மாணவர்களுக்கு சூப்பர் ஸ்டாராக மாறிவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் எஸ்.பி வேலுமணி

தேர்தல் வந்தவுடன் திமுகவினர் நாடகம் ஆட தொடங்கியுள்ளதாகவும் பொய்யான வாக்குறுதிகளை கூறி வாக்குகளை வாங்க நினைக்கிறார்கள் ஆனால் மக்கள் அதை நம்ப மாட்டார்கள் என அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேட்டி

மாணவர்களுக்கு சூப்பர் ஸ்டாராக மாறிவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேட்டி

கோவையில் குனியமுத்தூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி அமைச்சர் எஸ் பி வேலுமணி வழங்கினார். மேலும் கூலித் தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்புகளையும் வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் இராசமணி மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் பங்குபெற்றனர். பள்ளி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மாணவர்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்வர் கொண்டு வந்துள்ளார். மேலும் மாணவர்கள், இளைஞர்களின் சூப்பர் ஸ்டாராக எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாகவும் தெரிவித்தார் மேலும் ஆன்லைன் வகுப்புகளை எளிதில் படிப்பதற்கு தினமும் 2 ஜிபி டேட்டா கலை கொடுக்கவும் அரசாணை வெளியீடு திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

அமைச்சர் எஸ்.பி வேலுமணி அளித்த பேட்டி

அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும் அளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். அவருடைய பணியை மக்கள் வாழ்த்தி வருகிறார்கள் எனவும் தமிழகத்தில் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகைவகையில் பொங்கல் தொகுப்பை முதல்வர் வழங்கி வருகிறார். மேலும் திமுகவை கண்டித்து பொள்ளாச்சியில் நேற்று 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆனால் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுத்து வருபவர் எடப்பாடி பழனிசாமி எனவும் பொள்ளாச்சி சம்பவம் விபத்து போன்று நடந்துள்ளது. அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக தேர்தலுக்காக நாடகமாடி வருகிறார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எந்தவிதமான ஆதாரமின்றி 200 பெண்கள் பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி வருவது கண்டிக்ககூடியது எனவும் தேர்தல் நேரத்தில் எல்லாவிதமான வியூகங்ளை திமுகவினர் நடத்தி வருகின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பர்தினரே இதில் நடவடிக்கை காரணம் பொள்ளாச்சி ஜெயராமன் தான் என்கிறார்கள். ஆனால் திமுக தேர்தலுக்காக பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள். எப்படியாவது மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர நினைப்பவர்கள் திமுகவினர் என்று குற்றம்சாட்டினர். பின்னர்
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து 38 இடங்களை வெற்றி பெற்ற எம்.பிகள் என்ன பன்னிட்டு இருக்கிறார்கள் தெரியவில்லை.

38 எம்.பிகள் எந்த பிரோஜனம் இல்லாமல் இருக்கிறார்கள் எனவும் மக்களை சந்திக்கவே இல்லை என குற்றச்சாட்டு வைத்தார். மேலும் 2006 ஆட்சியில் 2 ஏக்கர் நிலம் தருவதாக திமுக ஆட்சிக்கு வந்தார்கள், ஆனால் கொடுத்தார்களா?? ஆனால் அதிமுக சொல்லாத திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் எனவும் எடப்பாடி பழனிசாமி நல்ல ஆட்சி செய்து வருகிறார் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வருவது உறுதி எனவும் வருகின்ற தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டப்படும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here