எப்படி பொதுத்துறையும் தனியார் துறையும் சேர்ந்து ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க முடியும் என்ற கேள்வி பலர் மனதில் உள்ளது.ஒரு தேசத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அந்த நாட்டின் அடிப்படை உரிமை என்பதை முதலில் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.டெட் கென்னடி முதல் பராக் ஒபாமா வரை அனைவரும் அரசியல் ஆதரவை கொண்டு உலகளாவிய ஆரோக்கியத்துக்கான அடிப்படை பிறப்புரிமையை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசத்தை ஆரோக்கியமான வழியில் அழைத்து செல்வது ஒவ்வொரு நாட்டின் குடிமகனின் கடமையாகும், கனவாகும்.
கோவிட் 19, இந்த தேடலை புதுப்பித்துள்ளது. இந்த தொற்றுநோயால் நம் நாட்டின் ஆரோக்கியம் கெட்டுவிட்டது என்று பலர் நம்பினார்கள். இது போன்ற மனநிலையில் தான் நாம் அப்போது இருந்தோம். இந்தியாவில் தொற்றுநோய் ஏற்பட்ட போது, இதிலிருந்து நாம் எப்படி மீண்டு வரப்போகிறோம் என நினைத்து குழப்பம் அடைந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கான நேரம் இதுவெனவும், சுகாதார சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு வெகு காலம் ஆகிவிட்டது என்பதையும் இந்த சூழ்நிலை உணர்த்தியுள்ளது.சீர்திருத்தங்கள் செய்வதற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.சுகாதாரத்துக்காக அரசு செலவிடுவதால் எந்த மாற்றமும் உண்டாகவில்லை. பல தசாப்தங்களாக, இதற்கு 5 சதவிகிதத்துக்கும் குறைவான பட்ஜெட்டே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், சுகாதாரம் என்பது ஓர் மாநில அரசாங்கத்தின் பொறுப்பல்ல என்பது போல இருந்து வருகிறது.
மற்ற துறைகளை போல் அல்லாமல், சுகாதாரத்துறை, 1991ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவில் தனியார் மயமாக்கப்பட்டது. ஆச்சரியம் என்னவென்றால், அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்புடனே இது நடந்தது.
சிறிய தனியார் மருத்துவ மையங்கள் இந்தியா முழுவதும் காணப்பட்டது. 8-10 பெட் வசதி கொண்ட மருத்துவமனைகள், 10-12 ஊழியர்களுடன் இயங்கியது. நம்பிக்கையான மருத்துவர்கள், இந்திய சுகாதார துறையின் தரத்தை உயர்த்தியது.
மக்களை தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுள் ஒருவரை போல பார்த்துக்கொண்டனர் நம்பிக்கையான டாக்டர்களும், ஊழியர்களும்.
என்னுடைய கருத்து என்னவென்றால், மருத்துவ முறைகளை, ‘நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்’ கீழ் ‘சேவையாக’ வழங்கி, மருத்துவர்களால் சேவை செய்வதற்கு அரசாங்கம் ஆதரவு வழங்கினால், ‘டாக்டர் – நோயாளி’க்கு இடையே இணக்கமான சூழல் உருவாக வாய்ப்புள்ளது.நம்பிக்கையின் அடிப்படையில் மக்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட சேவையால், அதிருப்தி அடைந்த மக்கள், நீதிமன்றம் செல்லும் அவலமே இப்போது வரை உள்ளது. இதனால் பணம் இருப்பவர் வெல்கிறார், இல்லாதவர் நீதிக்காக போராடுகிறார்.
நமது சுகாதார அமைப்பின் பெரும்பான்மையான பகுதி தனியார் மருத்துவர்களையே சார்ந்துள்ளது. இதனால், சிறிய மருத்துவ மையங்களை மூடுவது இந்தியாவின் சுகாதார அமைப்புக்கு பலத்த அடியாகவே இருக்கிறது.
இந்திய சுகாதார அமைப்பு, கடந்த இருபது ஆண்டுகளாக, கார்ப்பரேட் நிறுவனங்களின் மிகப்பெரிய பங்களிப்பை கண்டுள்ளது. சுகாதார துறையில் பெரிய நிறுவனங்களின் பங்களிப்பு, அதன் தரத்தை உயர்த்த செய்யும். இதனால் தேசத்தில் ஆரோக்கியமான சுகாதாரத்துறை உருவாகவும் அதிக வாய்ப்புள்ளது.
ஐந்து அரசாங்கம் நடத்தும் மருத்துவ கல்லூரிகளை கொண்ட மும்பை போன்ற பெரிய நகரத்தில், பெரு நிறுவனத்தின் பங்களிப்பு இல்லாமல் கோவிட் பராமரிப்பை நிர்வகிப்பது சாத்தியமா? என்ற கேள்வியும் எழுகிறது.
அடிப்படை சுகாதாரத்துக்கும் மேம்பட்ட சுகாதாரத்துக்கும் வித்தியாசத்தை நாம் உணர வேண்டும். மேம்பட்ட சுகாதார துறையில் பெரிய நிறுவனங்களின் பங்களிப்பு தேவை. பணம் இருப்பவர்கள் தேடி செல்வது தனியார் தானே, அரசு சேவை ஒன்றும் இல்லையே. அப்படி இருக்க, பொதுத்துறையில் பெரிய நிறுவனங்களின் பங்களிப்புடன் மேம்பட்ட சேவையை தருவதில் என்ன தவறு என பலரும் கேட்கின்றனர். ECMO போன்ற சிகிச்சைகளுக்கு பணம் இருப்பவர்கள் செலவு செய்து பார்ப்பர். பணம் இல்லாதவர், என்ன செய்வர்? அதனால் பொதுத்துறையும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதே பலருடைய கருத்தாக இருந்து வருகிறது.
இது போன்ற சிகிச்சைகளின் செலவு, பாமர மக்களுக்கு எட்டா கனியாகவே இருக்கிறது. அதே போல சுகாதார துறையில் எதிர்ப்பு மருந்துகளை கண்டுபிடிக்க செலவழிக்க வேண்டியதும் அவசியமாகிறது. இது போன்ற சமயங்களில், கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பை வரவேற்பது தான் புத்திசாலித்தனம். சிகிச்சையின் எந்தவொரு புதிய முறையின் விலையும், இதனால் போகப்போக குறைகிறது. ஏழைகளுக்கு எட்டா கனியாக இருக்கும்போது ஆடம்பரமாக பார்க்கப்படும் ஒரு விஷயம், அதுவே அவர்களுக்கும் கிடைக்கும்போது அத்தியாவசியமாக மாறுகிறது. இதற்கு ஒரு சிலர் உடன்படவில்லை என்றாலும், இதனால் நிச்சயம் நம் நாட்டின் பொருளாதார நிலை உயரும் என்பதே உண்மை.
ஊட்டச்சத்து, தடுப்பூசி மற்றும் சுகாதார கல்வி திட்டங்களில் அரசாங்கத்தின் ஈடுபாடு மிகப்பெரிய பலனளித்தது. கோவிட் – 19 தடுப்பூசியை ஓர் இரவில் கண்டுபிடித்து ஒன்றும் செலுத்திவிடவில்லை. இந்த வெற்றியில் பங்களித்திருப்பவர்கள் எல்லோருமே மிகப்பெரிய அனுபவசாலிகள்.
அரசாங்கம் அதன் முக்கிய திறன்களை கொண்டிருந்ததோடு, தனியார் சுகாதார துறையின் பங்களிப்பையும் பெற்றது. கோவிட் – 19 என்பது ஒட்டுமொத்த சுகாதார துறையின் உழைப்பால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகும். இதில் பொதுத்துறை, தனியார் துறை என்ற பாகுபாடு நிச்சயம் கூடாது. இந்தியாவில் சுகாதார துறை கூட்டாக செயல்பட்டதற்கு ஒரு உதாரணம் தான் இன்று நம் தேசம் இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பது. இந்தியா, கோவிட் – 19 சிகிச்சைக்காக தனியார் சுகாதார துறையை நம்பியுள்ளது. இந்த தனியார் சுகாதாரத்துறை தடுப்பூசிக்கு இந்திய அரசாங்கத்தை நம்பியுள்ளது.
இந்த கோவிட் – 19 சூழலை வைத்து பார்க்கும்போது, இந்தியா தன்னுடைய எதிர்காலத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை ஆற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அடிப்படை சுகாதாரம் நமக்கு இப்போது கிடைப்பது போலவே, மேம்பட்ட சுகாதாரமும் தனியார் துறையின் பங்களிப்பால் நிச்சயம் கிடைக்கும் என நம்பலாம். ஒரு துறையை பற்றிய எந்தவொரு அடிப்படை அறிவும் இல்லாமல், ஒரு விஷயத்தில் தலையிடுவது பேரழிவை உண்டாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். விலையை கருத்தில் கொண்டு ஏதாவது பேசுவதில், சுகாதாரத்தின் மீதான அக்கறை ஒன்றும் இவர்களுக்கு வெளிப்படவில்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
முன்னால் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் கூறியதை போல, “எங்கள் பிரச்சனைக்கு அரசாங்கம் ஒன்றும் தீர்வல்ல. அரசாங்கமே பிரச்சனையாக தான் உள்ளது.” என எல்லாவற்றுக்கும் குறை மட்டுமே சொல்ல தொடங்கிவிட்டனர்.
சுகாதாரத்துக்காக செய்யப்படும் செலவீனங்கள் வீணாக போகும் போது, தனியார் நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்களின் முதலீட்டின் மூலம் மேம்பட்ட சுகாதாரத்தை குறையில்லாமல் வழங்குவதில் எந்த தவறும் இல்லை என்றே தோன்றுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் அடிப்படை சுகாதாரத்துக்காக செய்யப்படும் செலவுகளை கட்டவிழ்த்து விடுதல், தனியார் துறைகளின் மூலமாக தரமான சேவைகளை வழங்கி அரசாங்க சுகாதாரத்துறை மீது படிந்திருக்கும் கறையை துடைத்தல் போன்ற கொள்கைகளை இந்தியா கையிலெடுத்துள்ளது.