டிசம்பர் 7:
“பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா” சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் அருகே நடந்த ஒரு தீவிரவாத ஆயுதப் பயிற்சி வகுப்பை போலீஸார் அண்மையில் கண்டுபிடித்தனர்.
இருப்பினும் கொரானை நோய் தொற்று காலத்தில் விதிகளை மீறி ஒன்று கூடியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதே தவீர, சட்டவீரோதமாக தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்டது தொடர்பாக எந்த வழக்கும் போடப்படவில்லை என்பது ஆதிர்ச்சியளிக்கும் தகவலாக வெளியாகியுள்ளது.
சிறப்புப் பிரிவு டிஎஸ்பி முருகேசன் தலைமையிலான குழு அண்மையில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஊருக்கு வெளியே ஒரு குழுவினர் தகர கொட்டகையின் கீழ் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
விசாரணையில், “பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா” சார்பில் தங்களுக்கு ஐந்து நாள் பயிற்சி வகுப்பாக ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், அது 32வது பயிற்சி வகுப்பு என கூறினார் அப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட ஒருவர்.
இது தொடர்பாக வழக்குப் பதிந்த திருப்புல்லாணி காவல் நிலையத்தினர், தீவிரவாத பயிற்சி பற்றி எதுவும் குறிப்பிடாமல் கொரானா காலத்தில் 144 தடையை மீறி ஒன்று கூடியதாக மட்டும் வழக்கப் போட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
இது குறித்து காவல்துறையைச் சேர்ந்த ”பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அடிப்படைவாதிகள் கண்காணிப்பு பிரிவு” அதிகாரி ஒருவர் கூறுகையில், “இது வழக்கமாக நடைக்கும் பயிற்சி வகுப்புதான் அச்சம்கொள்ள தேவையில்லை.
கொரானா நோய் தொற்று காலம் என்பதால் விதிமுறையை மீறி பலர் ஒன்று கூடியதாக சிலரை கைது செய்தோம். இல்லாத பட்சத்தில் அதுவும் கிடையது” என அந்த அமைப்பை உளவு பார்த்து அறிக்கை சமர்பிக்க வேண்டிய அதிகாரிகள் பொறுப்பில்லாமல் கூறியது அதிர்ச்சியளிக்கிறது.
தடை செய்யப்பட்ட “பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா” (பி.ஃஎப்.ஐ), சிமி, என்.டி.எஃப் போன்ற இஸ்லாமிய அமைப்புகளின் தீவிரவாத செயல்பாடுகளை கண்டும் கானாமலும் உள்ள உளவுப் பிரிவு அதிகாரியின் அக்கறையின்மை நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
குறுகிய காலத்தில் தொடர் சமூக விரோத செயல்களுக்கும், நாசவேலைகளுக்கும் பெயர் போன அமைப்பாக “பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா” விளங்குகிறது. தனது சமூக விரோத செயல்களுக்காக தடைசெய்யப்பட்ட அமைப்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமின்றி மனித நீதி பாசறை, கர்நாடகா ஃபோரம் ஃபார் டிக்னிட்டி உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பது மட்டுமின்றி அமைப்பில் பல்வேறு வயதினற்கு ஏற்றபடி பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெண்களுக்கென “நேஷனல் உமன்ஸ் ஃபிரண்ட் அண்டு கேம்பஸ் பிரண்ட்”, “தி சோஷியல் டெமாக்கிரடிக் பார்டி ஆஃப் இந்தியா” (SDPI) அதன் அரசியல் பிரிவாகும்.
இது குறித்து இந்து முன்னணியின் மாவட்டச் செயலர் கே.ராமமூர்த்தி கூறியதாவது: இதற்கு முன்பு வெளிமாநிலங்களில் இருந்து பயிற்சி பெற வந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பட்டது ஆனால் தற்போது காவல்துறையினர் இந்த ஆயுத பயிற்சி வகுப்பை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதாக தெரியவில்லை.
இந்த பயிற்சி வகுப்புகளை தடை செய்யக் கோரி பாஜக, விஎச்பி மற்றும் இந்து முன்னணி சார்பில் புகார்கள் கொடுக்கப்பட்ட போதும் காவல்துறையினர் உரிய நடவடி்கை எடுக்காமல் பாரபட்சம் காட்டுகிறது.
அது மட்டுமின்றி ஒரு இஸ்லாமியர் எங்களைப் பற்றி தவறாக ஒரு புகார் கொடுத்தாலும் அதை விசாரிப்பதில் முனைப்பு காட்டுகிறது காவல்துறை. இதற்கு காரணம் காவல்துறை அவர்களைக் கண்டு அஞ்சுகிறது. கடல்கரைக்கு அருகில் நடத்தப்படும் அவர்களின் பயிற்சி வகுப்புகள் சந்தேகத்தை வலுக்கச் செய்வதாகவே உள்ளன.
இது குறித்து என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொள்ள கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளது ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எட்டப்படவில்லை. தமிழ காவல்துறையோ இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்களை நெருங்குவதற்கே அச்சம் கொள்கின்றனர் மேலும் அவர்களை விஐபி போலவே பாவிக்கின்றனர்.
முஸ்லீம் ராஷ்ட்ரிய மன்ச் துணைத் தலைவர் முகமது ராய்சூதீன் இது குறித்து கூறியதாவது: பெரியபட்டினத்தில் உள்ள சையத் ஒலியுல்லா தர்கா அருகில் தனியாருக்குச் சொந்தமான தென்னந் தோப்பில் இந்த ஆயுத பயிற்சி கொடுக்கப்பட்டது. அது 32வது ஆராம்பநிலை பயிற்சியாளர்களுக்கான வகுப்பு. இதில் பங்கேற்றவர்கள் சுமார் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே.
இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடந்தப்பட்டு வருகிறது இது ஒன்றும் முதல் முறையல்ல. 2013-ல் நடந்தப்பட்ட பயிற்சி வகுப்பில் 30 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கஷ்மீர், அஸ்ஸாம், பீகார், ஓடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்றனர்.இவர்களுக்கான பயிற்சி கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் பார்வைக்கு எட்டாத ரகசிய இடம் ர்வு செய்யப்பட் நடத்தப்பட்டது.
வெளியாட்கள் இப்பகுதிக்குள் நுழைவது என்பது இயலாதது. பி.எஃப்.ஐ உறுப்பினர்கள் தவிர வேறு யாருக்கும் பயிற்சி நடக்கும் இடத்துக்குச் செல்ல அனுமதி கிடையாது என்றார். பெரியபட்டினம் முழுக்க, முழுக்க பி.ஃஎப்.ஐ.யின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு காரணம் பெரியபட்டினம் பஞ்சாயத் தலைவராக பதவி வகிக்கும் அக்பர் ஜான் பீவி, பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் எஸ். புரோஸ் கான், கவுன்சிலர் எஸ்.பைரோஸ் கான் மற்றும் பி.எஃப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளாகவும் இவர்கள் பதவி வகிப்பதே. அது மட்டுமின்ற் இரண்டு மீனவச் சங்கங்களை இந்த பி.எஃப்.ஐ நிர்வாகிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இதில் ஒரு சங்கத்தின் தலைவராக அக்பர் ஜான் பீவியின் மகன் அஸ்கர் அலி உள்ளார். உள்ளாட்சி தேர்தலில் இவர்கள் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில் பஞ்சாயத்து அலுவலக கல்வெட்டு ஒற்றை பதித்தனர் அதில் தமிழகத்தின் முதல் இஸ்லாமிய தலைநகர் பெரியபட்டினர் என்பதே.
இந்து அமைப்பைச் சேர்ந்த களவீரர்கள் இவற்றை அப்புறப்படுத்தினர். பஞ்சாயத்து நிர்வாகத்தின் பெயரை வைத்துக் கொண்டு பி.எஃப்.ஐ சட்டவிராதமாக அரசு நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. மாவட்ட வருவாய் அலுவர்களும் இதில் தலையிடாமல் மெத்தனம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. பி.எஃப்.ஐ தொண்டர்கள் இரவு நேர நோந்துப் பணி என்ற பெரில் இரும்புத் தடிகளுடன் வலம் வருகின்றனர்.
பி.எஃப்.ஐ-க்கு எதிராக யார் கையை உயர்த்தினாலும் அவர்களுக்கு எதிராக பொய் வழக்கு போடப்படும் அளவுக்கு பி.எஃப்.ஐ செல்வாக்கு பெரியபட்டினத்தில் வளர்ந்துள்ளது.
மத்திய அரசின் “ஜல் ஜீவன்” உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியானது வேறுவழியில் கிராம பஞ்சாயத் தலைவர், வட்டார வளர்ச்சி அதிகாரி உள்ளிட்ட இன்னும் சில முஸ்லீம் அதிகாரிகளின் உதவியுடன் தீவிரவாத பயிற்சிக்காக உபயோகப்படுத்தப்படுகிறது. மாநில மற்றும் மத்திய அரசு உடனடியாக தலையி்ட்டு என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிடுவது மட்டுமல்லாமல் “ஜல்ஜீவன்” திட்ட டென்டர்களை உடனடியாக ரத்து செய்து புதிய ஒப்பந்தத்திற்கு உத்தரவிட வேண்டும்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரான இ.கார்த்தி இது குறித்து கூறும்போது, இது வழக்கமாக நடக்கும் உடற்பயிற்சி வகுப்புகள்தான், மேலும் இன்த ஆண்டு சிலரை கைது செய்துள்ளோம், அதற்கு காரணம் அவர்கள் கொரானா நோய் தொற்று காலத்தில் அனுமதியின்றி பெரியளவில் ஒரே இடத்தில் ஒன்றுகூடியதற்காக மட்டுமே என்று அவர் கூறியது காவல்துறை உயர் அதிகாரிகளும் பி.ஃஎப்.ஐயின் ஆயுதப் பயிற்சிக்கு அஞ்சி கட்டுப்பட்டுள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது என்கின்றனர் அந்தப் பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணியின் மாவட்டச் செயலர் கே.ராமமூர்த்தி.
ஆகஸ்ட் 15 புதுமண்டபம் பள்ளியில் தேசிய கொடியை அவிழ்ந்துவிட்டு இந்து மீனவர்கள் மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செருப்புகளை அந்த கொடிகம்பத்தில் ஏற்றினர். இதையும் கண்டுகொள்ளாமல் விட்டது காவல்துறை. பாடல்பெற்ற தளமான பெரியபட்டினம் தற்போது தென்னிந்தியாவின் காஷ்மீராக மாறி வருகிறது. சேதுபதி சத்திரம் மற்றும் புதுமண்டபத்தில் உள்ள தர்மதேவதை கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை முஸ்லீம்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற போது இந்து அமைப்புகள் ஒன்றாக கைகோர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு அந்த முயற்சியை முறியடித்தது.
கடந்த 2014-ம் ஆண்டு காளிதாஸ் என்ற இந்து காவல்துறை உதவி ஆய்வாளர் தன்னை கத்தியால் குத்த முயன்ற பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய ஒரு சமூக விரோதியை சுட்டுக் கொன்றார். அடுத்த 24 மணி நேரத்திற்குள் மாநில அரசு அதிகாரிகள் சமூக விரோதியின் வீட்டுக்குச் சென்று ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கியது மட்டுமல்லாம் அந்த காவல்துறை அதிகாரிக்கு ரூ.2 லட்சம் அபராதத்துடன் தண்டனையும் வழங்கியது.
இது போல் வில்சன் என்கிற உதவி ஆய்வாளர் இறந்த போது ரூ.1 கோடி இழப்பீடு வழங்கியது அரசு. ஆனால் அவரது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் மற்றும் ரோஹின்ங்யாவில் இருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்ந்த முஸ்லீ்ம்கள் உள்ளூர் முஸ்லீம்கள் உதவியுடன் பல்வேறு பகுதிகளில் போலியான அடையாள ஆவணங்களுடன் வேலை செய்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் பயிற்சி பெறும் தீவிரவாதிகள் வைக்கும் தொடர் குண்டுகள் தமிழகத்தில் எந்த நேரமும் வெடிக்கலாம்.