புல்வாமா தாக்குதலில் கணவர் வீரமரணம் : நாட்டை காக்க ராணுவத்தில் அவரின் மனைவி

புல்வாமா தாக்குதலில் ராணுவ மேஜர் விபூதி எஸ்.தவுந்தியால் என்பவர் வீரமரணம் அடைந்த நிலையில் அவரது மனைவி ராணுவத்தில் இணைந்துள்ளார்.

2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தானின் எல்லைக்குள்ளேயே சென்று பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது இந்தியா. புல்வாமா தாக்குதலில் மேஜர் விபூதி எஸ்.தவுந்தியால் என்பவரும் வீர மரணம் அடைந்தார். திருமணமாகி 9 மாதங்களில் இவர் வீரமரணம் அடைந்தார்.

இந்நிலையில் மேஜர் விபூதி எஸ்.தவுந்தியால் மனைவி நிதிகா கவுல் ராணுவத்தில் இணைந்துள்ளார். பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள், ராணுவத்தில் இணையும் நிகழ்ச்சி ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் நடந்தது. இதில் நிதிகா சவுல் முறைப்படி ராணுவத்தில் இணைந்தார்.நிதிகா கவுல் கூறுகையில், என் கணவர் கடந்து வந்த அதே பயணத்தை நான் அனுபவித்திருக்கிறேன். அவர் எப்போதும் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பார் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.கணவர் வழியில் நாட்டை காக்க நிதிகா கவுல் ராணுவத்தில் இணைந்த நிகழ்வு நாட்டு மக்களிடையே எழுச்சியை உருவாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here