மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவது எப்படி? உளவியல் ரீதியான வழிமுறை..!

223
+1

இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு மிகவும் சவாலாக இருப்பது இன்றைய கல்வி முறை மற்றும் மதிப்பெண்களுக்கு பெற்றோர்களால் கொடுக்கக்கூடிய முக்கியத்துவம். இது தவிர நம் குழந்தைகளை மற்ற குழந்தையுடன் ஒப்பீடு செய்து பேசுவது.

பெற்றோர்களில் பெரும்பாலானோர் அவரவர் குழந்தைகள் எல்லா துறையிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

இது போன்ற சில எதிர்பார்ப்புகள் நம் குழந்தைகள் மீது தேவையற்ற சுமைகளை ஏற்றுவதுடன் அவர்கள் மன அழுத்தத்திற்கும் காரணமாகிறது. இதனால் மாணவர்கள் எதன் மீதும் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளி விடுகிறோம்.


எல்லோரும் ஞாபக சக்தி பற்றி பேசும் நேரம் இது ஆனால் பேசுபவர்களிடம் இல்லாத ஒரு விஷயம் இது இ குறிப்பாக மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் அனைத்தும் மறந்து விடும்.

திரையரங்கு சென்று படம் பார்க்கும் போதும் அல்லது மாணவர்கள் கிரிக்கெட் பார்க்கும் பொழுது அந்த அணியில் எத்தனை பேர் உள்ளனர் என்று சொல்ல முடிகிறது மற்றும் படத்தின் முழுக்கதையையும் நம்மால் நினைவுகூர்ந்து சொல்ல முடிகிறது. ஆனால் கையில் பாடப் புத்தகத்தை எடுத்தால் மட்டும் நம் கவனம் திசை திருப்பப்பட்டு வெவ்வேறு வழிகளில் நம் மனம் செயல்படுகிறது. எனவே இது நம் திறமையை பற்றிய கேள்வி அல்ல ஆனால் நாம் அதில் எந்த அளவுக்கு ஈடுபாடு உள்ளது என்பது மட்டுமே கேள்வி.

நாம் ஒரு விஷயம் பலவந்தமாக அல்லது கட்டாயமாக செய்வதன் மூலம் ஒரு முகாமில் இருப்பது போல ஒரு துன்பத்தை அனுபவிக்கிறோம் வாழ்க்கையை ரசிப்பதற்கு பதிலாக வாழ்க்கையே ஒரு போராட்டமாக மாற்றிக் கொள்கிறோம்.

இதுவே நாம் ஒரு கதை புத்தகத்தைப் படித்தாலும் அல்லது வேறு ஏதேனும் நமக்கு பிடித்து படித்தாலும் ஒரு நாளில் நாம் குறைந்தது 50 முதல் 100 பக்கம் வரை படிக்க முடிகிறது. அதுமட்டுமல்ல நாம் படிக்கும் அனைத்துமே எப்பொழுது கேட்டாலும் எவ்வளவு நாட்கள் கழித்து கேட்டாலும் நம் நினைவில் நிற்கிறது. இதையே நாம் தேர்வாக வைத்தால் படிக்கின்ற அனைத்து மாணவர்களும் குறைந்தது 90 மதிப்பெண்களுக்கு மேல் தான் எடுப்பார்கள்இ ஏனென்றால் அவர்கள் கவனம்இ விருப்பம் முழுவதும் அந்த புத்தகத்திலேயே அவர்கள் படிக்கும் விஷயத்திலே ஈடுபட்டுள்ளது. எனவே ஒரு விஷயத்தை செய்யும்போது அதை முழு மனதுடன் செய்யாவிட்டால் அதனால் நமக்கு எந்த பலனும் வரப்போவதில்லை.

ஏனென்றால் நாம் எதையும் அறிந்து கொள்ள படிப்பதில்லை அதில் ஆர்வம் காட்டவில்லை நாம் படிப்பதற்கு காரணமே தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காகவும் வருங்காலத்தில் நம் பொருளாதார நிலைமையை சீர் செய்து கொள்ள ஒரு வேலைக்கு செல்வதற்காக மட்டுமே படிக்கின்ற சூழ்நிலையில் இருக்கின்றோம் ஆனால் நாம் எப்படி ஒரு விறுவிறுப்பான நாவல் படிக்கும் போது எப்படி நம் முழு மனதும் அந்த படிப்புடன் ஒத்துப் போகிறதோ எப்படி அதை நம்மால் நினைவில் வைத்து ஒவ்வொரு வார்த்தையும் நம்மால் எழுத முடியுமோ அதே அளவு ஈடுபாட்டுடன் நாம் ஒரு விஷயத்தை படிக்கும் பொழுது அல்லது அணுகும் பொழுது அது நிச்சயம் நமக்கு நினைவில் இருக்கும். நாம் எதை நேசிக்கிறோமோ அதன் மீது அதிக கவனம் செலுத்த யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

நாம் செய்யும் தவறு என்னவென்றால் எப்பொழுதும் நம் மனம் நம் வருங்காலத்தைஇ பொருளாதார சூழ்நிலையை சுற்றியே நகர்வதால் நாம் விரும்பி செய்யும் விஷயங்களில் கவனம் செல்ல மறுக்கிறது. அதனால் ஒவ்வொரு விஷயத்தையும் நம் கட்டாயத்தின் பெயரில் செய்துகொண்டிருக்கிறோம் அப்படி செய்யும் பொழுது நம் கவனம் சிதறுகிறது. நாம் செய்ய விரும்பும் விஷயங்களை புரிந்து கொள்வதில் நாம் சிரமப்படுவதற்கு இதுவே காரணம். எப்பொழுதும் நாம் செய்யும் முயற்சி மீது நமக்கு முழு அளவு ஈடுபாடு இல்லை என்பதே இதற்கு காரணம்.

இதற்கு மாணவர்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று நாம் செய்யும் விஷயத்தை முழு ஈடுபாட்டுடன் செய்வதே. படிக்கும் பொழுது அதே ஈடுபாட்டுடன் படிப்பது தான் நாம் படிக்கும் விஷயங்களை நினைவில் வைத்து நம் வாழ்க்கைக்கு உறுதுணையாக எடுத்துக் கொள்ள உதவும்.

இதற்கு பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவ முடியும்?

பிள்ளைகள் படிக்க உட்காரும் பொழுது தானும் அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து அவர்கள் படிப்பிற்காக உதவலாம்இ அதே சமயம் நாம் நம்முடைய முக்கியமான விஷயங்கள் ஆன தொலைக்காட்சி அல்லது மொபைல் போன் கையில் எடுத்து ஏதாவது செய்து கொண்டிருப்பது தவிர்ப்பது நலம். இதனால் பிள்ளைகளுக்கும் கவனம் சிதற வாய்ப்பு உண்டு.

எப்பொழுதும் மதிப்பெண்ணில் கவனம் வைக்காதீர்கள் நம் பிள்ளைகள் குறைவான மதிப்பெண் எடுப்பின் அதற்கான காரணத்தை கண்டறிந்து அவர்களுக்கு எப்படி உதவலாம் என்பதை மட்டும் சிந்தித்துப் பார்க்கலாம்இ ஒவ்வொரு குழந்தையும் அவரவர் படிக்கும் வேகம் மாறுபடலாம் இதனால் ஒருவரை வைத்து நாம் நம் பிள்ளையை கணக்கிட வேண்டிய அவசியமில்லை.

நம் பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். அவர்களுக்கு என்ன தேவை என்பதை தெரிந்துகொள்ளுங்கள் அவர்கள் விஷயத்தில் நாமாக சென்று மூக்கை நுழைக்காமல் அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை தெரிந்து அவர்களுக்கு உதவி மட்டும் செய்யலாமே தவிர நாம் எந்த ஒரு விஷயத்தையும் அவருக்கு பதிலாக செய்ய வேண்டாம்இ அப்படி அவர்களுக்கு உதவும் பட்சத்தில் அவர்களின் தன்னம்பிக்கை அதிகமாக வளர்கிறது.

அவர்களின் தோல்வியில் ஒரு தோழனாக இருங்கள். அவர்களுக்கு அறிவுரை செய்வதை அறவே தவிருங்கள் அவர்கள் தோல்வியில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.அவர்கள் படிப்பு சம்பந்தமான விஷயங்களில் நீங்கள் ஒரு ஆலோசகராக இருந்து முடிவு எடுக்க வையுங்கள்.

அவர்கள் செய்யும் நல்ல விஷயங்களுக்கு அவர்களை தட்டிக் கொடுங்கள். அவர்களுக்கு தற்காலிகமான லஞ்சங்களை தவிர்த்திடுங்கள். இதை செய்தால் இதை தருவேன் என்று உற்சாகப்படுத்தலாம்இ ஆனால் அதுவே ஒரு காலத்தில் அவர்கள் படிப்பின் மீது உள்ள ஆர்வத்தை இழக்க காரணமாக இருக்கலாம்.

அவர்கள் படிக்கும் நேரத்தை கொண்டாட்டமாக மாற்றுங்கள் அவர்களுடன் சேர்ந்து படியுங்கள்.

உங்கள் அன்பும் ஆதரவும் நிபந்தனையற்றவை என்பதையும்இ அவர் பள்ளியில் எவ்வாறு செயல்படுகிறார் என்பதோடு பிணைக்கப்படவில்லை என்பதையும் உங்கள் பிள்ளைக்கு தெரியப்படுத்துங்கள். எனவேஇ அரவணைப்புஇ ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் ஊக்கமளிக்கும் சூழலை உருவாக்குங்கள். நாம் அனைவரும் ஒரு வேலையைச் சிறப்பாகப் பாராட்டுகிறோம்இ குழந்தைகள் வேறுபட்டவர்கள் அல்ல. சுய ஊக்கத்தை உருவாக்க நேர்மறையான வலுவூட்டலைப் பயன்படுத்தி உங்கள் குழந்தையின் சாதனைகள் மற்றும் முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்தவும். இந்த அணுகுமுறை அவரது தோல்விகளுக்கு அவரை தண்டிப்பதை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here