பதவி வெறிக்காக பலியான 85 வயது மூதாட்டி! மௌனிக்கும் ஊடகங்களும், போலி சமூக ஆர்வலர்களும்!!

129

வயதான மூதாட்டி ஒருவர் தட்டுத்தடுமாறி நடந்து வருவதைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? ஓடிப்போய் உதவலாம் என்று தோன்றினால், அது மனிதாபிமானம். அதே மூதாட்டியின் முகத்தை தரையில் தேய்த்து, சராமரியாக குத்தினால்? அவனை விட மிருகத்தன்மை கொண்ட உயிரினம் உலகில் இருக்க முடியாது.

மனித உருவில் நடமாடும் மிருகங்கள் சிலரால், கடந்த பிப்ரவரி 27 ம் தேதி அந்த கொடூரத்திற்கு ஆளாக்கப்பட்ட 85 வயது மூதாட்டி, ஒரு மாத போராட்டத்திற்கு பிறகு தனது இறுதி மூச்சை நிறுத்தவிட்டிருக்கிறார். அந்த பாட்டி செய்த ஒரே குற்றம், ஆளுங்கட்சிக்கு சவலாக விளங்கும் மற்றொரு கட்சியில் இருக்கும் மகனை பெற்றது. இந்த கொடூரம் நாளொரு வேஷமும், ஆவேசமும் காட்டும் மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில், அவரது கட்சியான திரிணாமுல் தொண்டர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது.

மாடு திருடியவனை விவசாயிகள் சிலர் அடித்து கொன்றுவிட, மதத்தைக் காரணம் காட்டி நாட்டையே ஸ்தம்பிக்க வைத்த, உலகரங்களில் இந்தியாவை அவமானப்படுத்திய போலி புரட்சியாளர்கள் ஷோனா மஜிம்தார் என்ற மூதாட்டிக்கு நடந்த கொடூரம் குறித்து விவாதம் நடத்தவில்லை, போராட்டம் நடத்தவில்லை, அவ்வளவு ஏன் அந்த பாட்டிக்கு நடந்தது என்ன என்று கேட்கக்கூட முன்வரவில்லை. மம்தாவின் காவல்துறையோ, பாட்டி உடல்நலக்குறைவால் கீழே விழுந்து காயம் ஏற்பட்டுவிட்டது என்று வெட்கமில்லாமல் கூறியது.

பாட்டியின் முகத்தில் ஏற்பட்டிருந்த காயங்கள், நடத்தப்பட்ட கொடூரத்தை அம்பலமாக்கின. ஆனாலும் இதுவரை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பாட்டியின் மகன் கோபால் மஜிம்தார், ஆளுங்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்ததே இந்த கொடுரத்தாக்குதலுக்கு காரணம் என்பது தான் இந்த கொடூர தாக்குதலுக்கு காரணம். தாக்குதல் நடத்திய கும்பல் கோபால் மஜிம்தார் மீதும் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது. இதுவரை மேற்கு வங்கத்தில் பதவி வெறிப்பிடித்த திரிணாமுல் தொண்டர்களால் கொல்லப்பட்ட பாஜகவினரின் எண்ணிக்கை 130க்கு மேல். இப்போது 85 வயது மூதாட்டியும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார்.

மூதாட்டியின் கொடூர மரணம் குறித்து பாஜக அல்லாத எந்த ஒரு கட்சியும் வாய்திறக்கவில்லை. தன்னை பாஜகவினர் தாக்கிவிட்டனர் என்று நாடகமாடிய மம்தாபானர்ஜிக்கு ஆதரவாகவும், பாஜகவை எதிர்த்தும் நம்ம ஊர் ஸ்டாலின் முதற்கொண்டு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி காலில் சிறிய காயம் ஏற்பட்ட மம்தா, முதலில் தன்னை பாஜகவினர் தாக்கிவிட்டதாக கூறி மிகப்பெரிய மாவுக்கட்டு போட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். பிரச்சாரத்தின் போது சொந்த கட்சியினர் கூட்டமாக முண்டியடித்ததால், கார் கதவில் தொங்கி போஸ் கொடுத்துக் கொண்டிருந்த மம்தா தடுமாறியதால் ஏற்பட்ட காயம் என்பதற்கான வீடியோ வெளியாகவே, சத்தமில்லாமல் மாவுக்கட்டை சாதா கட்டாக அடுத்தநாளே மாற்றிக் கொண்ட மம்தா, வீல்சேரில் பிரச்சாரம் செய்து வருகிறார். சில நேரங்களில் மறதியாக கட்டுப்போட்ட கால் மீதே மற்றொரு காலை தூக்கிப்போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்யும் வீடியோக்களும் வெளியாகி வருகிறது. இப்போது கண்டனம் தெரிவித்த ஸ்டாலின் வகையறாக்கள் கப்சிப் என இருக்கின்றனர்.

மேற்கு வங்கத்தில் ஷோனா மஜிம்தாரின் மரணமாகட்டும், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் குறித்த அ.ராஜாவின் வரம்பு மீறிய விமர்சனமாகட்டும், பதவி வெறியிலும், அதிகார போதையிலும் உள்ளவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதை வெளிப்படையாக காட்டும் சம்பவங்கள். இதைக்கண்டும் காணாமல் நகர்ந்து போகும் நமது கழுத்தையும் அவர்கள் எட்டிப்பிடிக்கவும் தயங்கமாட்டார்கள். தமிழர்கள் விழித்துக் கொள்வார்களா?

2014 பொதுத்தேர்தலின் போது, இந்து மதம் குறித்து வாய்திறந்தாலே, பல பாஜக தலைவர்களின் பிரச்சாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை விதித்தது நினைவிருக்கும். ஆனால் தரம் தாழ்ந்து தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் அ.ராஜா, தயாநிதிமாறன், திண்டுக்கல் லியோனி, உதயநிதி ஆகியோருக்கு எதிராக ஒரு சிறு துரும்பைக்கூட தேர்தல் கமிஷன் கிள்ளிப்போடாதது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

பாஜக ஆளும் மாநிலங்களில் சிறு சம்பவங்கள் நடந்தால் கூட பெரிதுப்படுத்தும் தமிழக காட்சி ஊடகங்கள், ஷோனா மஜிம்தாரின் கொடூர மரணம் குறித்தோ, அ.ராசா வகையறாக்களின் அநாகரீக பேச்சு குறித்தோ வாய் திறவாமல் மவுனமாக திமுக கூட்டணி முன்பு கைகட்டி, வாய்பொத்தி நிற்கின்றன.

-ரா.செந்தில்முருகன்

+2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here