0
புதுடெல்லி, ஜனவரி 28
உலக பொருளாதார அமைப்பின் டாவோஸ் மாநாட்டில், பிரதமர் மோடி இன்று உரையாற்ற உள்ளார்.
உலகம் முழுவதும் 400க்கும் அதிகமான மிகப்பெரிய தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கும் டாவோஸ் மாநாடு கடந்த 24ம் தேதி துவங்கியது. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இந்த நடக்கும் இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 25ம் தேதி உரையாற்றி இருந்தார்.
இந்நிலையில், ‘நான்காவது தொழில் புரட்சி- மனிதகுலத்தின் நன்மைக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்’ என்ற தலைப்பில் காணொலி காட்சி வழியாக அவர் உரையாற்றுகிறார்.
மனிதகுல நன்மைக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 4வது தொழில் புரட்சியை உருவாக்குவது குறித்து பிரதமர் மோடி பேச உள்ளார். பின்னர், தொழில் நிறுவன தலைவர்களுடன், பிரதமர் கலந்துரையாடுகிறார்.