“மாதங்களில் நான் மார்கழி” என்று பகவான் கிருஷ்ணன்..!

13
மார்கழி

டிசம்பர் 16

தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதமான மார்கழி, தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாதத்தை தேவர்களுக்கான அதிகாலை நேரமாக புராணங்கள் கூறுவதால், அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடி, வாசலில் வண்ணக் கோலமிட்டு இறைவழிபாடு செய்து வருகின்றனர்.

கன்னிப்பெண்கள் தாங்கள் விரும்பும் கணவனை அடைவதற்கு, இம்மாதம் முழுவதும் பாவை நோன்பு இருப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது…

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாய் என மார்கழியின் பெருமையை விளக்குகிறார் ஆண்டாள். போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய் என்கிறார் திருவெம்பாவையில் மாணிக்கவாசகர்.

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்பதும், இது தேவர்களின் மாதம் என்பதும் கிருஷ்ண பகவான் வாக்கு. விஷ்ணுவிற்குரிய வைகுண்ட ஏகாதசியும், சிவனுக்குரிய திருவாதிரைத் திருநாளும், அனுமன் அவதாரமும், மகாபாரத யுத்தம் நடந்து கீதை பிறந்ததும் இதே மாதத்தில்தான்.

“மாதங்களில் நான் மார்கழி” என்று பகவான் கிருஷ்ணரால் முன்மொழியப்பட்ட இம்மாதத்தில், சுபநிகழ்வுகளை தவிர்த்துவிட்டு, இறைவழிபாட்டுக்கு அதிகநேரம் ஒதுக்குகின்றனர். திருவெம்பாவையும், திருப்பாவையும் பாடினால் வாழ்வில் எல்லா வளமும் செழித்தோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here