பக்தர்களின் போராட்டம் எதிரொலி!பட்டீஸ்வரர் கோயில் நடை திறந்தது!!

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைத்ததும், கிருஸ்தவ பாதிரியார்கள் தமிழகத்தில் கிருஸ்தவர்கள் போட்ட பிச்சையால் தி.மு.க ஆட்சி அமைந்ததாக பகிரங்கமாக பேசினர். முதல்வர் ஸ்டாலின் அண்மையில், கிருஸ்தவ மத விழாவில் பங்கேற்று இது உங்களால் அமைந்த ஆட்சி என்று புலகாங்கிதமாக கூறினார்.
அதற்கு நன்றி கடனாக கிருஸ்தவ மத விழாக்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து வருகிறது. மசூதிகளில் தொழுகை நடத்த எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. ஆனால் இந்துகளுக்கு மட்டும் கொரோனா தொற்று பரவிவிடும் என்ற காரணத்தை காட்டி கோயில் விழா அனுமதி மறுப்பு, விழாக்காலங்களில் கோயில் நடை அடைப்பு, பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு, தேரோட்டம், கும்பாபிஷேக அனுமதி மறுப்பு சனி, ஞாயிறுகளில் கோயில்களுக்கு பக்தர்கள் அனுமதியில்லை என்று பல்வேறு தடைகளை விதித்து வருகிறது. அதே சமயத்தில் பல ஆயிரம் பேரை திரட்டி அரசியல் கட்சியினர் நடத்தும் கூட்டத்திற்கு அனுமதி, முண்டியடித்து பயணம் செய்ய பேருந்துகள் இயக்கம், கூட்டம் கூட்டமாக என்று குடித்து கெட்டு ஒழிய டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு, பல ஆயிரம் பேர் வந்து செல்லும் மால்கள், சினிமா தியேட்டர்கள் திறப்பு என்று மக்கள் தாராளமாக நடமாட அரசு அனுமதியளித்துள்ளது. இங்கெல்லாம் பரவாத கொரானா தொற்று கோயில்களில் மட்டும் எப்படி பரவும் என்ற கேள்விகளுக்கு அரசிடம் பதில் இல்லை.

ஆண்டுதோழும் மகாளய அமாவசை தினத்தன்று தங்கள் மூதாதையர்களுக்கு நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் வழக்கம். நீர் நிலைகளுக்கு வரக்கூடாது என்று தடைவிதித்த தமிழக அரசு, முக்கிய கோயில்களுக்குள் பக்தகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவித்தது.

இந்துக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை கோவை மாவட்டம் பேரூரில் நடந்த சம்பவம் உணர்த்தியுள்ளது. தொன்மையான பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற ஸ்தலமாகும். கோயிலை ஒட்டி ஓடும் நொய்யல் நதிக்கரையில் தர்ப்பணம் கொடுக்க நேற்று ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்களை தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தடுத்தனர். ஆனால் மற்ற இடங்களில் சர்வசாதாரணமாக கூட்டம் கூட அனுமதிக்கும் அரசு எங்களை மட்டும் தடுப்பது ஏன் என்று கேள்வி கேட்டு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பக்தர்கள், தடையை மீறி சென்று ஆற்றில் தீபம் ஏற்றி தங்கள் முன்னோர்களை வழிபட்டனர்.

பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்க மறுத்தபோது பக்தர்கள் கோயில் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பக்தர்களுடன் இந்து முன்னணியினரும் களம் இறங்கவே அதிகாரிகள் வழிக்கு வந்தனர். மாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களும் கட்டுப்பாட்டுடன் சென்று பட்டீஸ்வரரையும் பச்சை நாயகியையும் தரிசித்து திரும்பினர்.

இந்துக்கள் தங்கள் உரிமைகளை போராடி பெற வேண்டிய நிலை தான் உள்ளது. போராடினால் வெற்றி நிச்சயம் என்பது பேரூர் உணர்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here