கோவை,
டிசம்பர் 30
திருமாவளவன் தொடர்ந்து இந்து மதத்தை இழுவுபடுத்தினால் அவருக்கு சேலை கட்டும் போராட்டம் நடத்தப்படும் எண்று பா.ஜ.க.,வை சேர்ந்த வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மத நல்லினக்கம் தமிழகத்தின் நீடித்து வரும் அருமையான நிகழ்வு ஆனால் 20 ஆண்டுகளாக இந்துக்கள், இஸ்லாமியர்கள் நல்லினக்கத்திற்கு சில இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் மற்றும் திராவிட அரசியலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
மத நல்லினக்கத்தை நாங்கள் முன்னெடுக்கும் போது, விசிக., தலைவர் திருமாவளவன் இந்துக்களுக்கு எதிராக அரசியல் செய்து கொண்டிருக்கிறார். ஈவேரா செய்த காரியத்தை தான் திருமாவளவனும் செய்கிறார்.
திருக்குறானுக்கு எதிராக பேசியிருக்கிறேனா? அவர்களின் நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்திற்காக நான் பேசுகிறேன். இந்த நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்கின்றனர் எஸ்.டி.பி.ஐ கட்சியினர். அத்தகையை அமைப்புகளோடு திருமாவளவன் கொஞ்சுகிறார்.
இந்து மதத்தில் உள்ள குறைகளை சுட்டுக்காட்டுவது போல், இஸ்லாமிய அமைப்புகள் செய்யும் தவறுகளையும் தட்டிக் கேட்க வேண்டும். இனியும் இதனை செய்தால் திருமாவளவனுக்கு சேலை கட்டும் போராட்டம் நடத்தப்படும்.
திருமாவளவன் கட்சியினர் மாவட்டத்திற்குள் விடமாட்டேன் என்கின்றனர். இது பாரத தேசம், பாகிஸ்தான் இல்லை. எனது பிரச்சாரத்தை தொடங்குவேன். எனது பிரச்சாரம் மத நல்லினக்கத்தை அடிப்படையாக கொண்டிருக்கும். மத்திய அரசின் பல திட்டங்களை அதிமுக ஆதரித்துள்ளது. ஆனால், அனைத்து திட்டங்களையும் ஸ்டாலின் எதிர்க்கிறார். வெறும் அரசியல் லாபத்திற்காக செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.