கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராமசபைக் கூட்டத்தில் ஒரு பெண்ணிடம் எந்த ஊர் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அந்தப்பெண், ஊரே தெரியாமல் கிராம சபை கூட்டம் நடத்துகிறீர்களா? என பதிலுக்கு கேள்வி எழுப்பினார். இதனால் கோபமடைந்த திமுக தலைவர் ஸ்டாலின் அந்த பெண்ணுக்கு பதில் கூறமுடியாது என்று சொன்னார்.
பின்னர் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் அந்த பெண்ணை நீங்க எஸ்.பி.வேலுமணி அனுப்பின பேன்தானே உங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று கூறவே திமுக தொண்டர்கள் அந்த பெண்ணை தாக்க முயன்றனர். பின்னர் தொண்டர்களிடம் அந்த பெண்ணை காவல் துறையினரிடம் ஒப்படைக்குமாறு கூறினார்.
அந்த பெண் சம்பவ இடத்திற்கு வெளியே வந்தவுடன் திமுகவினர் அந்த பெண்ணையும் அந்த இடத்தில் இருந்த மற்றொரு ஆணையும் பயங்கரமாக தாக்கினார்கள். அந்த பகுதியை சேர்ந்த மற்றொரு திமுக தரப்பினர் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளை திட்டியது மட்டுமல்லாமல் தொடர்ந்து தாக்குதலிலும் ஈடுபட்டனர்.
பின்னர் காவல் துறையினர் அந்த பெண்ணையும் உடனிருந்த மற்றொரு நபரையும் பத்திரமாக அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் கோவை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக-வினர் பெண்ணிடம் அராஜகம் | அடி, உதய்,கெட்ட வார்த்தை இதுதான் திமுக பெண்களுக்கு தரும் மரியாதையா?
0