பிரான்ஸ் வழியில் இலங்கை

பயங்கரவாதத்தில் பாதிக்கப்பட்ட இரு முக்கிய நாடுகள் இலங்கையும், பிரான்சும் ஆகும். இந்தியா போன்ற நாடுகளில் மத பயங்கரவாத செயல்கள் இலைமறை காய்மறையாக இருக்கின்றன. ஆனால் இலங்கையிலும், பிரான்சிலும் நடந்த கொடூர பயங்கரவாத தாக்குதல்கள், அந்நாடுகளின் ஆட்சியாளர்களை உஷாரடைய வைத்துள்ளன. இதன் விளைவாக கடந்த பிப்ரவரி 16 அன்று பிரான்ஸ் பாராளுமன்றத்தில் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன.

2019 ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் கிருஸ்தவ மதவழிபாட்டுத் தலங்களின் மீது நடத்திய கொடூர தாக்குதல்கள், இலங்கையின் அரசியல் தலைமைகளிடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தின. குறிப்பாக சிங்கள பௌத்தர்களும், தமிழ் ஹிந்துக்களும், கிறிஸ்தவர்களும் இந்த கொடுமைகளுக்கு தக்க படம் கற்பிக்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் இருந்தனர்.

இந்த அலையில் இலங்கையின் கடந்தகால அரசுகள் தூக்கி எறியப்பட்டன. இஸ்லாமிய அமைப்புகளுக்கு ஆதரவளித்து வந்த ஐக்கிய தேசியக்கட்சியும் படுதோல்வியடைந்தது. உள் நாட்டு பாதுகாப்பும் அச்சமற்ற சூழ்நிலையுமே மக்களின் ஒரே தேர்வாக இருந்தது. அந்த தேர்தலில் சிங்கள பௌத்தர்களின் தேசியவாத கட்சியாக தன்னை காட்டிக்கொள்ளும் ராஜபக்ஷேக்களின் கட்சியான பொதுஜன முன்னணி பெரும் வெற்றியை பெற்றது. ஜனாதிபதி தேர்தலிலும் இதே விஷயத்தை முன்னிறுத்தி கேத்தபாய ராஜபக்ஷே வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இலங்கை அரசு பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிவதை தடைசெய்யவுள்ளது. ஏப்ரில் 27 ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் புர்காவை தடைசெய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து இது பாராளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்படவுள்ளது என அமைச்சர் சரத் வீர சேகர தெரிவித்தார் .

நாட்டின் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனர்.
மீண்டும் ஒரு ஈஸ்டர் தாக்குதலோ பிரான்ஸ் தாக்குதலோ நடக்காமலிருக்க இருநாடுகளும் இயற்றியுள்ள சட்டங்கள் உதவும் என்று நம்புகின்றனர். அது எந்த அளவிற்கு வெற்றி தரும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். மத ரீதியாக தஜா செய்யும் போக்கு அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் இருந்தாலே, எல்லாவித பயங்கரவாதங்களும் முடிவுக்கு வந்துவிடும் என்று மக்கள் நம்புகின்றனர்.

மாறுபட்ட அரசியல் நிலைப்பாடுகள் இருப்பினும் இலங்கை அரசின் தைரியமான சட்டத்தினை இலங்கையின் அனைத்து தமிழ் ஹிந்து தலைமைகளும் வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here