நேதாஜி பிறந்தநாள் விழாவில் மம்தாவின் பக்குவமில்லா அரசியல்!

ஆங்கிலேயர் ஆட்சியில் வங்கமகாணமும், தற்போதைய ஒடீசா மாநிலத்தில் உள்ளதுமான கட்டாக்கில் பிறந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். கட்டாக் தற்போது ஒடீசாவில் இருந்தாலும், நேதாஜியை தங்கள் மண்ணின் மைந்தன் என்றே பெருமைக் கொள்கிறார்கள் மேற்கு வங்க மக்கள். கொல்கத்தாவில் நடந்த அவரது 125 பிறந்தநாள் விழாவில் பாரத பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று நேதாஜி மீது தான் வைத்துள்ள மிகப்பெரிய மதிப்பை காட்டினார். ஆனால் பார்வையாளர்கள் சிலர் ஜெய்ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பியதை காரணம் காட்டி மாநில முதல்வர் மம்தாபானர்ஜி நடந்து கொண்டவிதம், அவரது அரசியல் பக்குவமின்மையை காட்டியது. இது மேற்கு வங்க மாநில மக்களிடையே ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷம் தேசவிரோத கோஷமில்லை. அது இந்த நாட்டின் அடித்தளம். மகாத்மா காந்தியடிகளே ராமராஜ்யம் அமைய வேண்டும் என்று தான் கனவு கண்டார். ஆனால் 30 சதவீதமுள்ள முஸ்லீம்களின் ஓட்டுக்காக ஸ்ரீராம பிரானையே மம்தா பானர்ஜி அவமதிக்க துவங்கியுள்ளது தான் மிக மோசமான அரசியல் என்கின்றனர் ராம பக்தர்கள்.

ஒரு கூட்டத்தில் பங்கேற்ற மக்களிடமிருந்து தனக்கு ஆதரவு மட்டும் தான் கிடைக்க வேண்டும் என்று தலைவர்கள் எதிர்பார்த்தால், அதைவிட முட்டாள்தனம் ஏதுமில்லை. பொதுமக்கள் சில நேரங்களில் எதிராகக்கூட கோஷம் எழுப்பலாம். அந்த எதிர்ப்பைக்கூட தன் பேச்சு திறமையால் ஆதரவாக மாற்றும் திறனுள்ள பல தலைவர்கள் நம்நாட்டில் இருந்திருக்கின்றனர். இப்போதும் இருக்கின்றனர். மம்தாபானர்ஜி, ஜெய்ஸ்ரீராம் கோஷத்தை தனக்கு எதிரான கோஷமாக கருதாமல், அதே மக்களிடம், ‘ஜெய்ஹிந்த்’ என்றோ ‘நேதாஜி வாழ்க’ என்றோ கோஷமிடச் செய்திருந்தால் பலரும் பாராட்டி இருப்பார்கள். ஆனால் அவரோ, ஜெய்ஸ்ரீராம் கோஷத்தை வங்க மக்களுக்கு எதிரான கோஷமாக மாற்ற முயன்றுதோல்வியடைந்திருக்கிறார். கூட்டத்தில் தன்னை அவமதித்துவிட்டதால் பேசமாட்டேன் என்று கூறிவிட்டு பேசாமல் சென்றிருக்கிறார்.

2016 ஆம் ஆண்டில் ராம நவமி கொண்டாட்டத்துக்காக பா.ஜ.க-வும் அதோடு ஒருங்கிணைந்த கட்சிகளும் ஏற்பாடுகள் செய்தபோது மறைமுகமாக அதனை எதிர்த்த மம்தா பானர்ஜி, விழாவை தடுக்கவும் உத்தரவிட்டார்.

முதலமைச்சரின் உத்தரவால் விழாவுக்கான அனுமதியை மறுக்கப்பட்டது.
இந்துக்கள் பண்டிகையை எதிர்த்தால் இங்கிருக்கும் முஸ்லீம் ஓட்டுக்களை நிச்சயம் வாங்கிவிடலாம் என்ற எண்ணமே மம்தாவிடம் இருந்ததாக கூறப்படுகிறது. ஜெய் ஸ்ரீராம் எனும் கோஷம் இனிமேலும் மேற்கு வங்காளத்தில் முழங்கினால், தன் மீது முஸ்லீம்களுக்கு இருக்கும் நம்பிக்கை போய்விடும் என நினைத்த மம்தா பானர்ஜி இந்துக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டார். சரஸ்வதி பூஜைக்கு தடை விதிக்கப்பட்டது. மீறி நடந்த விழாக்களில் பங்கேற்ற இந்துக்கள் மீது தாக்குதல் நடந்தன.

இஸ்லாமியர்களிடம் ஒரு மாதிரியாகவும் இந்துக்களை கண்டால் மம்தா வெறுப்புணர்வுடன் பிரிவினை அரசியல் செய்து வருவதாகவும் இங்கிருக்கும் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.

இங்கு ராம நவமி விழாக்களில் எடுத்து செல்லப்படும் பாரம்பரியமிக்க திரிசூலங்கள் போன்றவற்றை கூட ஆயுதமாக மட்டுமே பார்க்கப்பட்டு தடைவிதித்து இந்துக்கள் மனதை புண்படுத்தியது.
மம்தாவின் தொடர்ந்த இந்து விரோத நடவடிக்கைகளால், மக்கள் பாஜக பக்கம் சாயத்தொடங்கிவிட்டனர்.

இந்து மதவாத கட்சி என்று எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்படும் பாஜகவில் சிறுபான்மை மக்களும் சேர்ந்து வருகின்றனர். இதுவும் மம்தா போன்ற அரசியல்வாதிகளுக்கு பீதியை கிளப்பியுள்ளது. இதனால் தங்கள் சிறுபான்மை ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்ள சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்கின்றனர்.

ஆனால் மம்தாவின் அகங்கார ஆட்சிக்கு மேற்கு வங்க மக்கள் முடிவு கட்ட முடிவு செய்ததன் எதிரொலியாகவே நேதாஜி பிறந்தநாள் விழாவில் அவர் நடந்து கொண்ட விதத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதன் மூலம் தெரியவருகிறது.

விழாவில் பங்கேற்ற பிரதமரையோ, அல்லது கூடியிருந்த மக்களையோ மம்தா அவமரியாதை செய்யவில்லை. அவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸையே அவமரியாதை செய்திருக்கிறார் என்றே மேற்கு வங்க மக்கள் கருதுகின்றனர். வரும் சட்டசபைத் தேர்தலில் இதற்கான விடை கிடைக்கும்!

 

Source : Swarajya 
இந்த கட்டுரை ஸ்வராஜ்யா ஆங்கில இதழில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகும். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here