மக்கள் துயர் துடைக்கும் பணியை தடுக்கும் மார்க்சிஸ்ட்!

பெருந்தொற்று பணியிலும் கேரளாவை வாட்டி வதைக்கும் படுகேவல அரசியல்!!

நாட்டில் தங்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் பாசிஸ்ட்டுகள் என்று கூறிவிட்டு, 100 சதவீத பாசிஸ்ட் தன்மையுடன் நடந்து கொள்வது இடதுசாரிகளின் வாடிக்கை. இதோ கொரோனா நிவாரணப்பணிகளிலும் தனது பாசிஸ தன்மையை வெளிப்படுத்தியுள்ளது கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கூட்டணி அரசு.

புயல், வெள்ளம், வறட்சி, பெருந்தொற்று என்று மக்கள் பெரும் பிரச்சனைகளை சந்திக்கும் போதெல்லாம், தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் துயர் துடைக்க களத்தில் குதிப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்-சேவாபாரதி தொண்டர்கள்.
கடந்த முறை பெரும் வெள்ளத்தால் கேரளா சீரழிந்த போது மீட்பு பணியில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலர் பலியானார்கள். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களோ நிவாரணப்பொருட்களை கைப்பற்றி எடுத்துச் சென்றதாக தகவல்கள் வெளியானது.

இப்போது கொரோனோ பெருந்தொற்றினால் பலர் இறந்துபோன நிலையில் லட்சக்கணக்கான மக்கள் தொற்றுக்கு உள்ளாகி அவதிப்பட்டு வருகின்றனர். உடனே சேவாபாரதி, ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் களத்தில் இறங்கி நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசின் நிவாரணப்பணி சுமை பெருமளவு குறைந்திரக்கின்றது. சேவாபாரதியின் இந்த தன்னலமற்ற சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பது இடதுசாரிகளுக்கு பொறுக்கவில்லை.

கண்ணூர் மாவட்ட ஆட்சியர் திரு.டி.வி.சுபாஷ் 22.5.2021 அன்று சேவாபாரதிக்கு ‘நிவாரணப்பணிக்கான அமைப்பு’ என்ற அங்கீகாரத்தை அளித்தார். இதைத்தொடர்ந்து சேவாபாரதி அமைப்பினர், அடையாள அட்டை பெற உள்ளாட்சி அமைப்பிடம் விண்ணப்பித்தனர். இதனிடையே மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்பந்தத்தால் சேவாபாரதிக்கு வழங்கப்பட்ட நிவாரணப்பணிக்கான அமைப்பு என்ற அங்கீகாரம் திரும்ப பெறப்பட்டது. ஆனால் முஸ்லீம் லீக் அமைப்பிற்கு அந்த அங்கீகாரம் தொடர்கிறது. அவர்கள் தங்கள் கட்சியின் அடையாள சின்னத்தோடு பணிபுரிகிறார்கள். அதை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.

மக்கள் ஆயிரக்கணக்கில் அவதியுறும் போது அனைத்து தரப்பினரையும் கட்சி, அமைப்பு, வேறுபாடுகளை களைந்து நிவாரணப்பணிகளை மேற்கொள்ள வேண்டியது மாநில அரசின் கடமை. ஆனால் மக்கள் எவ்வளவு துன்பப்பட்டாலும் பரவாயில்லை, தங்களுக்கு எதிர் சிந்தனை உள்ளவர்களை செயல்பட அனுமதிக்கக்கூடாது என்பது பாசிஸம் அல்லாத வேறு எது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here