திருமணம், கோவில் நிகழ்ச்சிகள் இல்லாததால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் இசைகலைஞர்கள்

16

திருமணம், கோவில் நிகழ்ச்சிகள் இல்லாததால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் இசைகலைஞர்கள் வாழ்வாதாரத்தை காக்க அரசு உதவ வேண்டும் என கோரிக்கை.

கோவையில் மணியகாரம்பாளையம், சின்னவேடம்பட்டி போன்ற பகுதிகளில் தவில், நாயணம் வாசிக்கும் இசைக்கலைஞர்கள் சும்மா 500க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கொரனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திருமணம், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றிற்கு அரசு தடைவிதித்துள்ள நிலையில் தவில், நாயணம் வாசிக்கும் இசைக்கலைஞர்கள் தொழில் முடங்கிய காரணத்தால் வருமானம் இன்றி வாழ்வாதாரம் இழந்து தவித்துவரும் இசைக்கலைஞர்களுக்கு கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஆறுமுகபாண்டி அரசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

இது தொடர்பாக பேசிய தொழிலதிபர் ஆறுமுக பாண்டி, கொரனா இரண்டாம் அலையில் தொழில் முடங்கி பல்வேரு தொழில் செய்வோர் பாதிக்கபட்டுள்ள நிலையில் இசைத்தொழில் என ஒரு தொழிலையே நம்பி இருக்கும் இசைக்கலைஞர்கள் பாதிப்பட்டுள்ளனர் அவர்களுக்கு இரண்டாம் ஆண்டாக நிவாரணபொருட்கள் வழங்கபட்டுள்ளதாக தெரிவித்தவர் அரசு உடனடியாக இசைக்கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கவேண்டும் என கேட்டுகொண்டார்.

மேலும் இது தொடர்பாக பேசிய இசைக்கலைஞர்கள் தற்போது தொழில் முடங்கிப்போய் வாழ்வாதாரம் இல்லாமல் குடும்பத்துடன் தவித்துவருவதாகவும், அரசு மற்ற தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவொருக்கு வழங்கியது போல் தங்களுக்கும் சலுகைகள், உதவித்தொகை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுகொண்டனர்.

மேலும் பல நாட்கள் இசைக்கருவிகளை இசைக்காமல் இருந்தால் கருவிகள் அனைத்தும் பழுதடைந்து விடாமலிருக்க 5 நிமிடம் கருவிகளை இசைத்தது குறிப்பிடத்தக்கது.

0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here