திருவாரூரில் தாழ்த்தப்பட்ட தம்பதிக்கு முதல் மரியாதை! இந்து அமைப்பு அதிரடி!!

146

பிறப்பில் உயர்வு, தாழ்வுகள் இல்லை என்பது இந்து மதத்தின் அடித்தளமாக இருப்பது. இந்து தர்மத்தின் அடித்தளமாக விளங்கும் நான்கு வேதங்களில் ஜாதி பாகுபாடு பார்க்கப்படவில்லை. ஆனால் இந்து தர்மத்தை அழித்து, தங்கள் மதத்தை பரப்புவதற்காக வெளிநாட்டிலிருந்து வந்த சக்திகள் தொடர்ந்து இந்து மதத்தின் மீது விஷக்கருத்துகளை பரப்பி வந்தன.

இந்து தர்மத்தின் பலம் அதன் ஒற்றுமையில் இருக்கிறது என்று சுவாமி விவேகானந்தரும், டாக்டர் அம்பேத்கரும் ஒரே கருத்தை கொண்டிருந்தனர்.

ஜாதியை மையமாக வைத்து இந்து தர்மத்தின் மீது அவதூறுகளை பரப்புவது தொடர்ந்து வரும் ஒன்று தான். அந்த ஜாதி வேறுபாட்டை போதிக்கும் இடங்களாக நம் திருக்கோயில்களை உருவகப்படுத்தியே வந்திருக்கன்றனர். ஆனால் திருக்கோயில்களில் ஜாதி பாகுபாட்டை ஒழிக்கும் பல சமய சடங்குகள் இருப்பதை கண்டும் காணாமல் இருப்பதும், அதை அப்படியே குழி தோண்டி புதைக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.

முகலாயர்களும், கிருஸ்தவர்களும் நம் நாட்டின் மீது படையெடுத்து வந்த போது, பாரத நாட்டு மக்களை மதமாற்ற முடியாமல் தடுத்து நிறுத்துவது கோயில்களே என்று அறிந்தனர். அதனால் அவற்றை தகர்க்க தொடர்ந்து முயற்சி செய்து வந்தனர். மக்களின் மனதில் இந்து ஆலயங்கள் மீது வெறுப்புணர்வை தூண்டினர். மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை செய்தனர்.

தீண்டாமை என்ற கொடுமையினால் ஏற்பட்ட எதிர்மறை எண்ணங்கள், காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு சாதகமாக அமைந்தது. ஆங்கிலேயே கல்வி பயின்றவர்கள் கோயில் சம்பிரதாயங்களில் குற்றம் கண்டுப்பிடிப்பதையே கொள்கையாக கொண்டனர்.

நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, கோயில்களின் சமூக செயல்பாட்டு பணிகள் மற்றும் நிதி தொடர்புடைய விஷயங்களில் பின்னடைவு தொடர்ந்தது. தமிழகத்தில் இந்து விரோத தி.மு.க ஆட்சிக்கு வந்ததால் கோயில்களின் நிலை இன்னும் மோசமானதாக போனது. உண்மையில் சொல்லப்போனால் தமிழகத்தில் உள்ள கோயில்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றன. கோயில் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன.

இதை தடுத்த நிறுத்த ஆர்.எஸ்.எஸ்சின் ஆலயபாதுகாப்பு குழு பாடுபட்டு வருகிறது. கோயில் பாதுகாப்பு என்பது அரசின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்பது மட்டுமல்ல, அதன் சம்பிரதாயங்களையும், பாரம்பரியங்களையும் மீட்டெடுப்பதில் தான் உள்ளது என்பதை இக்குழு உணர்ந்துள்ளது.

இந்த குழு கடந்த மார்ச் 2 ம் தேதி சத்தமில்லாமல் ஒரு சமூக சமத்துவபுரட்சியை நடத்திக்காட்டியிருக்கிறது.

தமிழகத்தில் புகழ்மிக்க சிவன்கோயில்களில் ஒன்று திருவாரூர் கோயில். பசுவின் கன்றை கொன்ற தன் மகனை அதே தேர்சக்கரத்திற்கு பலி கொடுத்த அரசனின் கற்சிற்பங்கள் உள்ள கோயில் இது.

ஆலயப்பாதுகாப்பு இழு இந்த கோயிலை ஆய்வு செய்த போது, ‘யானை ஏறுவார் திருக்கல்யாணம்’ என்ற உற்சவம் நடந்து வந்தது தெரியவந்தது. புகழ்பெற்ற அறிஞரான குடவாயில் பாலசுப்பிரமணியன், கோயிலை பற்றிய தனது குறிப்பில், தாழ்த்தப்பட்ட சமூகமாக கருத்தப்படும் பறையர் சமூகத்தை திருவாரூர் கோயில் விழாவில் கவுரவிக்கும் பாரம்பரியத்தை விரிவாக விவரிக்கிறார். ஆனால், இதுபோன்ற ஒரு சடங்கு சமகாலத்தில் தொடர்ந்து நடக்கவில்லை. அப்படியே நடந்தாலும், அது பெயரளவிற்கு முக்கியத்துவம் இல்லாத சடங்காகவே நடத்தப்பட்டு வந்தது.

பாரம்பரியமாக உள்ள பறையர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், இந்திரன்-இந்திராணி வடிவமாகவே பார்க்கப்பட்டு அவர்களுக்கு பரிவட்டம் கட்டப்பட்டு, வெண் குடை பிடித்து, யானை மீது ஏற்றி முதல்மரியாதையுடன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் வழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்த பாரம்பரியத்தை மீட்டெடுக்க ஆலயப்பாதுகாப்பு குழு முடிவு செய்தது.

திருவாரூர் அருகேயுள்ள சமந்தன்பாளையத்தில் வசித்து வரும் பறையர் சமூகத்தில் 5 குடும்ங்களுக்கு இந்த இந்திர தம்பதியினராகும் உரிமை உள்ளது. இந்த ஆண்டு இந்த குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் – பரமேஸ்வரி தம்பதியினர், 2.3.2021 அன்று நடந்த யானை ஏறுவார் திருக்கல்யாண நிகழ்வில் பாரம்பரியமாக அரசர்களுக்கும் தெய்வங்களுக்கும் வழங்கும் ராஜ மரியாதையுடன் சம்பிரதாயப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த ஜோடி கோயில் நுழைவாயிலுக்குள் நுழைந்ததும், தெய்வமே அவர்களை வாழ்த்துவதாகவும், அவர்களின் வழிபாட்டை ஏற்றுக்கொள்வதாகவும் நம்பப்படுகிறது. கோயில் அர்ச்சகர் இருவருக்கும் பரிவட்டம் கட்டி விட்டார்.

அவர்கள், அரசர்களுக்கு அளிக்கப்படும் ராஜ மரியாதை உடன் வெள்ளை குடை ஏந்தி கோயிலின் பிரகாரத்தில் கோயில் ரதத்தில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.

பிறகு அவர்கள், தரிசனம் செய்ய கோயிலுக்குள் அழைத்து செல்லப்படுகின்றனர். விமர்சியாக நடந்த இந்த விழாவை ஏற்பாடு செய்தவர்களுள் ஒருவரான ஆர்.எஸ்.எஸ் கோட்ட இணைத் தலைவர் கண்ணன் கூறியதாவது:
சமூகத்தில் பல்வேறு காரணங்களால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை மக்கள் மனதிலிருந்து அகற்றும் பாரம்பரிய நிகழ்வுகள் தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றன. அதன்படி யானை ஏறும் திருக்கல்யாண உற்சவம், பறையர் சமூகம் எந்த குலத்திற்கும் தாழ்ந்ததல்ல என்பதை கடவுளே உணர்த்தும் வகையில் நடந்து வந்திருக்கிறது. ஜாதியை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே அரசியலுக்கு பயன்படுத்துபவர்கள் இதையெல்லாம் விரும்புவதில்லை. கோயில்களின் பாரம்பரியத்தை மீட்டெடுப்பதன் மூலம் தீண்டாமை போன்ற சமூக பாகுபாடுகளை ஒழிக்க முடியும். கோயில்கள், அனைவரும் பாகுபாடு இன்றி சங்கமிக்கும் இடம். பாரம்பரியத்தை நாம் பாதுகாத்தால், நீதி, நல்லிணக்கம் மற்றும் அமைதி ஆகிய மூன்றும் நிச்சயம் கிடைக்கும் என்றார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் சடங்கு, சம்பிரதாயங்களில் பிறப்பில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை மக்களுக்கு தொடர்ந்து உணர்த்தியே வருகின்றன. ஆனால் அவற்றின் உள்ளர்த்தத்தை மறைத்து, இந்துக்களிடையே பிளவு ஏற்படுத்தி பலனடைய சில கும்பல்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. ஆனால் சமீபகலமாக இந்துகளிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு அவர்களது சதியை முறியடிக்கத் தொடங்கியுள்ளது.

நன்றி: ஸ்வாராஜ்யா – அரவிந்தன் நீலகண்டன்

யானை ஏறுவார் திருக்கல்யாணம் என்றால் என்ன?

தமிழகத்தின் திருக்கோயில்களில் ஸ்தல புராணங்களின் படியும், இதிகாச மரபுப்படியும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். காலப்போக்கில் சில விழாக்கள் பெயரளவுக்கு மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. பல மறைந்தே போய் விட்டன ஆனால் பக்தர்களின் பெருமுயற்சியால் சில விழாக்கள் தற்போது மீண்டும் பழைய மரபுகளோடு கொண்டாடப் பட்டு வருகின்றன. அந்த வகையில் திருவாரூர் திருக்கோயிலில் ’யானை ஏறுவார் திருக்கல்யாண விழா’ நடத்தப்பட்டது.

இந்த விழா பற்றி திருவாரூர் தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி இந்திரன் பூஜித்த தியாகப் பெருமான் திருமேனியை திருவாரூரை ஆண்ட முசுகுந்த சக்கரவர்த்தி மன்னன் பெற்று வந்து திருவாரூரில் ஸ்தாபித்து பூஜை செய்து வந்தான். இந்த கட்டத்தில் இந்திரன் சிவபெருமானை வழிபடுவதை மறந்து விட்டான். அதனால் அவன் பல சிரமங்களுக்கு ஆளாகிறான். பூலோகத்திற்கு அனுப்பப்படும் இந்திரன் ’பறை அறைவோர்’ குலத்தில் பிறக்கிறான்.சாபவிமோசனம் பெற திருவாரூர் தியாகேசப் பெருமானை வணங்குவதற்கு காத்திருக்கிறான். ஆனால் சமூகத்தில் நிலவிவந்த வேறுபாடுகள் காரணமாக பறையறையும் குலத்தில் பிறந்த இந்திரனை கோவிலுக்குள் விட மறுப்பு சிலர் தெரிவிக்கிறார்கள். அதனால் அவன் ஒரு கண்ணாடியை வைத்து கண்ணாடியில் தெரியும் தியாகராஜரின் பிம்பத்தை வழிபடுகிறான்.
சாப விமோசனம் அடைந்த அவன் மீண்டும் தேவர்களின் தலைவனாகிறான். அதனைத்தொடர்ந்து இந்திரன் தனக்குரிய வெள்ளை யானை மீது அமர்ந்து நகர்வலம் வருகிறான்.
இந்த புராண நிகழ்வை ஒட்டி ஆண்டுதோறும் பறையறைவோர் சமூகத்தை பெருமைப்படுத்தும் யானை ஏறுவோர் பெருவிழா நடைபெறுகிறது. பறை அறையும் சமூகத்தவர் இந்திர குலத்தவர் என்று பெருமை படுத்தப்படுகின்றனர்.

பெரிய விழாவின்போது இந்த இந்திர குலத்தோர் திருக்கோயிலின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டு இந்திர குல மரபின் காணியாளர் ஒருவருக்கு திருக்கோயிலின் உயரிய மரியாதையான பரிவட்டம் கட்டி, ருத்ராட்ச மாலைகள் அணிவிக்கப்பட்டு வெண் கொற்றக்குடையின் அமரச்செய்து திருக்கல்யாணம் செய்விக்கப்பட்டு முதல் மரியாதை செய்யப்படுகிறது பெரியவர்கள், செல்வந்தர்கள், சான்றோர்கள் போன்ற மற்ற அனைவரும் யானையோடு பின்னே செல்ல தியாகராஜர் வீதிகளில் பவனி வரும் காட்சி நடைபெறுகிறது.

+4

2 COMMENTS

  1. பிறப்பால் உயர்வு தாழ்வுகள் இல்லை…… உணர்த்தும் சம்பவம். முயற்சித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

    +1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here