த்ரிஷ்யம் 2 படத்தில் அனைவரையும் ஈர்த்த வழக்குரைஞர் சாந்தி ப்ரியா!

5

மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவான த்ரிஷ்யம் 2 மலையாளப் படம் சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. 

த்ரிஷ்யம் 2 படத்தின் கடைசிப் பகுதியில் நீதிமன்றக் காட்சிகளில் வழக்குரைஞர் ரேணுகாவாகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் சாந்தி ப்ரியா.

த்ரிஷ்யம் 2 படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் வழக்குரைஞராக அவர் பணியாற்றி வருகிறார். அதனால்தான் ரேணுகா வேடத்தை இயல்பாகவும் சிறப்பாகவும் வெளிப்படுத்த சாந்தி ப்ரியாவே பொருத்தமாக இருப்பார் என எண்ணி அவரைத் தேர்வு செய்துள்ளார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.


கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த சாந்தி ப்ரியாவுக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கேரளா லா அகாதமியில் படித்தவரான சாந்தி ப்ரியா, மம்மூட்டி நடித்த கானகந்தர்வன் படத்திலும் வழக்குரைஞர் வேடத்தில் நடித்துள்ளார்.  இந்தப் படம் 2019-ல் வெளியானது. தொலைக்காட்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றிய பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் சாந்தி ப்ரியா. தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் நீதிமன்றத்திலும் படப்பிடிப்புத் தளங்களிலும் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.  

த்ரிஷயம் 2 படத்தைத் தமிழில் ரீமேக் செய்கிறபோது வழக்குரைஞர் வேடத்தில் சாந்தி ப்ரியா மீண்டும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

0

Disclaimer: This news is auto-aggregated by a computer program and has not been created or edited by NewsGuru. Publisher: தின மணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here