திருப்பதியில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது

திருப்பதி,பிப்ரவரி 03

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்றுக்கு பிறகு சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது

கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்தன.

இதன் அடிப்படையில் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் ரூ.300 ஆன்லைன் டிக்கெட் மூலமும், 10 ஆயிரம் பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று வந்தனர்.

இலவச தரிசன பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைவதை தடுக்கும் பொருட்டு கடந்த வாரம் மேலும் கூடுதலாக 10 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது.

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து திருப்பதியில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக பஸ் டிக்கெட்டுடன் தினமும் ரூ.300 தரிசன டிக்கெட் திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே வழங்கி வந்தது.

கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த அந்த டிக்கெட் விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது.

ஆந்திர மாநில அரசு பஸ்களில் டிக்கெட் பெறும்போது ரூ.300 தரிசன டிக்கெட் வினியோகம் செய்யும் நடைமுறை நேற்று முதல் மீண்டும் அமல்படுத்தப்பட்டது.

தினமும் இந்த முறையில் 1000 டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.

சென்னை, வேலூர், பெங்களூர், ஹைதராபாத், விஜயவாடா உள்ளிட்ட இடங்களில் இருந்து திருமலைக்கு செல்லும் பஸ்களில் இந்த முறை மீண்டும் தொடங்கியுள்ளது.

பஸ்களில் தரிசன டிக்கெட் பெறும்போதே சாமி தரிசனத்திற்கான நேரமும் குறிப்பிடப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here