மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தாமதம் குறித்து மத்திய அரசு விளக்கம்.!!

அய்ய்ம்ஸ்மதுரை தோப்பூரில் ஆயிரத்து 264 கோடி ரூபாயில் அமையுவுள்ள ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான நிதியை ஜப்பானிய பன்னாட்டு முகமை ஜிக்கா நிறுவனம் கடனாக வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஜிக்காவிடமிருந்து கடன் பெறும் நடவடிக்கைகள் இன்னும் முடியவில்லை என்றும் அதன் காரணமாகவே, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

மேலும் எய்ம்ஸ்க்கான நிலத்தை, மத்திய அரசிடம் மாநில அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமான விவரங்கள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பல்வேறு விபரங்கள் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, ஜிக்காவிடம் கடன் பெறும் ஒப்பந்தம் கையெழுத்தானால் தான் கடன் விபரம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here