பெங்களூருவில் கொரோனா தீவிரம்: பொதுக்கூட்டம், போராட்டம், பேரணிக்கு தடை!

11

அதி தீவிர கொரோனா பரவலையடுத்து பெங்களூருவில் பொதுக்கூட்டம், போராட்டம், பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

பெங்களூருவில் கொரோனா நோய்த்தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பெங்களூரு நகரில் 4,200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நகரில் கொரோனா 2-வது அலையை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

வரும் ஏப்ரல் 20-ம் தேதி நள்ளிரவு வரை பெங்களூரு முழுவதும் பொதுக்கூட்டம், போராட்டம், பேரணி, ஆன்மிக கூட்டம் உள்ளிட்டவை நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாநகர காவல் ஆணையா் கமல்பந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Advertisement

மேலும் நீச்சல்குளம், உடற்பயிற்சிக் கூடங்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

image

திரையரங்குகள், உணவகங்கள் மற்றும் மது பார்கள் போன்றவற்றில் அதிகபட்சம் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் இருக்கும் உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பகுதிகள் உள்ளிட்டவை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

Advertisement

6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை நடைபெற்று வந்த பள்ளி வகுப்புகள் மூடப்படுகின்றன. 10 முதல் 12 ஆம் வகுப்புகள் நடத்தலாம் என்றும் அதற்கு கீழே உள்ள வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்பு எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்புதிய விதிமுறைகள் இன்று (ஏப்ரல் 7) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த தடை உத்தரவை மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாநில அரசு எச்சரித்துள்ளது.

0

Disclaimer: This news is auto-aggregated by a computer program and has not been created or edited by NewsGuru. Publisher: புதிய தலைமுறை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here