மதமாற்ற அறுவடைக்காக மீண்டும் இன மோதலை ஏற்படுத்த சதி! இலங்கையில் நடப்பதென்ன? நேரடி ரிப்போர்ட்

இலங்கையில் பல ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின்னரும் இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் சிங்களர்-தமிழ் மக்கள் மத்தியிலான மோதலில் பெரும் அறுவடை செய்துள்ளது கிருஸ்தவ-முஸ்லீம் மதத்தினர் தான். தமிழ் சமூகத்தின் மொத்த ஜனத்தொகையில் சுமார் 35 சதவீதம் பேர்  கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டுவிட்டார்கள். இராமர் வழிபட்ட ஒரு மாவட்டம் கிருஸ்தவ மாவட்டமாக இன்று பிரகடனம் செய்யப்பட்டு இருக்கிறது. சைவம் தழைத்தோங்கி காணப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்தில்  30%  தமிழ் மக்கள் கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டுள்ளார். ஆனால் தமிழ்-சிங்கள பிரச்சனையை பூதாகரமாக்கும் தமிழக அரசியல்வாதிகள், இது குறித்து வாய் திறப்பதில்லை.

தமிழ் சிங்கள யுத்தம் நிறைவு பெற்ற பின்னர் தமிழ் மக்கள் இந்த விஷயத்தில் விழிப்புணர்வு அடைந்து வருகின்றனர்,  இந்த மதமாற்ற சம்பவங்கள் எப்போதெல்லாம் பரபரப்பான பிரச்சனையாக பேசப்படுகிறதோ அப்போதெல்லாம் தமிழ் சிங்கள இன முரண்பாடு பெரிய செய்தியாக மாறுகிறது.. ஒரு புத்த விகாரை உடைக்கப்படும், அதைத்தொடர்ந்து ஒரு இந்து கோவில் உடைக்கப்படும்.  அதோடு கிருஸ்தவ மிஷனெரி விஷயத்தை பேசியவர்கள் பௌத்த பேரினவாதம் என்பதை பேச ஆரம்பித்துவிடுவார்கள். ஆக இங்கு பிரச்னையை உருவாக்குவது யார் என்பதை சிந்தித்து பார்த்து இந்துக்களுக்கான (தமிழர்களுக்கான) உண்மையான பிரச்சனை யாரால் உருவாகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

சமீபத்தில் இலங்கையில் பிரச்சனையாக மாறியுள்ள குருந்தூர் மலை,  ஆதி சிவன் கோவில் பிரச்சனையும் இலங்கையிலும் இந்தியாவிலும் அரசியல் ரீதியாக அணுகப்படுவதால் அதன் உண்மை தன்மை மறைந்துவிடுகிறது. அதனை தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் நமக்கிருப்பதால் அதன் விஷயங்கள் தொடர்பான முழு பார்வையும் இந்த கட்டுரையில் அளித்துள்ளோம்.

குருந்தூர் மலை பிரதேசமானது அரசர்கால வரலாற்றுக்களுடன் தொடர்புடையாதாகிறது. 1932 இல் அங்கு தொல்பொருள் சின்னங்கள் இருப்பது அடையாளம் காணப்பட்டது, புத்த விகாரைகளில் காணப்படும் சந்திர வட்டக்கல் அங்கு இருந்ததை அடையாளம்கண்டு கொண்ட பௌத்த துறவி ஒருவர் அதனை அரசின் பார்வைக்கு கொண்டு சென்றதுடன், அதனை ஆராய்வதற்கான கெசட் ஒன்றையும் 1932ம் வெளியிட்டு இருந்தார்கள்.

அதனை ஆராய்வதற்கான முன்னேற்பாடுகள் எதுவும் எடுக்கப்படாமல் அப்படியே இருந்து வந்தது. 1980களில் அந்த பிரதேசத்தில் விகாரை இருந்ததாக கூறி ஒரு பௌத்த துறவி அங்கு தன்னுடைய ஆன்மீக பணிகளை முன்னெடுத்ததுடன் விகாரை ஒன்றை அமைப்பதற்கும் ஆரம்பித்தார். விகாரை அமைப்பதற்கு தமிழ் அரசியல் தரப்பினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட அதனை அவர் கைவிட்டார். பின்னர் இன ரீதியிலான ஆயுத யுத்தம் மேலோங்க அந்த பிரதேசத்தை விட்டு அந்த துறவி வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். அதுமட்டுமின்றி தொல்பொருள் சின்னங்கள் அழிப்படுகிறது என்பதால் அங்கு செல்வதற்கு 1982ம் ஆண்டு அரசாங்கம் தடை விதித்தது.

அதன் பின்னர் சுமார் 33வருடங்கள் யாரும் அங்கு செல்லவில்லை,  பூஜைகளும் நடைபெறவும் இல்லை. 2015ம் ஆண்டு மீண்டும் அப் பிரதேச அரசியல் தலைவர்கள், விசேஷ தினங்களுக்கு அப் பிரதேசத்திற்கு சென்று அங்கு வழிபாடுகள் நடத்தி வந்தனர். வைரவர் ஆலயம் என்றதும் அங்கு பெரிய கோவில் ஒன்று இருப்பதாக நினைத்துக்கொள்வது இந்த முரண்பாடுகளுக்கு ஒரு காரணமாகிறது.  ஆனால் அங்கு உள்ள கோவில் குறித்து இலங்கை தினகரன் வெளியிட்டுள்ள கட்டுரையை படித்தால் அங்குள்ள கோவில் அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.

2015ம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து 80 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்தார்கள். அந்த அரசு 2016ம் ஆண்டு மீண்டும் இந்த பிரதேசத்தை தொல்பொருள் துறைக்கு சொந்தமான பிரதேசம் என்று கெசட் செய்ததுடன் அந்த பிரதேசத்தை தொல்பொருள் துறையின் கீழ் கொண்டு வந்தது. 2016இல் இருந்து 2021வரை எந்த ஒரு  எதிர்ப்பும் தமிழ் தரப்பு மூத்த அரசியல்வாதிகளால் கடுமையாக வைக்கப்படவில்லை. 2016ம் ஆண்டு குருந்தூர் மலை பிரதேசத்தை தொல்பொருள் துறைக்கு கீழ் கொண்டுவந்த சஜித் பிரேமதாச என்ற அரசியல் தலைவர்களுக்கே தமிழ் மக்களின் 89விகித வாக்கு 2019ம் ஆண்டு விழுந்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2016-2018 வர தொல்பொருள் துறை அதிகாரிகள் அங்கு செல்லும்போதெல்லாம் அந்த பிரதேச மக்கள் எதிர்ப்பு காட்டி வந்தார்கள். ஆனால் அது தேசிய பிரச்சனையாக மாறவில்லை. அது மட்டும் இன்று அவ் அரசாங்கம் முல்லைத்தீவு எனும் மாவட்டத்தில் இவ்வாறாக 31 இடங்களை அடையாளப்படுத்தி கைவசப்படுத்தியிருந்தது. கீழ்காணும் லிங்கில் அந்த அமைச்சக ஆண்டறிக்கை இருக்கின்றது, மேலுள்ள தகவல்கலை 82ம் பக்கத்தில் பார்த்து உறுதி படுத்திக்கொள்ள முடியும்.

2018ம் ஆண்டு அங்கு விகாரை அமைக்கப்படும் பொழுது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் ஆனாலும் அது அரசியலாக்கப்படாததால் பெரிய அளவில் தென்படவில்லை. அங்கு விகாரை கட்ட போகிறார்கள் அதை தடுக்க மக்கள் அழைப்பை விடுத்த ஒரு இளைஞன் மீது வழக்கு பதிவொன்றை அன்றைய ஆளும் அரசின் அம்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தொடுத்திருந்தார். இன்று எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ் தரப்பு அரசியல் தலைவர்கள் அன்று ஆளும் தரப்பில் அங்கம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

ஊர் மக்கள் மற்றும் உள்ளூர் அரசியல் தலைவர்கள் இணைந்து ஒரு வழங்கு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த வழக்கில், இந்த பிரதேசம் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது அங்கு புதிய கட்டிடங்கள் கட்ட யாருக்கும் அனுமதி இல்லை என்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தொல்பொருள் திணைக்களத்திற்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டதுடன் ஆராய்ச்சிகளை முன்னெடுக்கும் பொழுது யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் கிராமத்தின் அனுபவம் வாய்ந்த நபர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது .

கொரோனா லாக் டவுன் காலம் முடிவடைந்து மீண்டும் அரசு துறைகள் இயங்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தொல்பொருள் துறை நாடு முழுவதும் ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது. முல்லைத்தீவில் குறித்த பிரதேசத்தையும் ஆராய நடவடிக்கைகளை முன்னெடுத்தது. பௌத்த சம்பிரதாயப்படி பூஜையினை செய்து அவர்களுடைய பணியை தொடக்கி வைக்க அதற்க்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் வருகை தந்தார்.

கோவில் இருக்கும் பகுதி மலை உச்சியாகும், கீழ் பகுதியில் ஒரு தற்காலிக புத்தர் சிலையை வைத்து பூஜை செய்து பௌத்த சாம்பரதாயப்படி ஆராய்ச்சியை  அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார் அமைச்சர். புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டதால் அது என்னவென்று புரிந்துகொள்ளாமல் சமூக ஊடகங்களில் விகாரை அமைக்கப்பட போகிறது என்றும், புத்தர் சிலை நிறுவப்பட்டதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டது. அன்று அங்கு அமைச்சர் வருகை தந்து அதற்கான பூஜைமட்டுமே இடம்பெற்றது, அமைச்சர் வருவதால் எப்பொழுதும் போல இராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது, இன பிரிவினை  மற்றும் அரசியல் கலப்பதனால் போராட்டம் வரை செல்லும் என்ற எதிர்பார்ப்பினால் இராணுவ பாதுகாப்பு அதிகளவாக வழங்கப்பட்டது. பௌத்த சம்பிரதாய பூஜைகள் முடிவடைந்ததும் அங்கு கொண்டுவரப்பட்ட புத்தர் சிலையும் கொண்டு செல்லப்பட்டுவிட்டது.

அதிகாரப்பூர்வமாக  ஆரம்பிக்கப்பட்டதே தவிர களப்பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை, அதற்கான குழுக்கள் கூட இன்றளவிலும் நிறுவப்படவில்லை இதுவே அங்கு நடந்தவை.

தமிழ் அரசியல் தரப்பினருக்கு இதனுள் பெரிய அரசியல் லாபம் இருப்பதால் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றது போல இந்த விஷயத்தை கையிலெடுத்துள்ளனர். 2016ம் ஆண்டு அந்த பிரதேசத்தை கையகப்படுத்தும் பொழுது அதனை தடுக்கவில்லை. 2018ம் ஆண்டு எந்த ஒரு ஆராய்ச்சியும் செய்து உறுதி செய்யாமலையே விகாரை அமைக்க முற்படும் பொழுது கூட மக்கள் தான் தடுத்தனர் தவிர அரசியல் கட்சிகள் முன்னின்று தடுக்கவில்லை. ஆனால் இன்று, அங்கு ஆராய்ட்சியை முன்னெடுக்கும் பொழுதுமட்டும் அனைத்து அரசியல் தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றால் இதற்க்கு பின்னால் அரசியல் இலாபம் இருக்கிறது என்பதை இலகுவாக உணர்ந்துகொள்ள முடியும்..

தமிழ் சிங்கள இன மோதல் அமைதியாகியுள்ள இந்த காலத்தில், மற்றைய இனங்களின் உண்மை முகம் வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளமை சிங்கள மக்கள் மத்தியில் உணர முடிகிறது.

 முஸ்லீம் மற்றும் மதமாற்று கிருஸ்தவ மிஷனெரிகளால் நாம் அழித்துக்கொண்டு இருக்கிறோம் என்பதை பௌத்த சமூகம் உணர்ந்துகொண்டுள்ள இந்த நிலையில், மீண்டும் தமிழர் பக்கம் சிங்கள மக்களை திசை திருப்பவேண்டிய அவசியம்  மதமாற்றம் செய்யும் நோக்கத்துடன் இருப்பவர்களுக்கு  இங்கு ஏற்பட்டுள்ளது.

அனுமதியை வழங்கும் பொழுது தமிழ் சமூகத்தை அமைதியாக வைத்திருந்து வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கும் பொழுது அதனை பூதகரமாக்கி சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களை எதிரிகளாக சித்தரிக்க முயல்வது அப்பட்டமாக புரிகிறது. 2016இல் இருந்து 2020வரை தாரைவார்த்த பொழுது அமைதியாக இருந்துவிட்டு இன்று அதனை அரசியலாக்குகிறார்கள் என்றால் அதன் நோக்கம் என்ன, பின்னால் இருக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரல் என்ன என்பதை இலகுவாக உணர்ந்துகொள்ள முடியும்.

150,000 தமிழர்களை கொன்றது காங்கிரஸ் என்று கூறிய தமிழ்நாட்டு அரசியல் இன்று ராகுல் காந்தி அவர்களை எவ்வளவு எளிமையானவர், இவரை பிரதமராக அடைய வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறது. இதற்கு பின்னால் இருக்கின்ற சக்திகளை எப்படி தமிழக மக்களால் உணர்ந்துக்கொள்ள முடியுமோ அவ்வாறே இலங்கையில் நடக்கும் விஷயங்களை அறிந்துகொள்ளும் பொழுது அதற்கு பின்னால் இருக்கும் மிஷனெரிகளின் அரசியலையும் உணர்ந்துகொள்ள முடியும்.

விஷ்ணு, விநாயகர், முருகன் இல்லாத விகாரைகளே இலங்கையில் இல்லை, மன்னர்காலம் தொட்டே விகாரை ஒன்று இருந்தால் அந்த இடத்தில் கோவில் ஒன்றும் இருக்கும் அல்லது கோவில் ஒன்று இருந்தால் அங்கு விகாரை அல்லது புத்தர் சந்நிதி கண்டிப்பாக இருக்கும் இதுவே இலங்கையின் வரலாறு. பௌத்தர்களின் மிக முக்கிய நூலான திரிபிடகம் நூல் கூட ஒரு தமிழர் தான் சிங்களத்தில் மொழி பெயர்த்தார்.

குருந்தூர் மலை ஆதிசிவன், மற்றும் அய்யனார் கோவிலை ஒருமுறை பாருங்கள் ஒரு கூரை கூட இல்லை இவ்வளவு தான் அங்கு மக்கள் காட்டிய ஆர்வம். ஆனால் வெளியில் காட்டுவதோ அங்கு பெரிய கோவில் இருந்ததாகவும் அது உடைக்கப்பட்டுவிட்டதாகவும்  பேசப்படுகிறது.

 இந்த நிலையை மாற்றி அங்கு மட்டும் இல்லை தமிழ் சமூகத்திற்குள் மறைந்திருக்கும் உண்மையான அரசியல் நிகழ்ச்சி நிரலை கண்டு அவற்றை களைந்தால் தான் இலங்கையில் உள்ள இந்துக்களை(தமிழர்களை)காப்பாற்ற முடியும்.

.

தமிழர்கள் மீது  உண்மையில் அக்கறை இருக்கும் என்றால் இந்த விஷயங்கள் ஆழமாக அலசி ஆராயப்பட்டு இந்துக்களை அழித்துவரும் விஷயங்களை களைய வேண்டும் அதை விடுத்து நாமும் உண்மையான பிரச்னையை விட்டுவிட்டு வேறு பிரச்சனைகளுக்கு பின்னால் ஓடி உண்மையான நாசக்காரர்களுக்கு உறுதுணையாக மாறிவிடக்கூடாது.

மதமாற்ற சக்திகளிடமிருந்து இந்துக்கள் மட்டுமல்ல பௌத்தர்களும் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. சதிகளுக்கு இடங்கொடுக்காமல், இருதரப்பினரும் இணைந்து செயல்படுவது தான் இதற்கு தீர்வாகும்.

கட்டுரைக்கு ஆதார  தரவுகள்:

www.thinakaran.lk/node/3081

www.vvtuk.com/archives/328556

www.parliament.lk/uploads/documents/paperspresented/performance-report-department-of-archaeology-2016-ta.pdf?fbclid=IwAR1Y_eaA9WXDNa-kFUDeOPXhbFO2K7gMCq6cJv6cegNGYAYLh0oH1bRzFEo

www.punithapoomi.com/2018/09/58042

globaltamilnews.net/2018/97873

2 COMMENTS

  1. மன்னார் சிவபூமி வரவேற்பு கோபுரம் உடைத்து தமிழன் தன் ஒற்றுமையை காண்பிக்கும்போது எங்கு போனது இந்த போராட்டம்? தமிழனை அழிப்பது தமிழன் தான்! மூத்த குடி எனும் தமிழனுக்கு ஒரு துளி சொந்த மண் இல்லை! ஏன்? எமக்கு வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை! இந்த மதமாற்ற சக்திகள் மக்களை ஒரு குழப்ப நிலையில் வைத்திருக்க விரும்புவதும் இதற்கு ஒரு காரணம்! மிஷனரிகள் அன்னிய கப்பிரேட் கைகூலிகள்: பணம் பெற்று மூலதனத்தை சுரண்டி அவர்கள் கிறிஸ்தவ நாடுகளுக்கு உதவி செய்வது பல வழிகளில் நடக்கின்றது! முதலில் நாம் ஒன்றுபட வேண்டும்! பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? தமிழ் பெயர்களை தவிர்த்து அன்னிய பெயர்களை சூட்டிகொண்டு தமிழன் தமிழன் என்று சொல்வது சரியா? அன்னிய பெயர், மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்டவர் தமிழன் என்றால் சொல்பவன் பைத்தியம் அல்லது அதை நம்புபவன் பைத்தியம்! நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான். இந்தச் சண்டையை மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம். தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும். தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்…. ஒரு விஷயம் பொதுவாக இருக்கிறது என்றால் அது இந்து சமயம் மட்டும்தான். எனவே தமிழன் இந்துவாக இருந்துவிட்டால், ஒரே மதம் என்ற அடிப்படையில் எல்லைகளை கடந்து ஜாதிகளை அழிக்கும் விழிப்புணர்வுற்று அவன் பயணிப்பான். இது நடந்து விடக்கூடாது. இப்படி நடந்தால் நம் அரசியல் வண்டி ஓடாது என்று புரிந்து கொண்ட சில அந்நிய சக்திகள்தான் தமிழன் இந்து இல்லை என்று பரப்புகிறது. இந்து கலாச்சாரத்தையும் தமிழினத்தையும் பிரிப்பதென்பது கனவிலும் கூட நடக்காத ஒன்று. அந்த தமிழ்விரோத சக்திகள் தங்கள் மனதை தாங்களே திருப்திப்படுத்திக்கொள்ள வேண்டுமானால் தமிழனுக்கு மதம் இல்லை, தமிழன் மதம் சாராதவன் என்று சொல்லி ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் தமிழன் இந்து மதம் சார்ந்தவன்தான் என்பது மறுக்க முடியாதது. வெற்று வார்த்தைகளால் மறைக்க முடியாதது. தமிழன் என்றாலே இந்துதான். தமிழன் இந்துதான். மொழி ஆன்மீக கலாச்சாரம் இவை இரண்டுமே ஒரு இனத்தின் அடையாளம்! இதில் கலாச்சாரம் அழிந்தால் மொழி அழியும்! அதே போல் மொழி அழிந்தால் கலாச்சாரம் அழியும்! நிதர்சனமான உண்மை இது! மொழி ஜாதி இனம் என்று வேற்றுமை பேசி இந்துக்கள்இடையே ஒற்றுமை வந்துவிடக் கூடாது என்பதில் மதமாற்று சக்திகள் குறியாக திட்டமிட்டு செயல்படுகின்றனர். இதை உடைத்து உலகில் உள்ள இந்துக்கள் ஆகிய நாம் மொழி ஜாதி இனம் என வேற்றுமை பாராது ஒன்றினைவோம். வடக்கோ கிழக்கோ மேற்கோ தெர்க்கோ முதலில் எம் கலாச்சாரத்தை காப்போம் இந்த மதம் மாற்றிகளிடமிருந்து!
    ❗❗ மொழி ஆன்மீக கலாச்சாரம் இவை இரண்டுமே ஒரு இனத்தின் அடையாளம்! இதில் கலாச்சாரம் அழிந்தால் மொழி அழியும்! அதே போல் மொழி அழிந்தால் கலாச்சாரம் அழியும்! இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னி உள்ளது உடலும் உயிரும் போன்றது. நிதர்சனமான உண்மை இது! படுத்தறிவு உள்ளவருக்கு இது புரியும்!?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here