புதிய கேலக்ஸி எம்32 அமேசான் மற்றும் சாம்சங் ஷாப் வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

புதிய கேலக்ஸி எம்32 அமேசான் மற்றும் சாம்சங் ஷாப் வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

புது கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் FHD+SAMOLED ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64 எம்பி குவாட் கேமரா சென்சார்கள், 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

முன்னதாக கீக்பென்ச் தளத்தில் வெளியான விவரங்களின்படி கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1, 48 எம்பி பிரைமரி கேமராவுடன், குவாட் கேமராக்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டது.


முன்புறம் 20 எம்பி செல்பி கேமராவும் கனெக்டிவிடிக்கு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி, 6000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என தெரிகிறது. 
புதிய சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் லைட் புளூ நிறங்களில் கிடைக்கும். இதன் விலை ரூ. 15 ஆயிரத்தில் துவங்கும் என்றும் கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here